அண்மைய செய்திகள்

recent
-

கிளிநொச்சியில் தொடர் மழை: வீடுகளுக்குள் வெள்ளம்...





தற்போது தொடர்ந்து பெய்து வரும் பெருமழையினால் கிளிநொச்சி மாவட்டத்தின் பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வடக்கில் வடந்த சில நாட்களாக மழை பெய்து வந்த நிலையில், நேற்றுத் தொடக்கம் கிளிநொச்சியில் மிகக்கடுமையான மழை பெய்து வருகிறது.

இன்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில், இலங்கையிலேயே அதிக மழைவீழ்ச்சி கிளிநொச்சியில் பதிவாகியுள்ளது.

இந்தக் காலப் பகுதியில் 106.3 மி.மீ மழை பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நேற்றிரவு பெய்த கடும் மழையை அடுத்து கிளிநொச்சியில் பரந்தன், சிவபுரம், ஆனந்தபுரம், கனகாம்பிகைகுளம், இரத்தினபுரம், திருவையாறு உள்ளிட்ட பல கிராமங்களுக்குள் வெள்ளம் புகுந்துள்ளது.

காட்டாற்று வெள்ளம் வீடுகளுக்குள் புகுந்துள்ளதால் மக்கள் செய்வதறியாது திகைத்துள்ளனர். பல இடங்களில் இடுப்பளவுக்கு வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

இதனால் தாழ்வான பகுதிகளில் உள்ள மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பும்நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தொடர்ந்தும் மழை கொட்டி வருவதால் வெள்ள நிலைமை மோசமடையலாம் என்று கருதப்படுகிறது.

அதேவேளை, கனகாம்பிகைக்குளம் உடைப்பெடுக்கும் நிலையில் இருப்பதாகவும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

பெய்து வரும் கன மழை காரணமாக கல்வி பொது தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு செல்லும் மாணவர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்

இரண்டாம் இணைப்பு


கடந்த ஒரு மாத காலமாக பெய்து வந்த மழை நேற்றிரவு தொடக்கம் மிக அகோரமாக பெய்து வருகிறது.

நேற்று இரவு 7.00 மணி தொடக்கம் பொழிந்து வருகின்ற கனமழை காரணமாக மக்கள் குடியிருப்புக்கள் அழிவுகளை சந்தித்து வருகிறது.

இன்று தொடங்கிய க.பொ.த சாதாரணதர பரீட்சை பலத்த இடர்களுக்கு மத்தியில் நடை பெறுகின்ற அதேவேளை பரீட்சைகள் நடை பெறுவதால் குடிசைகளை இழந்த மக்கள் பாடசாலைகளில் தங்கமுடியாத நிலை காணப்படுகிறது.

வயல்கள் வெள்ளத்தால் மூடி காணப்படுகிறது 90 வீதத்திற்கு மேற்பட்ட பாதைகளால் பயணம் செய்ய முடியாமல் சேறும், சகதியுமாக நீர் தேங்கி நிற்கிறது.

இந்நிலமைகள் குறித்து தமிழ் தேசியக்கூட்டமைப்பின் கிளிநொச்சி கிளையினர், பளைப்பிரதேசத்திலும், கிளிநொச்சி, கண்டாவளை, பிரதேசத்திலும் சென்று நிலமைகளை நேரடியாக பார்வையிட்டுள்ளனர்.

பூநகரி, நாச்சிக்குடா, பளை, கச்சார், வெளிப்பகுதிகளில் கடலுக்கு நீர் செல்லும் செல்லப்படும் வடிகால்கள் அடைக்கப்பட்டுள்ளதால் இவற்றை இயந்திரங்கள் மூலம் வெட்டி நீரை வெளியேற்றுவதற்கான உதவிகள் அனர்த்த முகாமைத்துவ பிரிவிடம் கோரப்பட்டுள்ளது.

கிளிநொச்சியில் தொடர் மழை: வீடுகளுக்குள் வெள்ளம்... Reviewed by Author on December 08, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.