மன்னாரில் இருந்து தேசிய ரீதியில் சாதனை படைத்துக்கொண்டிருக்கும் எடிசன் பிகிறாடோ உடன் சகாயம் கொட்வின்----2016
வடமாகாணத்தில் இருந்து 03 பேர்தான் தேசிய அணியில் இடம்பிடித்திருக்கின்றார்கள் யாழ்ப்பாணத்தில் இருந்து ஒருவீரரும் மன்னாரில் இருந்து அதுவும் பள்ளிமுனை மைந்தர்கள் இருவர் தேசிய அணியில் இடம்பிடித்து இருக்கின்றார்கள் என்றால் எமக்கும் எமது மன்னார் மாவட்டத்திற்கும் எவ்வளவு பெருமைப்பட வேண்டிய விடையம்.
அதுவும் பங்களாதேஷில் 07-01-2016 சில நாட்களுகளுக்கு முன்பு ஆசிய அளவில் கோல் அடித்து மன்னார் மாவட்டத்தின் பெயரை ஆசிய அளவில் நிலைநிறுத்தியுள்ள இவ்வீரர்களை மன்னார் மாவட்டம் கண்டு கொள்ளவில்லை என்பது வெட்கப்படவேண்டிய விடையமே……..
மன்னாரில் இருந்து தேசிய ரீதியில் சாதனை படைத்துக்கொண்டிருக்கும் எமது மன்னார் மாவட்டத்தின் மைந்தர்கள் பள்ளிமுனையைச்சேர்ந்த விக்ரர் ரெட்ணசிங்கம் ஜேம்ஸ் எடிசன் பிகிறாடோ உடன் சந்தியோகு சகாயம் கொட்வின் என்ற இருவீரர்களையும் வாழ்த்துகின்றோம்....
எனது தந்தை விக்ரர் ரெட்ணசிங்கம் பிகிறாடோ கிராம அலுவலராகவும் எனது அம்மா ஆசிரியராகவும் கடமைபுரிகின்றனர். நான் ஆரம்பக்கல்வியை புனித லூசியா மகாவித்தியாலயத்தில் கல்வி கற்றேன். பின்பு திருகோணமலை சூசையப்பர் விளையாட்டுக்கல்லூரியில் விளையாட்டுக்காக தெரிவு செய்யப்பட்டு 03 மாதங்கள் பயின்றேன் பின்பு புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையில் உயர்தரம் வரை கல்வி கற்றேன்.
தேசிய ரீதியில் நடைபெற்ற விளையாட்டுக்களிலும் மாவட்டரீதியான போட்டிகளிலும் மாகாண ரீதியாகவும் பல போட்டிகளில் பங்கு பற்றி உள்ளேன்.
எனது உதைபந்தாட்ட பரிசுகள்-----
2008 தேசிய இளைஞர் விளையாட்டு 1ம் இடம்
2009 வடக்கு மாகாண வர்ண இரவு விருது
2009 தேசிய விருது
2011G.L.P விருது
2012 எலிசபெத் பாடசாலை உதைபந்து விருது
2012 வடக்கு மாகாண வர்ண விருது
2012 வடக்குமாகாண உதைபந்து தேசிய ரீதியில் 2ம் இடம்
2013 வடக்கு மாகாண வர்ணவிருது அத்தோடு சிறந்த வீரர்
2013 தேசிய ரீதியில் 03ம் இடம்
2013 மாகாண ரீதியாக நடைபெற்ற உதைபந்துப்போட்டியில் சிறந்த வீரனாக தெரிவு செய்யப்பட்டேன்.
வடக்கு மாகாண 21வயது டயமன்ஸ் விளையாட்டுக் கழகம் யாழ்ப்பாணம்
2014 டயலொக் சம்பியன் லீக்போடடியில் சம்பியனாகவும் வந்துள்ளோம்.
2009---2014 வரை மாகாண அணிக்காக விளையாடி வருகிறேன்
2014 டயலொக் சம்பியன் லீக்போடடிக்காக அநுராதபுர சொலிட் கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்டு விளையாடிவருவதோடு இலங்கை தேசிய அணியிலும் விளையாடி வருகின்றேன்.
எனது வளர்ச்சிக்கு காரணமாக இருந்த எல்லாம் வல்ல இறைவனுக்கும் எனது பெற்றோருக்கும் எனது லூசியா கழகத்திற்கும் சொலிட் கழகத்திற்கும் அதன் முகாமையாளர் சாகர பியதிலக அவர்களுக்கும் எனது பயிற்றுனர் ஐஸ்மின் அவர்களுக்கும் ஊர்மக்களுக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
அந்நிய நாட்டில் அடித்த முதலாவது கோல் பற்றி----
உண்மையாக சந்தோஷம் தான் எங்களது மாவட்டம் கழகங்களுக்கிடையிலும் மாகாணங்களுக்கு இடையிலும் விளையாடியபோது பல முறை கோல் அடித்திருக்கிறேன். அப்போது மிகவும் சந்தோஷம் அடைந்திருக்கிறேன் ஆனாலும் அந்நிய நாட்டில் விளையாடும் போது விளையாட்டு முறையே வீரர்கள் எல்லாமே புதிது இருந்தாலும் இந்தியா மலேசியா ஈரான் வங்களாதேஷ் போன்ற நாடுகளுக்கு சென்று விளையாடியபோதும் பங்களாதேஷில் 07-01-2016 அன்று கோல்ட் கப்-2016 இற்காக பங்க பந்து (bangabandhu)விளையாட்டில் எனது முதலாவது கோல் அதுவும் ஆசிய அணிகளுக்கிடையிலான போட்டியில் அடித்தது எனது வாழ்நாளில் மறக்கமுடியாத தருணம் என்பேன்.
