அண்மைய செய்திகள்

recent
-

விம்பம் ஊடாக எம்மை காணவருபவர் உடற்கல்வி உதவிக்கல்விப்பணிப்பாளர் பிரதீபா பிரபா விருது பெற்ற ஆசான் சிறந்த உதைபந்தாட்ட வீரர் சமாதான நீதவான் மன்னார் மாவட்ட பர்னாந்து ஞானராஜ் அவர்களின் அகத்திலிருந்து.................



கலைஞனின் அகம் கணனியில் முகம் இப்பகுதியில் விம்பம் ஊடாக எம்மை காணவருபவர் உடற்கல்வி உதவிக்கல்விப்பணிப்பாளர் பிரதீபா பிரபா விருது பெற்ற ஆசான் சிறந்த உதைபந்தாட்ட வீரர் சமாதான நீதவான் மன்னார் மாவட்ட சாரணிய ஆணையாளர் சமூக சேவகன் என பன்முக ஆளுமை கொண்ட பர்னாந்து ஞானராஜ் அவர்களின் அகத்திலிருந்து......................

தங்களின் இளமைக்காலம் பற்றி?

செழிப்புமிக்க அழகிய கிரமான மாந்தை நாவற்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் ஆரம்பக்கல்வியையும் 09ம் தரத்தில் இருந்து உயர்தரம் வரை புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையில் கல்வி கற்ற காலத்தில் பிரதம மாணவத்தலைவனாகவும் 17 வயது அணி 19 வயது அணி கழகங்களோடு விளையாடுகின்ற அணிகளிலும் நான் முக்கிய வீரராகவும் அணியின் தலைவராகவும் உதைபந்தாட்டத்தில் இருந்துள்ளேன் பாடசாலையை நிறைவு செய்த பிற்பாடு வவுனியா கல்வியற்கல்லூரி அணியிலும் பின்னர் மாவட்ட அணியிலும் தற்போது கிரீன் பீல்ட் அணிக்காகவும் விளையாடி வருகின்றேன்.

உதைபந்தாட்ட வீரனாக வரவேண்டும் என்ற எண்ணம் எவ்வாறு தோன்றியது?

சிறுவயதில் இருந்தே உதைபந்தாட்டத்தில் இயல்பான விருப்பம் எனக்கு ஏனைய விளையாட்டக்களை விட உதைபந்தாட்த்ததை அதிகமாக நேசித்தேன். அதற்கு ஏற்றாப்போல் வாய்ப்பும் சந்தர்ப்பமும் அமைந்ததால் எனக்கு உதைபந்தாட்டத்தில் ஈடுபாடு அதிகமானது என்னை பலருக்கு அறிமுகப்படுத்தியது….


உதைபந்தாட்டத்தில் தாங்கள் பெற்றுக்கொண்ட முதல் பதக்கம்… பெறும் போது ஏற்பட்ட மகிழ்ச்சி பற்றி?

எல்லோருக்கும் முதலாவது விடையம் மகிழ்ச்சியானது தான் அது போல எனக்கும் முதலாவது பதக்கம் மிக்க மகிழ்ச்கியே புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையின் 19 வயது அணி சார்பாக விளையாடியபோது 1990 ஆண்டில் முதல் பதக்கத்தைப்பெற்றுக்கொண்டேன் எனக்கு முதலாவது பதக்கமாகவும் எதிர்பார்க்கவில்லை வியப்பை ஏற்படுத்தியதுடன் உதைபந்தாட்டத்தில் ஆர்வத்தையும் அதிகப்படுத்தியது.

1994ல் வடக்கு கிழக்கு இரண்டு மாகாணங்களும் ஒன்றாக இருந்த போது முதன்முறையாக மன்னார் மாவட்டம் மாகாண மட்டத்தில் 02ம் இடத்தினைப்பெற்றது... இறுதிப்போட்டி பெனால்ட்டி முறையில் திருகோணமலையில் வைத்து 2ம் இடத்தினைப்பெற்று மன்னார் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்ததோடு இது வரலாற்று வெற்றியாகவும் பதியப்பட்டது…



உதைபந்தாட்ட வீரனாக உங்கள் எண்ணம் எவ்வாறு விரிவடைந்தது?


