உலகின் மிகப் பெரிய நீல மாணிக்கக்கல் இலங்கையில் கிடைத்துள்ளது!
இதுவரை கிடைக்கப்பெற்றதில் மிகப்பெரிய நீல மாணிக்கக் கல் தொடர்பில் இலங்கை இரத்திரனக்கல் ஆய்வு நிறுவகம் தகவல் வெளியிட்டுள்ளது.
குறித்த கல்லின் நிறை 1404.49 கரெட்கள் என அந்நிறுவகம் உறுதிப்படுத்தியுள்ளது.
இதன் பெறுமதி சுமார் 100 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை இருக்குமென கணிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஏலத்தில் குறித்த கல் 175 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு விற்கப்படலாம் என குறித்த கல்லின் தற்போதைய உரிமையாளர் கணிப்பிட்டுள்ளார்.
இந்தக்கல் தன்னிடம் விற்பனைக்கு வந்த நேரம் இது உலகின் மிகப்பெரிய நீல நட்சத்திர மாணிக்க க் கல்லாக இருக்குமென தான் ஊகித்துக்கொண்ட தாகவும், எனவே அதனை துணிந்து வாங்கியதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் எவ்வளவு விலைக்கு வாங்கினார் என்ற தகவலை அவர் வெளியிட மறுப்புத் தெரிவித்துள்ளார்.
குறித்த கல் இரத்தினபுரியிலேயே அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.
உலகின் மிகப் பெரிய நீல மாணிக்கக்கல் இலங்கையில் கிடைத்துள்ளது!
Reviewed by Author
on
January 05, 2016
Rating:
Reviewed by Author
on
January 05, 2016
Rating:


No comments:
Post a Comment