எனது தந்தை பெயர் சந்தியோகு சகாயம் எனது அம்மா சகாயம் அலெக்ஸ் சாந்திரியா எனது ஆரம்பக்கல்வியை புனித லூசியா மத்திய மகாவித்தியாலயத்திலும் உயர்கல்வியை உள்ள புனித பெனடிக் கல்லூரியிலும் பயின்றுள்ளேன்.
13 வயதிற்குட்பட்ட பிரிவின் கீழ் புனித லூசியா மத்திய மகாவித்தியாலயம் சார்பாக தேசிய மட்டப்போட்டியில் பங்கு பற்றியமை.
17 வயதிற்குட்பட்ட பிரிவின் கிழ் மைலோ உதைபந்தாட்டத்தில் 2ம் இடம் தேசிய மட்டம்.
19 வயதிற்குட்பட்ட பிரிவின் கிழ் தேசிய அணியில் இடம் பெற்று
40வது ஆசியா பாடசாலைகளுக்கிடையிலான உதைபந்தாட்டகிண்ணப்போடடிக்காக ஈரான் 16-26-10-2012 சென்று சிறந்த முறையில் விளையாடியமை.
புனித பெனடிக் கல்லூரியின் பழைய மாணவர்கள் All bens விளையாடியமை
23 வயதிற்குட்பட்ட தேசிய அணியில் இடம் பெற்று 2014ம் ஆண்டு இந்தியா கோவா சென்று அங்கு நடைபெற்ற Lusofonia Games விளையாடி 03ம் இடம்.
23 வயதிற்குட்பட்ட தேசிய அணியில் இடம் பெற்று 2014ம் ஆண்டு இந்தோனேசியா சென்று விளையாடியமை
23 வயதிற்குட்பட்ட தேசிய அணியில் இடம் பெற்று 2014ம் ஆண்டு பாலஸ்தீனா சென்று விளையாடியமை பாலஸ்தீன அதிபரின் பாராட்டு பெற்றுக்கொண்டேன். அதுபோல ஈரானில் விளையாடியபோது எனது விளையாட்டு அசைவொன்றை பிரேம் போட்டு நினைவுச்சின்னமாக தந்தார்கள்.
இலங்கை டயலொக் பிறிமியர் லீக்கிற்காக சொலிட் கழகத்துடன் இணைந்து Sheikb Kamal தேசிய கழக கிண்ணத்திற்காக விளையாடியமை.
2013 வடமாகாண சார்பாக தேசிய மட்டப்போடடியில் பங்கு பற்றி 03ம் இடம் பெற்றுக்கொண்டோம்.
2014 இல் யாழ்ப்பாணம் சாவகச்சேரியில் இடம் பெற்ற வடமாகாண வர்ண இரவுகள் விருதுவிழாவில் வடக்கு மாகாண 01 விளையாட்டு வீரராக தெரிவு செய்யப்பட்டமை.
2015 வடமாகாண சார்பாக தேசிய மட்டப்போடடியில் பங்கு பற்றி 03ம் இடம் பெற்றுக்கொண்டோம்
2015ம் ஆண்டு தேசிய அணியில் இடம் பெற்று World Cup Qualify Round இற்கான பூட்டான் சென்று விளையாடியமை.
2015ம் ஆண்டு தேசிய அணியில் இடம் பெற்று துபாயில் நடைபெற்ற Asian Chalange Cup விளையாடியமை
2016 பங்களாதேசில் நடைபெற்ற (பங்க பந்து) banga bandhu Gold Cup-2016 விளையாடியமை.
எனது இந்த வளர்சிசிக்கு காரணமானவர்களாக இருக்கின்ற அனைவரையும் நன்றியுடன் நினைக்கிறேன் முதலில் எனது குடும்பத்திற்கும் எல்லாம் வல்ல இறைவனுக்கும் எனது முதலாவது பயிற்சியாளர் ஜனாப் ஜஸ்மீன் அவர்களுக்கும் றொசான் அவர்களுக்கும் லூசியா கழகத்தின் தலைவர் ஜே.அன்ரன் பிகிறாடோ அவர்களுடன் என்றும் எனக்கு ஆக்கமும் ஊக்கமும் அளிக்கும் எனது நண்பர்கள் ஊர்மக்கள் ஒவ்வொருவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து நிற்கிறேன்.
நியூ மன்னார் இணையத்திற்காக---
-வை-கஜேந்திரன்-
மன்னாரில் இருந்து தேசிய ரீதியில் சாதனை படைத்துக்கொண்டிருக்கும் எடிசன் பிகிறாடோ உடன் சகாயம் கொட்வின்----2016
Reviewed by Author
on
January 27, 2016
Rating:

No comments:
Post a Comment