1994ம் ஆண்டு முதன் முதலாக 2ம் இடத்தினைபெற்று மன்னார் மண்ணின் பெருமையை நிலைநாட்டியபோது இலங்கை அணிக்கு விளையாட வேண்டும் என்ற எண்ணம் இருக்கவில்லை காரணம் அந்தளவிற்கு அன்றைய கால சூழ்நிலை இல்லை ஆனால் நான் சிறந்த வீரனாக உருவாகி என்னைப்போல் சிறந்த வீரர்களை உருவாக்கி அவர்களை தேசிய அணியில் இடம் பெறச்செய்ய வேண்டும் என்ற எண்ணம் நீண்ட கனவாகவும் விரிவடைந்தது…
அதன் அடிப்படையில் 1998ம் ஆண்டு புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையின் உடற்கல்வி ஆசிரியராக நியமனம் பெற்றபோது முதல் முறையாக 17 வயது அணியினரை மாகாண மட்டத்திற்கு அழைத்துச்சென்று முதலாவது வெற்றியினை எனது பயிற்சியின் மூலம் பெற்றுக்கொடுத்தேன்.
அதே அணியினரை அதே ஆண்டு தேசிய மட்டத்திற்கு ஆழைத்துச்சென்று அதிக கோல்களைப்பெற்றிருந்தும் தோல்வியோடுதான் திரும்பினோம் ஆனாலும் தேசிய மட்டத்தில் வெல்ல வேண்டும் என்ற வலுவான எண்ணம் உண்டாணது அந்த எண்ணவோட்டத்தில் என்னையும் வளர்த்துக்கொண்டு எனது பயிற்சி முறைகளை மாற்றியமைத்தன் விளைவாக 19 வயது அணியினர் 1999ம் ஆண்டு தேசிய மட்டத்தில் முதன் முறையாக 02ம் இடத்தினைப்பெற்றுக்கொண்டது வரலாற்றுப்பதிவானது
2000 ஆண்டு தேசிய மட்டப்போட்டியில் முதன்முறையாக முதலாம் இடத்தினைப்பிடித்து வரலாற்றில் மன்னார் மாவட்டத்தினை முன்னிலைப்படுத்தியது.

அதன் தொடர்ச்சியாக 2000 முதல் 2013 வரையான காலப்பகுதியில் தொடர்ச்சியாக 23 இடங்களை தேசிய மட்டத்தில் பெற்றிருக்கின்றது அதிலும் 07 தடவை முதலாவது இடத்தினை பெற்றுள்ளது. இது பாடசாலை மட்டத்தில் எந்தவொரு பாடசாலையும் சாதிக்கமுடியாத சாதனையை புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலை நிலைநாட்டுவதற்கு எனது பங்கும் பயிற்சியளிப்பும் கடிண உழைப்பும் கலந்துள்ளது எனும் போது எனக்கு மட்டற்ற மகிழ்ச்சியும் பெரும் கௌரவமுமாய் உள்ளது.



தங்களிடம் பயிற்சி பெற்ற வீரர்கள் தேசிய அணியில் விளையாடுகின்றனரா?


ஆம் நிச்சயமாக என்னால் பயிற்றுவிக்கப்பட்ட வீரர்கள் 07 பேர் தேசிய அணியில் விளையாடுகின்றார்கள் தற்போது 03 வீரர்களும் தேசிய அணியில் விளையாடுகின்றார்கள்


உதைபந்தாட்டம் தொடர்பான உங்கள் சேவை வெளிப்பாடுகள் பற்றி?

என்னை மேம்படுத்திக்கொள்ளும் விதமாக உதைபந்தாட்டம் தொடர்பான பயிற்சிகளை கற்கை நெறிகளை கற்றுக்கொள்வதோடு உதைபந்தாட்ட சம்மேளனம் உலக உதைபந்தாட்ட சம்மேளனம் போன்றவற்றினால் நடாத்தப்படுகின்ற கருத்தமர்வுகள் களப்பயிற்சிகளில் கலந்து கொள்வதோடு ஒரு அங்கீகாரம் பெற்ற உ-தரம் டி-தரம் ய-தரம் போன்ற பயிற்சிகளை நிறைவு செய்த பயிற்சியாளராக உள்ளேன்

