மன்னார் மாவட்ட சைவக்கலை இலக்கிய மன்றம் பெருமையுடன் நடாத்திய மகாகவி பாரதியார் விழா இன்று 30-01-2016 (முழுமையான படங்களுடன்)
மன்னார் மாவட்ட சைவக்கலை இலக்கிய மன்றம் பெருமையுடன் நடாத்திய மகாகவி பாரதியார் விழா இன்று 30-01-2016 காலை 10-00 மணிக்கு சனிக்கிழமை மன்-சித்திவிநாயகர் இந்துக்கல்லூரியில் மிகவும் சிறப்பாக இடம் பெற்றது.
மன்னார் மாவட்ட சைவக்கலை இலக்கிய மன்றம் மஹா ஸ்ரீ தர்மகுமார சர்மா அவர்களின் தலைமையில் பிரதம விருந்தினராக செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு திருமுருகன் தலைவர் சிவபூமி அறக்கட்டளை நிதியம்.
சிறப்பு விருந்தினர்களாக….
திருவாளர் கே.எஸ்.வசந்தகுமார் பிரதேச செயலாளர்-மன்னார் நகரம்
திருமதி சுகந்தி செபஸ்ரியன் வலயக்கல்விப்பணிப்பாளர் மன்னார்
திருவாளர் கே.சசிதரன் பணிப்பாளர் “வாழ்வின் எழுச்சி” மன்னார்
திருவாளர் எக்ஸ்.எல்.றெனால்ட் செயலாளர் நகர சபை மன்னார்
விஷேடவிருந்தினர்களாக-----
அருட்பணி தமிழ்நேசன் அடிகளார்- இயக்குனர் கலையருவி மன்னார்
சட்டத்தரணி ஜனாப் எம்.எம்.சபுறுதீன்- தலைவர் ஆர்.பி.ஆர் நிறுவனம் மன்னார்
திருவாளர் ம.இரவீந்திரன் -ஆசிரிய ஆலோசகர்- மன்னார் கல்வி வலயம்
சட்டத்தரணி திருவாளர் எஸ்.விநோதன் செயலாளர்-பா.அபிவிருத்திச்சங்கம்.மன்-சித்திவிநாயகர் இந்துக்கல்லூரி
கௌரவ விருந்தினர்களாக…
ஜனாப் மக்கள் காதர் -சிரேஸ்ட உபதலைவர் மன்னார் தமிழ்ச்சங்கம்
திருவாளர் செ.மாசிலாமணி- தலைவர் கார்மேல் அன்னை கலாமன்றம் நானாட்டான்
கலாபூஷணம் எஸ் செல்லத்துரை- கலைமகள் கலாமன்றம்-மடு
திருவாளர் ஏ.ரி.மோகன்ராஜ் -இணைப்பாளர் திருமறைக்கலாமன்றம் மன்னார்
திருவாளர் தே.கிறிஸ்ரி டோமினிக்துரம் -தலைவர் வளர் கலைமன்றம் பேசாலை
இவர்களுடன் மாணவமாணவிகள் ஆசிரியர்கள் பாடசாலைச்சமூகத்தினர் பெற்றோர்கள் என அனைவரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
இவ்விழாவில் வைபவரீதியாக விருந்தினர்கள் வரவேற்றலுடன் மங்கள விளக்கினை அதிதிகள் ஏற்றிவைத்தலுடன் தமிழ்த்தாய் வாழ்த்தினை மன்-சித்திவிநாயகர் இந்துக்கல்லூரி மாணவிகள் இசைக்க வரவேற்புரையினை சோ.றோகன்றாஜ் நிகழ்த்த
வரவேற்பு நடனம் கலார்ப்பனா நாட்டியப்பள்ளி மாணவிகள் வழங்கினர் தலைமையுரையினை மஹா ஸ்ரீ தர்மகுமார சர்மா அவர்கள் வழங்க….
