அண்மைய செய்திகள்

recent
-

3 மருத்துவ கல்லூரி மாணவிகள் கிணற்றில் குதித்து தற்கொலை.


விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே 3 மருத்துவ மாணவிகள் தற்கொலை செய்து கொண்டது ஏன் என்பது குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் இந்த மாணவிகள் சாவில் மர்மம் இருப்பதாக பெற்றோர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
மேலும் மாணவிகள் உடலை பரிசோதனை செய்ய சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும் கோரியுள்ளனர் .

கள்ளக்குறிச்சி சின்னசேலம் அடுத்த பங்காரம் பகுதியில் இயற்கை மருத்துவ யோகா கல்லூரி உள்ளது . இங்கு அடிப்படை வசதிகள் இல்லை என குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக மாணவிகள் பல முறை புகார் அளித்துள்ளனர் .மாவட்ட கலெக்டரிடமும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புகாரை தெரிவித்த சில மாணவிகள் சிலருக்கு நெருக்கடிகள் வந்ததாக தெரிகிறது. .

இதனால் மனம் பாதிக்கப்பட்ட திருவாரூர் கள்ளத்தெருவை சேர்ந்த வெங்கடேசன் மகள் பிரியங்கா (21) , திருவெற்றியூர் அடுத்து எர்ணாவூரை சேர்ந்த தமிழரசன் மகள் மோனிஷா 21 காஞ்சிபுரம் செய்யாறு சேர்ந்த ஏழுமலை மகள் சரண்யா ஆகியோர் கிணற்றில் பிணமாக கிடந்தனர் . ஒரே நாளில் 3 மாணவிகள் தற்கொலை செய்து கொண்டது இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாணவிகள் தற்கொலை தொடர்பாக கல்லூரியில் போலீஸ் அதிகாரி மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர்கள் விசாரித்து வருகின்றனர் . இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது மாணவிகள் தற்கொலைக்கு முன்பு ஒரு கடிதம் எழுதி வைத்துள்ளனர். இந்த கடிதத்தில் கல்லூரி நிர்வாகம் எங்களுக்கு சிரமம் கொடுத்துள்ளனர் என்று கூறியிருக்கின்றனர். மற்ற விஷயங்கள் என்ன உள்ளது என்பதை இப்போது கூற முடியாது என்றார் .
கல்லூரியில் என்ன தான் பிரச்சனை ?

அரசு கோட்டாவில் சேர்க்கப்பட்டாலும் கல்லூரி நினைக்கும் கட்டணத்தையே வசூலித்து வந்தனர் . ஒரே ஒரு நபர் தான் பாடம் படித்து பயிற்றுவிக்க இருந்துள்ளார் . இது வரை இங்கு படித்து முடித்து யாரும் சர்டிபிகேட் வாங்கியதில்லை என்றும் குற்றம் சாட்டுகின்றனர். அடிப்படை வசதி இல்லாமல் இருப்பதால் கல்லூரியில் இருந்து விலகுவதாக கூறினாலும் கட்டிய இரண்டு லட்சம் பணம் திருப்பி கொடுக்கவில்லை . இதனால் மன உளச்சல் கொடுப்பதால் எதிர் காலம் வீணாகி விடும் என்பதால் இந்த மாணவிகள் 3 பேரும் தற்கொலை செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

மகள் கொலை: தந்தை கண்ணீர் ;

மோனிஷாவின் தந்தை தமிழரசன் கூறுகையில்: எனது மகள் அடித்து கொல்லலப்பட்டுள்ளார். வெள்ளிக்கிழமை கொடுத்த சாப்பாடு அவர் சாப்பிடவில்லை. மாலையில் என்னிடம் பேசினார். ஒரு மணி நேரத்தில் அவர் அடித்து கொல்லப்பட்டுள்ளார் என்றார்.

கல்லூரிக்கு சீல் வைப்பு: இன்று மதியம் இந்த கல்லூரிக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர் . கலெக்டர் லட்சுமி, ஆர்டிஓ பத்ரிநாத், டிஎஸ்பி மதிவாணன் , தாசில்தார் சையது காதர் ஆகியோர் சீல் வைத்தனர் . கல்லூரியில் படித்து வந்த மாணவ, மாணவிகள் வீட்டிற்கு அனுப்பி வைக்கும் பணி நடந்து வருகிறது.

எம் ஜி ஆர் மருத்துவ கல்லூரி பல்கலையின் கீழ் செயல்படும் இந்த கல்லூரியில் லேப் உள்பட அடிப்படை வசதிகள் இல்லை என்ற புகார் எழுந்தது. இதனால் இந்த கல்லூரிக்கு தடை விதிக்க வேண்டும் என ஏற்கனவே பல புகார்கள் கூறப்பட்டன. கடந்த அக்டோபர் மாதம் 6 பேர் தற்கொலைக்கு முயன்றனர் ஆனாலும் எவ்வித நடவடிக்கையும் மத்திய , மாநில அரசுகளால் எடுக்கப்படவில்லை. தற்போது மாணவிகள் சாவுக்கு காரணமான கல்லூரி நிர்வாகம் தாளாளர் ஆகியோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவிகளும் , பெற்றோர்களும் வலியுறுத்தியுள்ளனர்.



3 மருத்துவ கல்லூரி மாணவிகள் கிணற்றில் குதித்து தற்கொலை. Reviewed by Author on January 24, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.