வவுனியா வைத்தியசாலையில் விபத்து பிரிவு கட்டடம் திறந்து வைப்பு...
வவுனியா வைத்தியசாலையில் விபத்து பிரிவு சிகிச்சைக்கான கட்டடம் ஒன்று இன்று திறந்து வைக்கப்பட்டது.
வவுனியா வைத்தியசாலையில் உள்ள விபத்துக்கள் பிரிவில் இடவசதி போதாமையால் அதனுடன் இணைந்ததாக இப்புதிய கட்டட தொகுதி அமைக்கப்பட்டுள்ளது.
வவுனியா வைத்தியசாலை பணிப்பாளர் கு.அகிலேந்திரன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் வடக்கு சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் நாடாவை வெட்டி திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் வடமாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் சு.வரதீஸ்வரன், வைத்தியர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
வவுனியா வைத்தியசாலையில் விபத்து பிரிவு கட்டடம் திறந்து வைப்பு...
Reviewed by Author
on
December 08, 2015
Rating:
Reviewed by Author
on
December 08, 2015
Rating:


No comments:
Post a Comment