அத்தோடு 2004 புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையின் அணிசார்பாக தென்கொரியா சென்றிருந்த அணியின் தேசிய பயிற்சியாளராக சென்றிருந்தேன்.
2013ம் ஆண்டு ஈரான் சென்ற 19 வயது இலங்கை தேசிய அணியின் நான் தலமைப்பயிற்சிவிப்பாளராக கடமையாற்றியுள்ளேன்…
சிங்கப்பூர் மலேசியா இந்தியா ஈரான் தென்கொரியா தாய்வான் போன்ற நாடுகளுக்கு சென்று அங்குள்ள உதைபந்தாட்ட நுணுக்கங்களை பயிற்சிகளை தொழில்நுட்பங்களை பெற்றுக்கொண்டும் கற்றுக்கொண்டும் என்னை தகுந்ததொரு பயிற்சியாளராக வளர்த்துக்கொள்வதோடு எனது நாட்டிற்கும் எனது மாவட்டத்திற்கும் எனது வீரர்களுக்கும் சிறந்ததொரு பயிற்றுவிப்பாளனாக சேவையாற்றி வருகின்றேன்.

உதைபந்தாட்டத்தில் பயிற்சியாளர்களுக்குhன தரங்களாக ய-டி-உ உள்ளது இத்தரங்களை பெற்றவர்கள் மன்னாரில் எத்தனை பேர் உள்ளார்கள்…
ஆசியா உதைபந்தாட்ட சம்மேளனத்தில் இருந்து உ தரம் பெற்றுள்ளவர்கள் மன்னார் மாவட்டத்தில் இருந்து பயிற்றுவித்த பயிற்சிவிப்பாளராக தெரிவானது நான்தான் முதலாவது எனலாம் உ தரத்தில் மூவரும் டி தரத்தில் நானும் அஸ்மி என்பவரும் பூர்த்தி செய்தவர்களாகவுள்ளதோடு ய தரப்பயிற்சியினையும் நிறைவு செய்து உத்தியோகபூர்வ முடிவுக்காக காத்திருக்கிறோம்…



உதைபந்தாட்டம் இலங்கையிலும் இலங்கைக்கு வெளியிலும் எவ்வாறு உள்ளது?

இலங்கை உதைபந்தாட்டத்தினைப் பொருத்த மட்டில் மிகவும் பின்தங்கிய நிலையில் தான் இன்னும் உள்ளது. ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் ஈரான் சென்றிருந்தவேளையில் அவ்வணியின் பயிற்சியாளரோடு பேசுகையில் அவர்களுடைய பயிற்றுவித்தல் திட்டமிடல் வித்தியாசமானது 12 வயது தேசிய அணியினை எடுத்தால் அவர்கள் அதே அணியினை தொடர்ச்சியாக முதலாவது தேசிய அணியாக கொண்டு வரும் மட்டும் தொடர்ச்சியாக 15 வருடங்களுக்கு அதே அணியை தொடர் அணியாக குழுவாக கொண்டு பயிற்சிகளை வழங்குகின்றார்கள் அது போலவே தென்கொரியாவிலும் காணப்படுகின்றது. ஆனால் இலங்கையைப்பொறுத்தமடடில் 12 வயது தேசிய அணிவிளையாடினால் அவர்களை அனுப்பி விட்டு புதிதாக அடுத்த வருடம் இன்னொரு அணியென மாற்றிக்கொண்டு இருக்கின்றார்கள் இவ்வாறான நிலையிலும் ஒரு சீராண திட்டமிடலும் இல்லை நிர்வாககட்டமைப்பும் இல்லை இதனால் தான் இலங்கை உதைபந்தாட்டம் பின்தங்கிய நிலையில் உள்ளது.


இலங்கையின் அடையாளமாக கிரிக்கெட்விளையாட்டுத்தான் உள்ளது ஏன் உதைபந்தாட்டம் முன்னிலையில் இல்லை என்ன காரணம்?

