அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் இணையத்தின் விம்பம் ஊடாக சிலம்புக்கலைஞர் அண்ணாவியார் ஆண்டி பாண்டி எனும் கலைஞர் அகத்திலிருந்து,,-Photos

கணனியில் முகம் கலைஞனின் அகம் விம்பம் ஊடாக நம்மைக்காண வருபவர் சிலம்புக்கலைஞர் அண்ணாவியார் நகரசபையில் 40ஆண்டுகளுக்கு மேலாகப்பணியாற்றி வரும் ஆண்டி பாண்டி எனும் கலைஞர்  அகத்திலிருந்து


தங்களைப்பற்றி?

 எனது பெயர் ஆ.பாண்டி நாங்கள் இந்தியா வம்சாவழியினைச்சேர்ந்தவர்கள்
கடலும் கடல் சார்ந்த பேசாலை பிரதேசமாககிய நெய்தல் நிலத்தில் சந்தோசமாக வாழ்ந்துவருகின்றேன்…

தங்களின் இளமைக்காலம் பற்றி?

நான் சிறியவனாக இருந்த போது எனக்கு 7 வயதிலே சின்னக்கம்பு எடுத்து விளையாட்டாக சுற்றுவேன் அதைப்பார்த்த தந்தை எனக்கு சிலம்பின் மீது இருந்த ஆர்வத்தைப்பார்த்துசிறுவயதிலே கற்றுத்தந்தார் 10-15 வயதிலே கம்பு சுத்தப்பழகிக் கொண்டேன் அந்த வயதிலேயே என்னை கல்யாண வீடுகளுக்கு கலைநிகழ்ச்சிகளுக்கு கூட்டிப்போவார்கள் அப்படியேதொடர்ந்ததுதான் எனது சிலம்புப்பயணம்…


விபரம் தெரிந்தபோது சிலம்பை கற்றுக்கொள்ளவேண்டும் என்ற ஆர்வம் எவ்வாறு விரிவடைந்தது?

நான் எனது தந்தையை விட சிறந்தவர்கள்  என நினைத்துக்கொண்டவர்களில் 09 பேரிடம் சிலம்புக்கலையை கற்றுக்கொண்டேன் அவர்களில் பிரதானமானவர் ஒஸ்மன் டாடி எனும் சிலம்புக்கலைஞர்  இப்போது தலைமன்னாரில் உடல் நலக்குறைவோடு வாழ்ந்து வருகின்றார் என்னோடு சிலம்பு விளையாடியவர்களில் ஒருவரும் இல்லை நான் மட்டும் தான் தற்போது பேசாலையில் தான் உள்ளேன்…



நீங்கள் பழகிய சிலம்புக்கலைஞர் களில் உங்கள் தந்தையைவிட சிறந்தவர்கள் யாராவது உள்ளனரா?

இல்லை அறவே இல்லை என்பேன் காரணம் அந்த 09பது கலைஞர்களும் சிறமையானவர்கள் தான் ஆனாலும் எனது தந்தையின் சிலம்பு விளையாட்டானது வித்தியாசமானதும் வினோதமானதும் விவேகமானதும் உடன் தந்திரம் அழகு பல முறை தாக்குதல் என்பவற்றினை கொண்டு விளையாடும் போது எதிராளிகள் தோல்வியடைவார்கள் ஆதாலால் எனது தந்தை சிறந்தவராக உள்ளதோடு எனது குருவும் அவர் தான்.

சிலம்பு கலையில் ஏற்பட்ட சம்பவம் பற்றி?