பாரதியார் பாடல் சங்கீத ஆசிரியர் குழாம்
நடனம்- மன்-சித்திவிநாயகர் இந்துக்கல்லூரி மாணவிகள் வழங்க
நடனம்- செல்வி ஆ.ஜீவிதா குழுவினர்
சிறப்பு கவியாக ....
துயர் உண்டோ துணிவுள்ளவர்க்கு - ஜே.ஆர்.மயூரன் கவிஞர்
துயர்களைத்தீர்க்கவோர் வழியில்லையோ -கட்ஷன் இளங்கவிஞர்
ஆயுதம் செய்வோம் நல்ல காகிதம் செய்வோம்- ந.பிரதீப் கவிஞர்
சிறப்பு பட்டிமன்றம் பாரதியின் சிந்தனைகளை சமூகம் பயன்படுத்திக்கொண்டதா? பயன்படுத்தத் தவறிவிட்டதா?
நடுவர் திரு.கே.எஸ்.வசந்தகுமார் - தலைவர் பிரதேச கலாசாரப்பேரவை மன்னார்
பயன்படுத்திக்கொண்டது…
சோ.றோகன்றாஜ்
பா.சதீஷ்
பயன்படுத்த தவறிவிட்டது....
ம.தர்மகுமார சர்மா
எஸ்.ஏ.உதயன்
சிறப்புரையினை பிரதி அதிபர் கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக்கலாசாலை
வீழ்வேனென்று நினைத்தாயோ தலைப்பில் லலீசன் அவர்கள் சிறப்புரையாற்றினார்.
அருட்பணி தமிழ்நேசன் அவர்கள் சிறப்புரையாற்றினார்.
மன்னார் மாவட்டதில் கல்விப்பணிக்காகவும் சமூகசேவையினை செய்தமைக்காகவும் 06 கலைஞர்களுக்கு சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டது...
01-ஜனாப் மக்கள் காதர் மூத்த ஊடகவியலாளர்-சமூகப்பணி விருது
02-நியூ மன்னார் இணையம் -சிறந்த ஊடகத்திற்கான விருது
03-திரு.ஆபேல் றெவ்வல் -கல்விப்பணி விருது
04 திருமதி ஸ்ரான்லி டிமெல் மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்-பெண்ணியல் விருது
05-திருவாளர் லலீசன் தமிழியல் விருது
06-பிருந்தாவனன் அன்னை இல்லம் செயலாளர்- சமூதாயப்பணி விருது
இவர்களுடன் பிரதம விருந்தினராக செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு திருமுருகன் தலைவர் சிவபூமி அறக்கட்டளை நிதியம். அவர்களுக்கு சிறப்பு விருதாக பாரதியார் நினைவு விருது வழங்கப்பட்டதோடு பாரதியார் விழா கவிதைப்போட்டியில் பங்குபற்றியவர்களுக்கான நினைவுச்சின்னமும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது ...
நன்றியுரையினை பா.சதீஷ் அவர்கள் வழங்க நிகழ்ச்சித்தொகுப்பினை எஸ்.சதீஸ் வழங்க தமிழ்மொழிவாழ்த்தினை லி.சுபேந்தினி குழுவினர் வழங்க விழா இனிதே நிறைவுற்றது.
தமிழுக்கு தன்னைத்தந்து ஆசித்தவன்
தரணியினை கவியால் நேசித்தவன்
தமிழ்மகன் பாராதியார் புகழ் பாடும்
தக்கதோர் விழா இந்த பாரதியார் விழா….
பாராதீயார் புகழ் வாழ்க தமிழ் என்றும் வளர்க…
மன்னார் மாவட்ட சைவக்கலை இலக்கிய மன்றம் பெருமையுடன் நடாத்திய மகாகவி பாரதியார் விழா இன்று 30-01-2016 (முழுமையான படங்களுடன்)
Reviewed by Author
on
January 30, 2016
Rating:
No comments:
Post a Comment