மன்னார் பெரியகடை மாதர்சங்கத்தினருடனான விசேட கலந்துரையாடல் - வடக்கு கிராம அபிவிருத்தி அமைச்சர்...

மன்னார் பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட பெரிய கடை மாதர் கிராம அபிவிருத்தி சங்கத்தினரை 05-01-2016 செவ்வாய் காலை 10:30 மணியளவில் சந்தித்த வடக்கு கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்கள் அங்குள்ள பெண்களை தலைமைத்துவமாக கொண்ட குடும்பங்களுடன் விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டார்,
அந்த வேளையிலே அவர்களது மாதர் சங்க கட்டிடத்துக்கு குடிநீர், மின்விநியோகம், திருத்தவேலைகள் என்பனவற்றுக்கு இந்த ஆண்டு நிதியில் இரண்டு இலட்சம் ஒதுக்குவதாகவும், தொடர்ந்து மக்கள் தமது பிரச்சினைகள் குறைகளை மாதர் சங்கத்தினூடாக தமக்கு தெரிவிக்கலாம் என்றும், தமக்கு நிதிகள் வரும்போது முடிந்த உதவிகளை வழங்குவேன் என்றும் அமைச்சர் உறுதியளித்தார்.
அத்தோடு அங்கு வாழும் மூவின மக்களுக்கும் தனது உதவிகள் வேறுபாடின்றி கிடைக்கும் எனவும் தெரிவித்தார். அதனை தொடர்ந்து அங்கு வந்திருந்த பெண்களை தலைமைத்துவமாக கொண்ட குடுமபங்களுக்கு பால்மா பெட்டிகளும் வழங்கிவைத்தார்.
மன்னார் பெரியகடை மாதர்சங்கத்தினருடனான விசேட கலந்துரையாடல் - வடக்கு கிராம அபிவிருத்தி அமைச்சர்...
Reviewed by Author
on
January 05, 2016
Rating:
Reviewed by Author
on
January 05, 2016
Rating:





No comments:
Post a Comment