80 பேருக்கு ஒரு கழிவறை.. சேற்றில் வளரும் குழந்தைகள்: மிகவும் மோசமான சூழ்நிலையில் வாழும் அகதிகள்...

பிரான்ஸ் நாட்டின் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள அகதிகள் சேறு ,சகதிகளுக்கு இடையில் மிகவும் மோசமான சூழ்நிலைகளில் வாழ்ந்து வரும் தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிரியா மற்றும் ஈராக்கில் நடைபெற்றுவரும் உள்நாட்டு போர் காரணமாக பாதிக்கப்பட்ட அகதிகள் பிரித்தானியா செல்வதற்காக ஐரோப்பாவை நோக்கி படையெடுக்கின்றனர்.
அவர்களில் பெரும்பாலானொர் பிரான்ஸ் எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்ட அங்குள்ள முகாம்களில் தங்க வைக்கப்படுகின்றனர்.
இந்நிலையில் அவர்கள் மிகவும் மோசமான சூழ்நிலைகளில் வாழ்வதாக தகவல் வெளியாகியுள்ளது.
வடக்கு பிரான்ஸில் உள்ள டுன்கிர்க்(Dunkirk) நகரில் பலத்த மழை மற்றும் காற்று வீசியதால் முகாம் அமைந்துள்ள கிராண்டி- சிந்தே பகுதி குப்பை கூளமாக மாறியுள்ளது.
இதன் காரணமாக சேறு,சகதிகளுக்கு இடையில் அவர்கள் வாழும் நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும், அங்கு 2600க்கும் மேற்பட்ட அகதிகள் வசிப்பதாகவும் அவர்களுக்கு குடிநீர் வழங்குவதற்கு 3 குடிநீர் நிலையங்கள் மட்டுமே உள்ளதாக கூறப்படுகிறது.
அதேபோல் 86 அகதிகளுக்கு 1 கழிவறை என்ற நிலை உள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதன்காரணமாக அங்குள்ள 200க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு நோய் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ள அவர்கள், உடனடியாக இதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.
இந்நிலையில் சுமார் 2500 அகதிகள் தங்குவதற்கு ஏற்ப புதிதாக கட்டிமுடிக்கப்பட்ட முகாம் ஒன்று அடுத்த மாதம் திறக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதுவரை இந்த சகதிகளுக்கு இடையில் வாழும் நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
80 பேருக்கு ஒரு கழிவறை.. சேற்றில் வளரும் குழந்தைகள்: மிகவும் மோசமான சூழ்நிலையில் வாழும் அகதிகள்...
Reviewed by Author
on
January 13, 2016
Rating:

No comments:
Post a Comment