முதலாவது காரணம் ஊடகங்கள் தான் கிரிக்கெட்விளையாட்டைப்பொருத்தமட்டில் அது சிறிய தொடராக இருந்தாலும் பெரிய தேசிய தொடராக இருந்தாலும் 1996 ம் ஆண்டு இலங்கை கிண்ணம் வென்ற பின்னர் கிரிக்கெட் மிகவும் பிரபலமானதுடன் சிறப்புமடைந்தது. அதற்கு ஏற்றாப்போல் தொலைக்காட்சி தொடர் ஒவ்வொன்றிலும் ஒளிபரப்பாகும் விளையாட்டு கிரிக்கெட்தான் பார்ப்பதற்கு அதிகமான சந்தர்ப்பங்கள் உள்ளதால் பெரும் வரவேற்பைப்பெற்று வருகின்றது ரசிகர்களின் ஆதரவும் அதிகமாகவுள்ளது உதைபந்தாட்டத்தினைப்பொறுத்தமட்டில் ஆசியாவல் ரசிகர்களின் ஆதரவு குறைவுதான் ….


உங்களுடைய காலத்திலும் சரி தற்போதைய காலத்திலும் சரி உதைபந்தாட்ட வீரர்களுக்கிடையிலான வேறுபாடு எவ்வாறு உள்ளது?


எங்களுடைய காலத்தில் உதைபந்தாட்டம் கடும் பயிற்சியிலே தங்கியிருந்தது வேறு எந்த வளங்களும் இல்லை ஆனால் தற்போதுள்ள வீரர்களுக்கான பயிற்சி முறைகள் தொழில்நுட்பமுறைகள் பல பயன்படுத்தப்படுகின்றது இருப்பினும் எமது மன்னார் மாவட்டத்தினைப்பொறுத்தமட்டில் இன்னும் வளங்கள் பற்றாக்குறையாகத்தான் உள்ளது kick and throw காணப்படுகின்றது ஏனைய நாடுகளில் ளமடைட பசழிந திறன் ரீதியான நுட்பங்கள் பயன்படுத்துகிறார்கள் இப்படியான பல விடையங்கள் எம்மிடம் இன்னும் இல்லாமையும், துற்போதுள்ள வீரர்களின் ஒழுக்கச் செயற்பாடுகள் மிகவும் போசமானதாக உள்ளது தற்போதைய நவீனம் உதவிபுரிகின்றது.

தற்போது உதைபந்தாட்ட துறையில் தேசிய மட்டம் சர்வதேசமட்டம் என்று சென்றாலும் நாங்கள் விளையாடுகின்ற காலத்தில் skill foot ball உதைபந்தாட்டத்தில் ஆர்வமும் தற்போதுள்ள வீரர்களிடம் மிகவும் குறைவாகத்தான் உள்ளது வில்லங்கத்திற்கும் வேண்டாவெறுப்பாகவும் வில்லங்கத்திற்காகவும் தான் கலந்து கொள்கின்றார்கள் அவதானிக்ககூடியதாக உள்ளது.


உதைபந்தாட்ட வீரனுக்கு இருக்க வேண்டிய தகுதிகள் எவையெனக் கருதுகிறீர்கள்?


முதலாவது அந்த விளையாட்டின் அதித ஆர்வம். அதற்கேற்ற உடற்தகுதியுடன் உதைபந்தாட்ட விளையாட்டுத்தொடர்பான அத்தனை விடையங்களையும் கற்றும் பெற்றும் கொள்ளவேண்டும் ஒவ்வொரு வீரரும் தனக்கான தனித்து ஆளுமைகளை வெளிக்காட்டவேண்டும் எல்லாவற்றினையும் விட மேலாக ஓழுக்கமுள்ள வீரனாக வாழ்விலும் சரி விளையாட்டிலும் சரி திகழவேண்டும்.
கடும் பயிற்சி இடைவிடா முயற்சி எப்போதுமே சேர்ந்து இருக்க வேண்டும்.



25வது மாவட்டமாக மன்னார் மாவட்டம் இருக்கின்ற போதும் மன்னார் மாவட்டத்தின் அடையாளமாக உதைபந்தாட்டம் உள்ளது பற்றி?


