மிகப்பெரிய வாகன போக்குவரத்து கப்பல் இலங்கையில்...
மிகப்பெரிய வாகன போக்குவரத்து கப்பல் இலங்கை அம்பாந்தோட்டை துறைமுகத்தில் தரித்துள்ளது
ஜப்பானிலிருந்து இலங்கைக்கு வந்துள்ள இக்கப்பலில் 7,700 வாகனங்களை கொண்டு செல்லலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
Hyperion Highway எனப்படும் இக்கப்பலிலிருந்து இலங்கையின் வாகனத் தேவைக்காக இறக்குமதி செய்யப்பட்ட 553 வாகனங்கள் அம்பாந்தோட்டை மாகம்புர துறைமுகத்தில் இறக்கி வைக்கப்பட்டன.
கடந்த 3 மாதங்களுக்கு முன் தனது பயணத்தை ஆரம்பித்த இக்கப்பல் ஜப்பானிலிருந்து உலகின் பல்வேறு துறைமுகங்களுக்குச் சென்றுள்ளதோடு, அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கான அதன் வருகையையிட்டு சிறிய வரவேற்பு நிகழ்வும் இடம்பெற்றது.
இதன்போது இலங்கைத் துறைமுக அதிகார சபைக்கும் குறித்த கப்பலின் அதிகாரிகளுக்கும் இடையே ஞாபகச் சின்னங்கள் பரிமாறப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மிகப்பெரிய வாகன போக்குவரத்து கப்பல் இலங்கையில்...
Reviewed by Author
on
January 13, 2016
Rating:

No comments:
Post a Comment