துறைப்பாடு பேசாலையில் எனது தந்தை சிலம்பு கட்டிவர இன்னொருவனும் சிலம்பு கட்டி வர அறுவையில் கீழ் வாறு கொடுத்தார் அவன் அடிக்க எனது தந்தையூம் அடிக்க ஊருக்குள்ளே பெரும் சண்டையே  வந்து விட்டது. ஊருக்குள் இருந்து வரமுடியாமல் போனது. பின்பு சமாதனப்படுத்தி விட்டார்கள் அதுபோல எனக்கும் ஒரு சம்பவம் நடந்தது புதுக்குடியிருப்பில் தான் நிறைய மாஸ்ரர் மார்கள் இருக்கிறார்கள் மந்திரம் நன்கு தெரிந்தவர்கள் ஓதி மந்திரம் அடித்தால் அந்த இடத்திலே நின்று விடுவார்கள் அப்படியானவர்களுடன் விளையாடும் போது மூன்று தடவைகள் அடித்து விட்டார் எனக்கு சிறுகாயம் வரும் எனக்கு கோபம் வர நானும் வேகமாக தாக்கினேன்.கோபம் கொண்டவர் மந்திரம் ஓதியடிக்க வந்தார் நான் மேடையை விட்டு இறங்கி விட்டேன்.ஊருக்குள்ளே பெரும் குழப்பத்தையும் சண்டையையும் உண்டாக்கியது கம்பு வம்பு தான் என்பதை உணர்ந்தேன் பலமுறை…1989 அம் ஆண்டு இந்தியாவில் திருநெல்வேலி முகாமில் இருந்த வேளையில் ஒரு நாள் அங்கு உள்ளவர்கள் சிலம்பு விளையாடினார்கள் நான் ஆர்வமிகுதியால் ஒருவாpன் கம்பை வேண்டி சுற்றினேன் அங்கு இருந்தவா;கள் என்னை மேடைக்கு அழைத்து பாராட்டினார்கள் தங்களுக்கும்

கற்றுத்தருமாறு கேட்டார்கள் நான் பலகாரணங்களுக்காக அவர்களிடம் இருந்து மறைமுகமாகவே விலகி இருந்தேன்…

சிலம்புக்கலையின் மூலதத்துவம் என்றால்?

குழந்தையின் உள்ளம், கோழி நடை,புலியின் பார்வை சிங்கத்தின் கர்ச்சணை

சிலம்பினை எவ்வாறு சுற்றுவது முறைகள் பற்றி?

குருவணக்கம்

சிலாவஸ்

அறுவை-உடான்-

குறவஞ்சி-துளுக்கவானம்-மழலையடி-மல்லடி-மீன்பாய்ச்சல்-சீனடி-முகவெட்டு-

2-4-8-16 கணைகள் உள்ள பல முறை விளையாட்டுக்கள் உள்ளது

கைமடக்கி கால்தட்டி மண்ணைத்தொட்டால்  சமாதானம்

கைமடக்கி கால்தட்டி நிமிர்ந்தால் சண்டைக்கு அழைத்தல் எனப்பொருள்

மனித விளையாட்டுக்ள் எல்லாமே ஒரு வகை தந்திரமானதான் அவன் என்ன விளையாட்டு விளையாடி வருகிறான் என்பதை அறிந்து விளையாட வேண்டும் அதுவரை சும்மா கம்பினை சுழற்றிக்கொண்டு இருக்க வேண்டும் எதிராளியின் முழுமையாக விளையாட்டை அறிந்த பின்பு இறங்கி விளையாட வேண்டும்.

கம்பின் அரைப்பிடி- குறவஞ்சி துளுக்காணம் மிகவூம் அழகான விளையாட்டு பார்க்கவும்,விளையாடவும் அழகாய் அற்புதமாய் இருக்கும் கம்பின் முழுப்பிடி-பனையேறி மழழையடி இவை இரண்டும் தந்திரம் கொண்ட விளையாட்டு குழந்தை விளையாட்டு மறைமுகமாக விளையாடுவார்கள் நிறைய அறுவைகளும் வெட்டுக்களும் நிறைய இருக்கும் கீழ் அறுவை மேல் அறுவை இருக்கும்.

திறமையான விளையாடக்கூடிய கணைகள் எத்தனை?

04 கணைகள் தான் ஒருவனை ஒரு அடியில் கொல்லலாம் அவனின் நிலைகண்டு புள்வீச்சாக உச்சியில் ஒரு அடியில் அடித்தாலும் கழுத்துப்பகுதியில் அடித்தாலும் இறப்பு நிச்சயம் தான்

சிலம்பில் வேறு என்ன வகைகள் விளையாட்டு உள்ளது?

சக்கரப்பந்தம்

தீப்பந்தம்-நெஞ்சில் இருந்து 1அடி தூரத்தில் சுத்துவது

16-முளம் -4 முளம் சிலம்புகள்  சுற்றுதல்

சுருள்வாள்

வாள் விளையாட்டுக்கள் பல உள்ளது

சிலம்புக்கலையோடு வேறு என்ன கலைகள் தெரியும்?