எமது மன்னார் மாவட்டம் மாவட்டங்களோடும் சரி ஏனைய வீரர்களோடும் சரி ஒப்பிடுகையில் தனித்துவமானது உதைபந்தாட்டம் மன்னார் மாவட்டத்தின் சிறப்பானதொரு கொடை என நான் கருதுகின்றேன். பின்தங்கிய மாவட்டமாக இருந்தாலும் வீரர்கள் தமது திறமையினை வெளிக்கொணரும் தன்மையும் அவர்களுக்கான வளங்கள் இல்லாமையும் அதிகமான காலப்பகுதிகள் யுத்த சூழ்நிலையில் கழிந்ததாலும் எமது வீரர்களில் திறமையான பல வெற்றிச்சாதனைகள் வெளியுலகுக்கு தெரியாமலேயே போய்விட்டதுதான் உண்மை இருந்தும் இருப்பதை வைத்துக்கொண்டு இன்று மன்னார் மாவட்டத்தினை உதைபந்தாட்டத்தின் மூலம் அடையாளப்படுதியுள்ளார்கள் என்றால் எமது வீரர்களை நாம் பாராட்டத்தானே வேண்டும் ஊக்கமளிக்கவேண்டும்.


உதைபந்தாட்ட வீரனாக உடற்கல்விப்பணிப்பாளனாக இதை நான் சாதித்து விட்டேன் இல்லை இன்னும் சாதிக்கவில்லை என்னும் ஏக்கம் உண்டா?

என்னை பொருத்தவரையில் நான் அளவிற்கு அதிகமாக சாதித்து விட்டேன் என்று தான நினைக்கின்றேன் என்னால் ஒரு பாடசாலை தேசிய ரீதியில் 23 தடவைகள் இடங்களை பெற்றுள்ளதோடு அதுவும் 07 தடவைகள் தேசிய ரீதியில் முதலாம் இடங்களைப்பெற்று சாதனை படைத்துள்ளதும்
என்னால் பயிற்றுவிக்கப்பட் 07 மாணவர்கள் தேசிய அணியில் விளையாடுகிறார்கள் என்பது எவ்வளவு பெரிய விடையம்
இலங்கை தலைமைப்பயிற்சிவிப்பாளராக பல முறை வெளிநாடுகள் சென்று வந்திருக்கின்றேன் இப்படியான நிகழ்வுகள் மூலம் நான் திருப்தியடைகின்றேன் என்னால் எனது மாவட்டத்திற்கும் எனது வீரர்களுக்கும் பெருமை சேர்த்துள்ளேன்…



உதைபந்தாட்டத்தில் தங்களால் எதுவும் புதிய உத்திகள் விதிமுறைகள் நுட்பங்கள் நடைமுறைப்படுத்தியுள்ளீர்களா?


ஆம் நிச்சையமாக நான் பல முறையான பயிற்சிகளை செயல்முறைகளை படக்காட்சி மூலம் வெளிப்படுத்தியும் விளக்கப்பயிற்சிகள் களப்பயிற்சிகள் பயிற்சி முகாம்கள் என்பவற்றினை வழங்கியுள்ளேன் வழங்கியும் வருகின்றேன்


உங்களை மிகவும் கவர்ந்த உதைபந்தாட்ட வீரர் யார்?


உள்நாட்டில் என்னோடு மாவட்டத்திற்காக விளையாடிய பங்ளி அவர்களும் லோகேஷ் அவர்களையும் குறிப்பிடுவேன் எனது காலத்திற்கு பிறகு விளையாடி வருகின்ற டிக்கோனி அவர்களை குறிப்பிட்டாக வேண்டும். ஏனைய நாடுகளை பொறுத்த வரையில் முதலில் பிரபலமான வீரர் மரடோணவையும் தற்போது கலக்கிகொண்டு இருக்கின்ற மெர்ஸ்ஸி என்ற வீரரும் என்னைக் கவர்ந்தவராவர்…


மன்னார் மாவட்ட உடற்கல்விப்பணிப்பாளர் என்ற வகையில் புதிய செயற்பாடுகள் ஏதும் செய்துள்ளீர்களா?திட்டம் உள்ளதா?

