என்மீது சங்கரி வைத்துள்ள நம்பிக்கைக்கு நன்றிகள் : முதலமைச்சர் விக்கினேஸ்வரன்....
அனைத்து தமிழ்க் கட்சிகளும் ஒருமித்து நின்று அர்ப்பணிப்புடனும் பற்றுறுதியுடனும் எவருக்கும் விலைபோகாமல் சில்லறை இலாபங்களுக்கு சரிந்துகொடுக்காமல் எமது மக் களுக்கான செயற்றிட்டங்களை முன்னெடுக்க வேண்டும். இதுவே எமது மக்களின் விருப்பமாகும் என்று வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
எனது சட்டக் கல்லூரி நண்பர் ஆனந்தசங்கரி எனது அரசியல் செயற்பாடுகள் குறித்து வெ ளிப்படுத்தியுள்ள கருத்துக்களுக்கும் அவர் என்மீது வைத்துள்ள நம்பிக்கைக்கும் எனது நன்றிகள். இதை மட்டுமே என்னால் தற்போது கூறமுடியும் என்றும் முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வடமாகாண முதலமைச்சர் விரும்பினால் இந்த நிமிடமே தனது கட்சியை ஒப்படைக்க தயார் என்று தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.அனந்தசங்கரி நேற்றுமுன்தினம் கருத்துத் தெரிவித்திருந்தார். இதற்கு பதிலளிக்கும் வகையில் விடுத்துள்ள அறிக்கையிலேயே விக்கினேஸ்வரன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
யுத்தத்தால் பாதிக்கப்பட்டுநாளாந்தம் பெரும் துயரில் வாழும் மக்களுக்குசெய்யவேண்டியபலபணிகள் உள்ளன. இன்று கூட இப்பேர்ப்பட்டமக்கள் உதவிகோரிஎன்னிடம் வந்தார்கள். இன்றுமக்கள் சந்திப்புநாள். நாம் எல்லோரும் ஒன்றுசேர்ந்துஎம் மக்களைவலுவுட்டுவதற்குப் பாடுபடவேண்டியதருணம் இது. இதைவிடுத்துஇ உட்கட்சிமோதல்கள்இகருத்துமுரண்பாடுகளினால் எமதுசெயற்பாடுகள் வேறுவழிகளில் திசைதிருப்பப்படுவதுபோன்றவைதவிர்க்கப்படவேண்டும். நான்இது பற்றிக் கவனமாகவே இருக்கின்றேன். அனைத்துதமிழ்க் கட்சிகளும் ஒருமித்துநின்றுஅர்ப்பணிப்புடனும் பற்றுறுதியுடனும் எவருக்கும் விலைபோகாமல் சில்லறை இலாபங்களுக்குசரிந்துகொடுக்காமல் எமதுமக்களுக்கானசெயற்றிட்டங்களைமுன்னெடுக்கமுன்வரவேண்டும் என்றுவிரும்புகின்றேன். இதுவேமக்களின் விருப்பமுமாகும்.
எனதுசட்டக்கல்லூரி சமகாலநண்பர் ஆனந்தசங்கரிஅவர்கள் எனதுஅரசியல் செயற்பாடுகள் குறித்து வெளிப்படுத்திஉள்ளகருத்துக்களுக்கும் அவர் என் மீதுவைத்துள்ளநம்பிக்கைக்கும் எனதுநன்றிகள். இதைமட்டுமேஎன்னால் தற்போது கூற முடியும்.
என்மீது சங்கரி வைத்துள்ள நம்பிக்கைக்கு நன்றிகள் : முதலமைச்சர் விக்கினேஸ்வரன்....
Reviewed by Author
on
December 03, 2015
Rating:

No comments:
Post a Comment