சிலம்புக்கலையோடு வா;மக்கலை தொpயூம் அத்தோடு உடல் நோவூ சுளுக்கு பிடிப்பு போன்றவற்றிற்கு கைமருத்துவங்கள் செய்வேன். சிலம்பு கைவைத்தியம் இரண்டும் செய்கிறேன் ஆனால் வா;மக்கலையை மட்டும் கற்றுக்கொடுக்கவூம் இல்லை நானும் செய்வதில்லை காரணம் அப்பாஎன்னிடம் சத்தியம் வாங்கியூள்ளார். காரணம் நான் தான் நான் சிறுவயதில் பெரும் குழப்படியும் சின்ன விடையங்களுக்கே கோபப்படுவேன் அதனால் என்னிடம் எனது தந்தை சத்தியம் வாங்கிக் கொண்டார் அத்தோடு உன்னைப்போல் இருக்கின்ற கோபக்காரர் பழகினால் பெரும் விபரீதம் ஏற்படும் என்ற காரணத்திற்காகவே என்னிடம் சத்தியம் வாங்கினார்.
ஏன் என்றால் வர்மக்கலை மூலம் ஓரிரு நிமிடத்தில் ஒருவரைக் கொலை செய்து விடலாம் இரண்டு வகையாக உள்ளது படுபதம்-அடித்தால் உடனே முடிந்துவிடும் தொடுபதம் -அடித்தால் சில மணித்தியாளங்கள் தான் இருப்பார்கள்  பேனாவால் விளையாடினால் அது வர்மக்கலை பொரிய கம்பால் விளையாடினால் அது சிலம்புக்கலை

குரு வாக்கு-காப்பு கொடுத்தல் எவ்வாறு?

ஒரு கலையை கற்றுக்கொடுத்த பின்பு சிஸ்யன் அக்கலையை அரங்கேற்றம் செய்து முடியும் தருவாயில்  வேப்பிலை பரத்தி தனக்கு முன் சிஸ்யனை அமரவைத்து தனது முழுக்கலையையும் தனது சிஸ்யனுக்கு கொடுக்கும் தலையில் கைவைத்து மனதுக்குள் மந்திரம் செபித்து நெற்றியில் திலகமிடுவார் இன்று முதல் கலைகள் அனைத்தும் சித்திக்கும் என வாழ்த்துவார் அப்போது குருதட்சனையாக நாம் விரும்புவதை குருவுக்கு தேவையானதை கொடுத்தல் ஒவ்வொரு முறையும் குருவை நினைத்துதான் கலையை தொடங்க வேண்டும்…

புதிதாக ஒருவர் சிலம்புக்கலையை கற்கவேண்டுமானால் அவர் என்ன செய்ய வேண்டும்?

ஏந்த வொரு கலையை பழகுவதற்கும் குரு வேண்டும் குரு இல்லாத கலை கூத்தாடாது என்ற பழமொழி உண்டு அது போல குருவைத்தேர்வூ செய்த பின்பு தேங்காய் ஊதுபத்தி- கற்பூரம்-03 பாக்கு-03 வெற்றிலை கொண்டுவந்தவூடன் பெற்றுக்கொண்ட குரு அந்த தேங்காயை அந்த மாணவனிடம் கொடுத்து உடைக்கச்சொல்வார்  அவன் உடைக்கும் தேங்காயை வைத்து சொல்லலாம் அந்த மாணவன் சிலம்பு பழகுவான் பழக மாட்டானா என்று தேங்காயானத குடுமியோடு கூட உடைந்தால் அவன் கெதியாகப்பழகிடுவான் கெட்டிக்காரன் குடுமிப்பக்கம் குறைவாக உடைந்தால் அந்த மாணவனைப்பழக்கி எடுப்பது மிகவூம் கஸ்ரம் தான்  இருந்தாலும் என்னிடம் வரும் போது எப்படியிருந்தாலும்  கலையை கற்றுக்கொடுப்பதுதான் குருவின் சிறப்பு என்பேன்

வேறு எவ்வாறு ஒரு மாணவனை சிலம்பு சுற்றுவானா என்பதை எவ்வாறு அறிந்து கொள்ளலாம்?

சிலம்பை கொடுத்து வீசச் சொல்லும் போது அந்த மாணவன் சிலம்பை வாங்கும் விதம் முறையினையும் வைத்து செல்லிவிடலாம்  கணித பாடம் எப்படி விளங்காதவர்களுக்கு அவர்களின் திறமைக்கு ஏற்ப விளங்கப்படுத்த வேண்டும் அதே போல சிலம்புக்கலையை சில நுட்ப முறைகளில் கற்றுக்கொடுக்க வேண்டும். மூன்று நாட்களில் சிலம்பு வீச்சுப்பயிற்சியை கற்றுக்கொடுத்து விடுவேன்

சிலம்பு கற்றுக்கொள்வதால் என்ன பயன் கிடைக்கும்?