-
ஆம் நிச்சயமாக வடக்கு மாகாண விளையாட்டுப்போட்டியில் வழமையாக 3ம்-4ம் இடத்தினைப்;பெற்று வந்தது இம்முறை வடமாகாணப்போட்டிக்கு முன்பாக இலங்கையில் உள்ள தேசிய மெய்வல்லுனர் பயிற்றுனர்களை கொணர்ந்து அவர்களின் மூலம் ஐந்து நாட்கள் பாரிய பயிற்சி முகாம் ஒன்றை நடாத்தி அதன் ஊடாக இம்முறை மன்னார் வலையமானது வடமாகாணத்தில் 12 வலையத்திலும் 2ம் இடத்தினைப்பெற்று வரலாற்று சாதனையை நிலைநாட்டி இருப்பதுதான் நான் எடுத்த முயற்சியின் வெற்றியாகும்.
பாடசாலை கழகங்களாக செயற்பட முடியாது ஆனால் இருந்தும் புனித சவேரியார் ஆண்கள் கல்லூரி கழகங்களோடு சேர்ந்து விளையாடுகின்ற அளவிற்கு அங்கத்துவம் பெற்ற கழகமாக இயங்குகின்றது எனது காலத்தில் தான்



உங்களிற்கு பிறகு மன்னாரில் உதைபந்தாட்ட அணியினை கொண்டு நடத்தக்கூடிய பயிற்சிவிப்பாளர்கள் என யாரைக்கருதுவீர்கள்?

பலர் உள்ளனர் பெயர்குறிப்பிட்டு சொல்ல விரும்பவில்லை பலர் முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள் அவர்களின் செயற்பாடுகள் பயிற்றுவித்தலின் விளைவுகளையும் செயல்திறன்களே எனிவருங்காலத்தில் அவர்களது பெயர்களை அவர்களது ஆளுமையே வெளிக்கொணரும் என நம்புகின்றேன்.
மன்னாரிற்கு வருகை தந்திருந்த மாண்புமிகு முதலமைச்சர் விளையாட்டு என்றால் மன்னார் மாவட்டம் பேசப்படுகின்றது.


 வடக்கு மாகாணத்திலே மன்னாரில் தான் பெரிய உள்ளக விளையாட்டு அரங்கு உள்ளது என்று குறிப்பிட்டார் இவ்வரங்கின் செயற்பாடுகள் பற்றி?

இன்னும் இவ்வரங்கிற்குள் பயிற்சிகள் என்று ஆரம்பிக்கப்படவில்லை இதற்கு என நிபுணத்துவம் வாய்ந்த பயிற்றுவிப்பாளர்களை நியமித்து திறம்படச்செய்ய வேண்டும் தற்போது பல வீரர்கள் தங்களால் இயன்றளவு நேரத்தினை தாங்களாகவே பயிற்சியில் செலவிடுகின்றார்கள். இதற்கு நிபுணத்துவம் வாய்ந்தவர்களை விரைவாக நியமித்தால் சிறந்த பலனைப்பெறலாம் இல்லையானால் எந்தவிதப்பலனும் இல்லை என நான் கருதுகிறேன்…



மன்னார் மாவட்டத்தில் விளையாட்டுத்துறையில் அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதற்கு உடற்கல்விப்பணிப்பாளர் என்ற வகையில் செயற்பாடுகள் பற்றி?

வுpளையாட்டு துறையை விழவிடாது தொடர்ந்தும் பல வெற்றிச்சாதனைகளை பெறும் நோக்கில் தற்போது கல்வித்திணைக்களத்தின் ஊடாக பாடசாலைகள் மட்டத்தில் சில ஆக்கபூர்வமான செயற்பாடுகளை அதிபர்கள் ஊடாக முன்னெடுத்துக்கொண்டிருக்கின்றோம். அதேவேளை கழகங்களுக்கிடையில் உதைபந்தாட்டம் வளர வேண்டும் என்றும் மன்னார் உதைபந்தாட்ட லீக்கின் ஊடாகவும் பல செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றோம்.


உதைபந்தாட்டம் தவிர்ந்து வேறு துறைகளில் உங்கள் ஆர்வம் இருக்கின்றதா?


ஊதைபந்தாட்டம் தவிர வேறு எதிலும் எனக்கு ஆர்வம் இல்லை எல்லாமே உதைபந்தாட்டம் தான்



உங்களது வெற்றிக்கெல்லாம் துணைபுரிந்தவர்கள் என்றால் யாரைக்கூறுவீர்கள்?


