அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் இணையத்தில் வெளிவந்த செய்திக்குறிப்பிற்கு மறுப்புத்தெரிவித்து மன்னார் நகர சபைச்செயலாளர் அவர்களின் அறிக்கை இதோ…..!

மன்னாரில் இருந்து வடமாகாண பிரதம செயலாளருக்கு பகிரங்க மடல் எனும் தலைப்பில்  வெள்ளிக்கிழமை 01-01-2016 நியூ மன்னார் இணையத்தில் வெளிவந்த செய்திக்குறிப்பிற்கு  மறுப்புத்தெரிவித்து மன்னார் நகர சபைச்செயலாளர் அவர்களின் அறிக்கை மற்றும் விளக்கம் இதோ…..!

மன்னாரில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட தழிழ் தேசியக் கூட்டமைப்பு தலைவர் உறுப்பினர்களை பகடக்காய்களாக செயலாளர் பயன்படுத்தியுள்ளர் என்று குறிப்பிட்டப்பட்டுள்ளது.

 மன்னார் மக்களால் தெரிவு செய்யப்பட்ட மேற்படி உறுப்பினர்கள் அந்தளவு அறிவற்றவர்களாக இருக்க முடியாது அவர்களை ஏமாற்ற வேண்டிய தேவையுமில்லை.

மேலும் மன்னார் நகரசபையால் மேற்கொள்ளப்பட்டுள்ள வேலைகள் பெரும்பாலானவை சபை இருந்த காலத்தில் அவர்களால் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்காமைவாகவே மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஏனைய வேலைகள் கௌரவ மாகாண அமைச்சர் மாகாண சபை உறுப்பினர்களின் நிதி ஒதுக்கீட்டில் மூலம் அவர்களால் சுட்டிக்காட்டப்படட வேலைகளும் பிரதேச செயலாளர் நிதி ஒதுக்கீடு “திவி நெகும” காரணமாக அவரால் தெரிவு செய்யப்பட்டு சுட்டிக்காட்டப்பட்ட வேலைகளையே நாம் மேற்கொண்டுள்ளோம்.

அத்துடன் இவ்வேலைகள் வெளிப்படைத்தன்மையுடன் கச்சேரியில் பதிவு செய்யப்பட்ட ஒப்பந்தகாரர்கள் மூலமாக கேள்வி கோரல் செய்யப்பட்டு வழங்கப்பட்டுள்ளது.

சில வேலைகள் பிரதேச செயலகம் மற்றும் உள்ளுராட்சி உதவி ஆணையாளரால் சிபார்சு செய்யப்பட சங்கங்கள் மூலமாகவும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அத்துடன் சேமக்காலைக்கு எம்மால் மதில்கட்டப்படுவதாக கூறப்பட்டது தவறு இவ்வருட வருடாந்த பாதீட்டில் ஒதுக்கப்பட்ட திண்மக்கழிவு முகாமைத்துவ நிலையத்திற்கு கட்டப்படும் சுற்றுமதிலாகும்.

இந்நிலையத்தில் பல மில்லியன் பெறுமதியான இயந்திரங்கள் காணப்படுவதுடன் இங்கு எம்மால் சேகரிக்கப்பட்டும் கழிவு மூலம் இயற்கை பசளை தயாரிக்கப்பட்டு வருகின்றது.
இவ்வாறன செயற்பாடானது கடந்த காலங்களில் நகரசபையில் உப ஒப்பந்தங்கள் என்ற பெயரில் சபை நிதியை சுருட்டிக் கொண்டவர்களுக்கு தற்போது தடைப்பட்டதே முக்கிய காரணமாகும்.

 இது தொடர்பான ஏதும் விளக்கங்களோ விபரங்களோ தேவைப்படும் பட்சத்தில் நேரடியாக என்னுடன் தொடர்பு கொள்ள முடியும் என்பதனை தயவுடன் அறியத்தருகின்றேன்.

யாராக இருந்தாலும் என்னில் சுமத்தப்பட் குற்றத்தினை உறுதிப்படுத்த முடிந்தால் நேரில் எனது அலுவலகத்துக்கோ அல்லது 0232222591 இந்த தொலைபேசி இலக்கத்திற்கோ தொடர்பு கொள்ளலாம்.

 நான் எங்கும் போகவில்லை இங்கு தான் இருக்கிறேன்.
நேர்மையாக வேலை செய்கின்ற போது இவ்வாறான அறிக்கைகள் எனது சேவையை தடைசெய்வதாகவும் குழப்பத்தினை உண்டுபண்ணுவதாகவும் உள்ளது…..


தொடர்புபட்ட செய்தி ..
வடமாகாண பிரதம செயலாளருக்கு மன்னாரில் இருந்து பகிரங்க மடல்
மன்னார் இணையத்தில் வெளிவந்த செய்திக்குறிப்பிற்கு மறுப்புத்தெரிவித்து மன்னார் நகர சபைச்செயலாளர் அவர்களின் அறிக்கை இதோ…..! Reviewed by Author on January 03, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.