மன்னார் புனித சவேரியார் பெண்கள் தேசிய பாடசாலையின் வருடாந்த இல்லவிளையாட்டுப்போடடி-2016 முழுமையான படங்களுடன்
மன்னார் புனித சவேரியார் பெண்கள் தேசிய பாடசாலையின் வருடாந்த இல்ல விளையாட்டுப்போடடியானது இன்று 29-01-2016 மாலை 2-30 மணியளவில் மன்னார் பொதுவிளையாட்டரங்கில் மிகவும் சிறப்பாக இடம் பெற்றது.
வருடாந்த இல்லவிளையாட்டுப்போடடியின் இறுதி நாள் நிகழ்வுகளாக 29-01-2016 மாலை 2-30 மணிக்கு ஆரம்பமானது நிகழ்விற்கு பிரதம அதிதியாக வடமாகாண உறுப்பினர் வைத்திய கலாநிதி ஜி-குணசீலன் அவர்களும் கௌரவ அதிதியாக திருவாளர் எம்-இரவீந்திரன் குரூஸ் மெக்கானிக்கல் இஞ்ஞினியறிங்-RDD-யாழ்ப்பாணம் அவர்களும் மன்னார் மாவட்ட வலையக்கல்விப்பணிமனை உடற்கல்விப்பணிப்பாளர் பி-ஞானராஜ் அவர்களுடன் பாடசாலை முதல்வர் அருட்சகோதரி A-B-கில்டா சிங்கராஐர்அவர்களும் மன்னார் பேராலயப்பங்குத்தந்தை பெப்பி சோசை அவர்களுடன் சகோதரப்பாடசாலை அதிபர்கள் ஆசிரியர்கள் பாடசாலை அபிவிருத்திச்சங்க நிர்வாகிகள் பழைய மாணவர்கள் மாணவிகள் ஆசிரியர்கள் பெற்றோர்கள் என அனைவரும் கலந்து கொண்டணர்.
நிகழ்வுகளாக சிறுவர்களுக்கான ஓட்டம் சிறுவர்கண்காட்ச்சி சிறுவர் விளையாட்டுகள் மாணவமாணவிகளுக்கான அஞ்சலோட்டம் இல்லங்கள் பார்யையிடல் அணிவகுப்பு என பல நிகழ்வுகள் மிகவும் சிறப்பாக இடம் பெற்றது. நான்கு இல்லங்களின் வெற்றி முடிவுகள்----
விஜன்வெனு இல்லம்---259 1ம் இடம்
ஜேசப் இல்லம்---183 2ம் இடம்
மரியா இல்லம்---168 3ம் இடம்;
அலோசியஸ்--- 115 4ம் இடம்
வெற்றிபெற்ற வீரர்களுக்கான வெற்றிக்கிண்ணத்தினை வழங்கி வைத்தத வடமாகாண உறுப்பினர் வைத்திய கலாநிதி ஜி-குணசீலன் அவர்கள் தனதுரையில் இவ்வாறான மெய்வல்லுநர் போட்டிகளானது மாணவர்களின் திறமையினை வெளிக்கொண்டுவருவதோடு அவர்களின் ஆளுமையினையும் விருத்தி செய்யும் ஒரு முக்கியமான விடையம் இவ்வாறான விளையாட்டுப்போடடிகள் அமைகின்றன அத்தோடு பாடசாலை அபிவிருத்தி தொடர்பான வேண்டுகோள் விடுத்திருந்தார் பாடசாலை அதிபர் அவர்கள். வடமாகான கிழக்குமாகாணத்தில் உள்ள பாடசாலைகளுக்கான நிதி ஒதுக்கீடானது மத்திய அரசாங்கமோ மாகாண சபைகளிடமோ போதுமானதாக இல்லை பாடசாலைகளின் அபிவிருத்திப்பங்களிப்பிற்கு நிதிப்ற்றாக்குறை பெரும் பிரச்சினையாகவே உள்ளது. இருப்பினும் என்னால் முடிந்தளவிற்கு நிதிப்பங்களிப்பையும் உதவிகளையும் இப்பாடசாலைக்கு வழங்குவோம் என்று தனது உரையினை நிறைவு செய்யதார்.
பாடசாலை முதல்வர் தனதுரையில் இவ்வாறான மெய்வல்லுநர் வியையாட்டுக்கள் மூலம் தான் எமது மாணவர்களை உடலாலும் உள்ளத்தாலும் பலப்படுத்தி ஆளுமையுள்ள நல்ல மாணவ சமூதாயத்தினை கட்டியெழுப்புவதன் மூலம் நல்ல எதிர்கால தலைவர்களை உருவாக்க இவ்வாறான மெய்வல்லுநர் போட்டிகளும் கல்வியும் தான் வழிவகுக்கும். அத்தோடு எமது பாடசாலை தொடர்பான அபிவிருத்திச்செயற்பாடுகளுக்கு உதவி வரும் நல்லுல்லங்களுக்கும் நன்றியையும் வாழ்த்துக்களையும் கூறிநிற்பதோடு இனிவருங்காலத்திலும் எங்கள் பாடசாலையினை மாணவர்களை அபிவிருத்திச்செயற்பாட்டுக்கு துணை நிற்கவேண்டும் என தனதுரையினை நிறைவு செய்தார்.
மேலும் பல நிகழ்வுகள் பரிசளிப்புகள் இடம் பெற்று 2016ஆண்டிற்கான இல்ல மெய்வல்லுநர் போட்டிகள் தமிழ்த்தாய் வாழ்த்துடன் இனிதே நிறைவுற்றது.


மன்னார் புனித சவேரியார் பெண்கள் தேசிய பாடசாலையின் வருடாந்த இல்லவிளையாட்டுப்போடடி-2016 முழுமையான படங்களுடன்
Reviewed by Author
on
January 29, 2016
Rating:
No comments:
Post a Comment