பலர் உள்ளனர் முதலில் எனது தந்தை பர்னாந்து தாயார் ஜெயசோதி பெற்றோருக்கும் எல்லாம் வல்ல இறைவனுக்கும் அத்தோடு எனது வெற்றியின் பிரதானமானவரும் பிதாமகனும் அருட்சகோதரர் ஸ்ரணிஸ்லஸ் அதிபர் முன்னாள் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலை தற்போது பேசாலை பத்திமா பாடசாலையின் அதிபராக கடமையாற்றுகின்றார் இவர்தான் எனது சிறந்த பயிற்றுவிப்பாளரும் நெறிப்படுத்தல் தட்டிக்கொடுத்தல் வழிகாட்டுதல் எல்லாவழிகளிலும் உறுதுணையாக இருந்தவர் என்வாழ்நாளில் என்றும் நினைவில் இருப்பவர் என்பேன்…


மன்னார் மாவட்டத்தின் உதைபந்தாட்ட வீரனாக உடற்கல்விப்பணிப்பாளனாக உதைபந்தாட்ட வீரர்களுக்கான தங்களது அறிவுரை என்ன?


மன்னார் மாவட்டத்தின் சொத்து எனக்கருதப்படும் உதைபந்தாட்டத்தினை தலையாலும் தன்னம்பிக்கையோடும் விளையாட வேண்டும் தவிர தலைக்கனத்தோடு மமதையோடு விளையாடக்கூடாது. கிடைக்கப்பெற்ற வெற்றியை தக்கவைத்துக்கொள்ள வேண்டும் வெற்றி கிடைக்க முயற்சி செய்ய வேண்டும். வீரர்கள் பண்புள்ளவர்களாகவும் தங்களோடு விளையாடுகின்றவர்களும் வீரர்கள் தான் என்ற எண்ணத்தினை மறந்து விடக்கூடாது எச்சந்தர்ப்பத்திலும் உண்மை நிலைநாட்ட வேண்டு;ம் அதே போல் பயிற்றுவிப்பாளர்கள் மைதானத்தில் இறங்கி சிறந்த முறையில் பயிற்சியினை வழங்க வேண்டும் அப்போதுதான் நல்ல வீரர்களை உருவாக்கலாம் திறமை இருக்கின்ற வீரர்களை அடையாளம் கண்டு தட்டிக்கொடுத்து சந்தர்ப்பங்களை வழங்கி உற்சாகப்படுத்தி உருவாக்க வேண்டிய கடமை எம் ஒவ்வொருவருக்கும் இருக்கின்றது. இவ்வாறு செயற்படுவோமானால் தேசியமட்டத்தில் இன்னும் பிரகாசிக்கலாம் என ஆசிக்கின்றேன்.


தாங்கள் உதைபந்தாட்டத்தில் கடந்து வந்த பாதையும் அதற்கான சான்றாக?


Football
    General Secretary - Mannar District Football League
    Council Member - Football Federation of Sri Lanka
    Playing        -    Played for St Xavier’s School  & SC – 1989-1993
- Played for Green Field SC - 1993-2000
- Played for Mannar League selected team -1993 -1997



         Coaching Licence ‘C’ Licence – 2001
 ‘B’ Licence – 2005
 ‘A’ Licence -2008 – Asian Football Confederation
FIFA Solidarity – 2003

Coaching Performances     – St Xavier’s Boys’ College under 19 became   National Champion in 2000,2002, 2003,2006 , 2011,2012,2013  by Ministry of  Education and Un 13 became champion in 2006 by Football Federation of Sri Lanka.

             National Team Head Coach – Under 19 –toured to
Iran – 2012 , South Korea – 2004
Refereeing - Class 111 Referee  - 2001
            Class 11 Referee- 2009

Published Books Football Rules – 1999
How to develop Football in Sri Lanka – 2005
FIFA World Cup  - 2006
Football Training Skills - 2007

International Seminars Attended – Football Administration – Malaysia - 2013
       Football Administration -FIFA– Colombo- 2013

Licenced Coaching  Courses- IAAF  Level – I  - 2003
Advanced Course – India – 2007
Olympic Solidarity – 2001

Performances - National level – 2nd place – Un 21 Javeline – 2001
Refereeing - Level iv – SLATO - 2001
Officiated - Asian Athletic Championship – 2002
- Asian Youth Athletic Championship – 2012

தங்களின் சாதனைக்கும் சேவைக்கும் கிடைத்த விருதுகள் பட்டங்கள் பற்றி--- 

-Xavierites Award – 2010 – St Xavier’s Boys’ College
Best Coach – 2013 - Northern Provincial Sports Dept.
Pratheepa Prabha – 2013 – Ministry of Education
Best Teacher – 2013 – Zonal Education Office
De La Salle Award - 2015 – De L a Salle Brothers.