மனித உடலுறுப்புக்களில் அனைத்தும் சீராகவூம் ஆரோக்கியமாகவூம் இருக்கும் எந்த நோயூம் அண்டாது 4448 நரம்புகளில் ஏற்படுகின்ற சுறுசுறுப்பு சிலம்பக்கலைஞர் கள் ஒவ்வொருவரையூம் பாருங்கள் மற்றவர்களை விட எவ்வளவு  ஆரோக்கியமாக இருக்கின்றார்கள் என்று உதாரணத்துக்கு என்னைப்பாருங்கள் இத்தனை வயதிலும் நல்ல தேகஆரோக்கியத்துடன்

இருக்கிறேன். என்றால் எனது தந்தை எனக்கு கற்று தந்த அரும் பெரும் கலையான சிலம்புக்கலைதான் என்பேன் அத்தோடு தற்போதைய சூழலில் ஆண்களுக்கு மட்டுமல்ல பெண்களுக்கும் தற்பாதுகாப்பு.கலையாகும் பெண்களுக்கு தற்காப்பு என்பதை விட கற்பைக்காக்கும் அருங்கலை இது இக்கலை பழகி இருந்தால் பெண்கள் வலிமையானவர்களாக இருப்பதால் எளிதில் எதையூம் சமாளிக்கும் தன்னமடபிக்கையினை பெற்று விடுவார்கள் தற்காப்போடு வாழ்வின் உறுதியான வெளிப்பாடும் எனலாம்.

இத்தனை வருடங்களாக சிலம்புக்கலைஞராக  இருக்கின்ற நீங்கள் ஏன் ஒரு அமைப்பாக கழகமாக இயங்க வில்லை?

நல்லதொருகேள்வி என்னிடம் பழகியவர்கள் எல்லாம் ஒரு குறுகிய காலப்பகுதிக்குள் குறுகிய எண்ணத்தோடு இடையில் நின்று விடுவார்கள் எனக்கு எந்த வித பக்கபலமும் இல்லை எனது திறமையை மென்மேலும் வளர்த்துக்கொள்ள எந்த விதமான ஆலோசனையூம் அறிவூரைகளும் எனக்கு
கிடைக்கவில்லை எனது தூரதிஸ்ட்டமே அது பேலவே நவீன வளர்ச்சியில் தற்போது துப்பாக்கிகள் வருகையால் சிலம்பு பழகும் கலைஞர்கள் ஆர்வம் குறைந்து போயூள்ளது இப்படித்தப்பான காரணத்தினால் தான் எமது பாரம்பாpய கலைகள் ஒவ்வொரு காரணத்தினாலும் அழிந்து கொண்டு போகின்றது கவலைக்குரியதே…

தங்கள் வாழ்வில் மறக்க முடியாதவர்கள் பற்றி?

எனது வாழ்வில் மறக்கமுடியாதவர்கள் என்றால் முதலில் என்னை படைத்த  பெற்றௌரயையூம் எல்லாம் வல்ல இறைவனையூம் செல்வேன் அத்தோடு எனக்கு சிலம்பு கற்றுத்தந்தவர்களில் எனது குருவான தந்தையூடன் ஒஸ்மன் டாடி என்னும் சிலம்பக்கலைஞரை மறக்கமுடியாது. அது போல எனது வாழ்வில் கல்வியால் ஒளியூட்டியவர்களாக  எஸ்-ஏ-மிராண்டா மாஸ்ரா; முன்னாள் பத்திமா

பாடசாலை அதிபர் காரணம் 1-2-3 சொல்லத்தொரியாமல் இருந்த என்னை படிடா படித்தால் தான் வாழ்க்கை சிறக்கும் என்று சொன்னவர் அதற்கு என்னை தயார்படுத்தினார் இப்போது அரசாங்க உத்தியோகத்தராக இருப்பதற்கு அதிபர் தான் காரணம் வேலைத்தளத்தில் ஆரம்பகாலத்தில் கந்தசாமி ஐயா அவர்களையூம் மறக்கமுடியாது தற்போது பலர் உள்ளார்கள்.

தங்கள் வேலை பற்றி?

