கிளிநொச்சி சிறுபோக நிறுத்தத்தால் 250 கோடி ரூபா நஷ்டம்....
அடுத்த வருட சிறுபோகத்தை நிறுத்துவதால் கிளிநொச்சி விவசாய சமூகத்திற்கு 250 கோடி நஷ்டம் ஏற்படும் என இரணைமடு விவசாயிகள் சம்மேளன செயலாளர் சிவமோகன் தெரிவித்தார்.
எனினும் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தாம் இதற்கு சம்மதிப்பதாகவும் வாழ்வாதரம் தொடர்பாக மாற்று ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
அடுத்த வருடத்திற்கான சிறுபோக செய்கை நிறுத்துவது தொடர்பான கூட்டம் மாவட்ட செயலக மண்டபத்தில் இன்று மாலை 4 மணியளவில் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே இரணைமடு விவசாயிகள் சம்மேளன செயலாளர் சிவமோகன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் அதிபர் சுந்தரம் அருமைநாயகம் கருத்து தெரிவிக்கையில்,
அடுத்த வருட சிறுபோகத்தை நிறுத்துவதற்கான காரணம் இரணைமடு குளத்தின் புனரமைப்பு வேலைகளை விரைவாக முடிப்பதற்கே எனவும் அத்தோடு,
பயிர்செய்கை நிறுத்தப்படுகின்றபோது பாதிக்கப்படுகின்ற மக்களுக்கு மாற்று ஏற்பாடுகளை செய்து கொடுக்க வேண்டும் என பிரதம நீர்ப்பாசன பொறியியலாளர் சுதாகரன் அவர்களை கேட்டுக்கொண்டார்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த பிரதம நீர்ப்பாசன பொறியியலாளர் சுதாகரன்,
வாழ்வாதரம் தொடர்பான மாற்று ஏற்பாடுகளை தமது திட்டத்தில் உள்ளடக்கியிருப்பதாகவும் 15.10.2015 அன்று இடம்பெற்ற மாவட்ட விவசாய கூட்டத்தில் சிறுபோகம் நிறுத்துவது தொடர்பாக ஆராயப்பட்டதாகவும், எனினும் இது தொடர்பாக விளங்கபடுத்துவற்காக அவசரமாக இந்த கூட்டம் ஒழுங்குபடுத்தப்பட்டதாகவும் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம், மேலதிக அரசாங்க அதிபர், பிரதம நீர்ப்பாசன பொறியிளாளர் சுதாகரன், கமநல சேவை உத்தியோகஸ்தர்கள், கமக்கார அமைப்புக்களின் பிரதிநிதிகள், துறைசார் உத்தியோகஸ்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
கிளிநொச்சி சிறுபோக நிறுத்தத்தால் 250 கோடி ரூபா நஷ்டம்....
Reviewed by Author
on
December 07, 2015
Rating:
Reviewed by Author
on
December 07, 2015
Rating:


No comments:
Post a Comment