மன்னார் பேசாலை பிரதான வீதியில் அபாயகரமான போதைப்பொருளுடன் இருவர் கைது.
மன்னார்-பேசாலை பிரதான வீதியில் வைத்து அபாயகரமான போதைப்பொருளுடன் இன்று வெள்ளிக்கிழமை(18) மதியம் இரு இளைஞர்களை மன்னார் தலைமையக பொலிஸ நிலைய பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மன்னார் தலைமையக பொலிஸ் நிலையத்தின் போதைப்பொருள் தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவழின் அடிப்படையில் போசாலை-மன்னார் பிரதான வீதியில் பயணித்த முச்சக்கர வண்டியில் இருந்து குறித்த அபாயகரமான போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.
சுமார் 191 கிராம் 51 மில்லி கிராம் எடை கொண்ட குறித்த போதைப்பொருள் சுமார் 3 இலட்சம் ரூபாய் பெறுமதியானது என தெரிய வருகின்றது.
பேசாலையில் இருந்து மன்னார் நோக்கி இன்று வெள்ளிக்கிழமை மதியம் முச்சக்கர வண்டியில் 3 பேர் பயணித்த போது மன்னார் தலைமையக பொலிஸ் நிலையத்தின் போதைப்பொருள் தடுப்பு பிரிவு பொலிஸார் குறித்த முச்சக்கர வண்டியை நிறுத்தி சோதனையிட முற்பட்ட போது அதில் பயணித்த மூவரில் ஒருவர் தப்பிச் சென்றுள்ளார்.
ஏனைய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதோடு குறித்த அபாயகரமான போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளது.
-கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் குறித்த முச்சக்கர வண்டியின் சாரதி எனவும்,அவர்கள் பேசாலை கிராமத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிய வருகின்றது.தப்பிச் சென்றவர்கள் தொடர்பாக மன்னார் பொலிஸார் விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கைது செய்யப்பட்ட குறித்த இரு சந்தேக நபர்களும் மன்னார் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரனைகளுக்கு உற்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மன்னார் நிருபர்
(18-12-2015)
மன்னார் பேசாலை பிரதான வீதியில் அபாயகரமான போதைப்பொருளுடன் இருவர் கைது.
Reviewed by NEWMANNAR
on
December 19, 2015
Rating:

No comments:
Post a Comment