1976ம் ஆண்டு தாராபுரத்தில் பிரதேச சபையில் மேலாளராக வேலை செய்தேன் அதன் பிறகுகங்காணியாகவூம் தற்போது 12 வருடங்களுக்கு மேலாக மன்னார் நகரசபையில்  கே-கே-எஸ் ஊழியராக பணியாற்றி வருகின்றேன 58 வயது 40 வருடங்கள் அரசாங்க ஊழியராக கடமையாற்றி வருகின்றேன்

தற்போதைய இளைஞர் யூவதிகளுக்கான தங்களது ஆலோசனை?

சிலம்பு என்பது ஒரு பாரம்பரியக்கலை அதைத்தொழிலாகவூம் அதை பழக முடியாது கலையாகவேதான் பழக வேண்டும் ஆனால் தொழிலாகவூம் உள்ளது எக்கலையானலும் அக்கலைமீது ஆர்வம் விருப்பம் குருபக்தி பொறுமை நிதானம் என்பன இருக்கவேண்டும்.நான் ஒவ்வொரு முறையூம் சிலம்பை கையில் எடுக்கும் போது எனது தந்தையை மனதில் நிறுத்திக்கொள்வேன் என்னுள் வந்து விடுவார் எனது நம்பிக்கையூம் என்னை நல்லதொரு சிலம்புக்கலைஞனாக என்னை உருவாக்கியூள்ளது அதுபோல நீங்களும் உங்களுக்கு என்ன விருப்பமோ அக்கலைமீது எண்ணத்தினை செலுத்துங்கள் உறுதியாய் இருங்கள் இறையாசீரும் பெற்றோரின் ஆசீரும் உடன் இருந்தால் உங்களுக்குத்தான் என்றும் வெற்றி…

மன்னாரில் இதுவரை உங்களை கௌரவித்து இருக்கிறார்களா

முன்பு மன்னார் ஸ்ரேடியத்தில் விளையாடும் போது பாராட்டி மாலையணிவித்து கௌரவப்படுத்தினார்கள்.இடம்பெயர்ந்த போய் இந்தியாவில் இருந்த சந்தர்ப்பத்தில் இராஐபாளையம் பகுதியில் ஒருமுறைவிளையாடும் போது மாலைபோட்டு பாராட்டினார்கள் மன்னார் தாராபுரம் பள்ளிவாசல் சிறப்பு விழாவிற்கு முன்னாள் அமைச்சர் மசூர் அவர்களும் இந்நாள் அமைச்சர் றிஸாட் பதியூதீன் அவர்களும் வந்திருந்த வேளையில் சிலம்பு கலைக்காக என்னை பாராட்டி வாழ்த்தியிருக்கிறார்கள்.
இன்னும் பல சந்தர்ப்பங்கள்  உள்ளது எனக்கு நினைவில் இல்லை ஆவணங்களும் தற்போது கைவசம் இல்லைகாரணம் யூத்த சூழல் காரணமாக எனது திறமை என்னுடனே நின்றுவிட்டது எனது துரதிஸ்ட்டம் தான்

மன்னார் கலைஞர்களின் உயர்வுக்கு வழிகாட்டும் நியூ மன்னார் இணையம் பற்றி/

என்னை இனம் காட்டிய சிலம்புக்கலையை கற்றுத்தந்த எனது தந்தையூடன் ஏனையவர்களையூம் நினைத்தவனாக

என்னை வீட்டிற்கே வந்து செவ்வி கண்ட உங்களுக்கும் உங்களது இணையமான  மன்னார் இணையத்திற்கும் முதலில் மனமார்ந்த நன்றிகளும் பாராட்டுக்களும். இதுதான் எனதுமுதலாவது செவ்வி சிறிய வட்டத்திற்குள் இருக்கும் என்னை பெரிய வட்டத்திற்குள் கொண்டு செல்ல முயலும் உங்கள் முயற்சிக்கு எனது மட்டற்ற மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறேன் உங்களை அந்த இறைவன் தான் என்னிடம் அனுப்பியூள்ளார் என்பது தான் உண்மை என்பதை உணர்கிறேன்.என்னைப்போன்ற இன்னும் பல கலைஞா;களை வெளிக்கொணர வேண்டும் அதற்கு தங்களது சேவை மென்மேலும் தொடர வேண்டும் எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கின்றேன் என்றும்

மன்னார் இணையத்திற்காக
v.கஜேந்திரன் 









மன்னார் இணையத்தின் விம்பம் ஊடாக சிலம்புக்கலைஞர் அண்ணாவியார் ஆண்டி பாண்டி எனும் கலைஞர் அகத்திலிருந்து,,-Photos Reviewed by NEWMANNAR on January 27, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.