அண்மைய செய்திகள்

recent
-

வெற்றி நிச்சயம் க.பொ.த (ச/த )பரீட்சை எழுதும் மாணவ மாணவிகளே....

 பரீட்சையில் மிகச் சிறந்த அடைவுகளைப் பெற அவாவுடன் இருக்கும் நீங்கள் பரீட்சையில் மிகச் சிறப்பாக சித்தியடைய வேண்டும் என உங்களுக்காகப் பிரார்த்திக்கின்றேன்.
பரீட்சையை வெற்றி கொள்வது என்பது நீங்கள் பரீட்சைக்குத் தயாராகும் முறையிலும் பரீட்சை எழுதும்போது கடைபிடிக்கும் நுட்பங்களிலும் தங்கியுள்ளது.
பரீட்சையை வெற்றி கொள்ள...நீங்கள் எவ்வளவு கற்றுள்ளீர்கள் என்பதைவிட பரீட்சைக்குத் தயாராக உள்ளீர்களா என்பது மிக முக்கியம். உளரீதியாகவும் உடல்ரீதியாகவும் அறிவு ரீதியாகவும் பரீட்சைக்குத் தயாராக இருப்பது பரீட்சையை வெற்றி கொள்ள உதவும்.

 பரீட்சை பற்றிய பயம் (Examophobia)
“நான் பரீட்சையில் சித்தி அடைவேன்” என்ற நம்பிக்கை உளரீதியாக உங்களிடத்தில் வர வேண்டும்.
 உளரீதியாக இத்தகைய தயார்படுத்தல் நீங்கள் நம்பிக்கையுடன் பரீட்சையை எதிர் கொள்வதற்கான நம்பிக்கையைத் தரும்.

 அறிவுரீதியாக தயாராவது என்பது நீங்கள் பரீட்சைக்காக கற்பதைக் குறிக்கும்.
ஆண்டு முழுவதும் உங்கள் அறிவு விருத்தியடைவதற்காகக் கற்றல் பல்தேர்வு வினாக்களில் சரியானதைத் தெரிவு செய்வதற்கும் பரீட்சையின் போது வினவப்படும் வினாக்களில் தெரிந்ததை மட்டுமன்றி தெரியாததையும் தெரிந்த மாதிரி எழுதுவதற்கும் கற்றுக் கொள்ளுங்கள்.
கால வரையறை(Time specific)அனைத்து விடயங்களையும் நீங்கள் அறிந்திருந்தாலும் குறிப்பிட்ட காலத்திற்குள் அவற்றை வெளிப்படுத்தத் தவறுகின்றபோது புள்ளிகளைப் பெறத் தவறி விடுவீர்கள்.
பரீட்சை எழுதும்போது பரீட்சை நுணுக்கங்களைக் கையாளுங்கள்
பரீட்சை நுணுக்கங்களே பரீட்சை வெற்றிக்கான சிறந்த சாதனங்கள். பல்தேர்வு வினாக்களுக்கு விடையளிப்பதில் நீங்கள் குழம்பிக் கொள்ளாமல் ஒன்றுடன் ஒன்று ஒப்பிட்டு நன்றாக ஞாபகத்தில் பதிந்து  கற்றுக்கொள்ளுங்கள்.

கட்டுரை வினாக்களுக்கு விடையளிக்கும்போது குறிப்பிட்ட விடயத்தை நன்றாக விளங்கி உங்கள் மொழிநடையில் விடை எழுதுங்கள். விடைகளை பெரிய பந்திகளாக அமைத்து திருத்துபவரை குழப்பத்திற்கு உள்ளாக்கி விடாதீர்கள். முக்கியமான விடயங்களை தெளிவாக விளங்கும்படி தலைப்பிட்டு பந்தி பிரித்து தெளிவாக எழுதுங்கள். இது விடைத்தாள்களைத் திருத்துபவர் நல்ல மனோநிலையில் உங்களுக்குப் புள்ளிகளை வழங்க உதவும். உங்கள் பரீட்சை விடைத்தாளைத் திருத்துபவர் எரிச்சலடையாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள்.

கலக்கம் தயக்கம் மயக்கம் வேண்டாம்.....
நிதானம் அவதானம் கவனம் வேண்டும்....
மனம் ஒரு நிலையில் இருக்கட்டும்-நளைய
தினம் புதிதாய் மலரட்டும்.....
வெற்றி நிச்சயம்.....
செய்யுங்கள் சத்தியம்......
பரீட்ச்சையில் சித்தியடைய.....
நியூ மன்னார் இனணயமும் மாணவ மாணவிகளை வாழ்த்தி நிற்கின்றது.





வெற்றி நிச்சயம் க.பொ.த (ச/த )பரீட்சை எழுதும் மாணவ மாணவிகளே.... Reviewed by Author on December 08, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.