தாங்கள் ஈடுபட்டு வரும் சேவைகள் பற்றி-----

Justice of the Peace
Committee member – St Xavier’s Boys’ College- OBA -
SDC Member – St Xavier’s Girls’ College
District Commissioner – Sri Lanka Scout Association
Council member – Football Federation of Sri Lanka.
Sri Lanka Education Administration Service ( SLEAS)
Assistant Director of Education (Zonal Education Office , Mannar)

மன்னார் மக்களின் பிரதிநிதியாக செயற்படுகின்ற நியூ மன்னார் இணையம் பற்றி---


மன்னார் இணையம் பற்றி இந்த இடத்தில் நான் குறிப்பிட்டாக வேண்டும் கடப்பாடும் உள்ளது. நீண்ட காலமாக எங்களுடைய இந்த மன்னார் மாவட்டத்தின் விளையாட்டுத்துறை மட்டுமல்லாது ஏனைய ஒவ்வொரு செயற்பாடுகளையும் முதன்மைப்படுத்தி வெளியுலகிற்கு காட்டுவது பாராட்டுக்குரியது. அத்தோடு எமது விளையாட்டுத்துறையின் ஒவ்வொரு வெற்றிச்செயற்பாடுகளுக்கும் சாதனைகளுக்கும் மன்னாரின் பங்களிப்பு மிகமுக்கியமானதாகும். நாங்கள் என்னதான் சாதித்தாலும் அவை ஒரு ஊடகத்தின் ஊடாக வெளிக்கொணரப்படாவிட்டால் அந்த வெற்றிகளோ… வீரர்களோ… பயிற்றுவிப்பாளர்களோ… யார் என்று அடையாளம் காணப்படாமலே போய்விடுவார்கள் அவ்வாறான சந்தர்ப்பங்கள் தவிர்த்து. மன்னாரில் நடக்கின்ற ஒவ்வொரு சம்பவங்களையும் நிகழ்வுகளையும் உடனுக்குடன் மன்னார் இணையமானது உலகளாவியரீதியில் காட்சிப்படுத்திக்கொண்டும் மன்னாரின் பெருமையை வெளிக்கொணர்கின்றது.

நான் நீண்ட காலமாக மன்னார் இணையத்தின் சேவையை அறிந்திருக்கின்றேன் இதன் தேவையும் மன்னார் மண்ணிற்கு மிகவும் அவசியமானது மன்னாரின் சேவையை மன்னார் மாவட்டத்தின் உதைபந்தாட்ட ரசிகர்கள் வீரர்கள் மக்கள் சார்பிலும் கல்வித்திணைக்களம் உதைபந்தாட்ட சம்மேளனத்தின் சார்பிலும் பாராட்டி வாழ்த்துகின்றேன். இவர்களின் உன்னத சேவை இன்னும் மன்னாருக்கும் மன்னார் மக்களுக்கும் தொடர்ந்தும் கிடைக்கவேண்டும் என இறைவனை பிராத்திக்கின்றேன் ஆசி கூறி நிற்கின்றேன் ஆவலுடன்……

மன்னார் இணையத்திற்காக….
செவ்வி கண்டவர்
வை-கஜேந்திரன்







விம்பம் ஊடாக எம்மை காணவருபவர் உடற்கல்வி உதவிக்கல்விப்பணிப்பாளர் பிரதீபா பிரபா விருது பெற்ற ஆசான் சிறந்த உதைபந்தாட்ட வீரர் சமாதான நீதவான் மன்னார் மாவட்ட பர்னாந்து ஞானராஜ் அவர்களின் அகத்திலிருந்து................. Reviewed by NEWMANNAR on December 01, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.