அண்மைய செய்திகள்

recent
-

வவுனியா மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் ஆரம்பம், இணைத் தலைவர்களான முதலமைச்சர், செல்வம் அடைக்கலநாதன் பங்குபற்றவில்லை!


புதிய அரசாங்கம் பதவியேற்ற பின்னர் முதலாவது வவுனியா மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் இணைத்தலைவர்களான வர்த்தக கைத்தொழில் அமைச்சர் றிசாட் பதியுதீன், பாராளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தான் தலைமையில் இன்று மாலை 3.45க்கு ஆரம்பமாகி நடைபெறுகிறது.
இணைத்தலைவர்களான வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன், பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் கலந்து கொள்ளவில்லை.
முதலமைச்சர் அவசரமாக யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது அலுவலகத்திற்கு முல்லைத்தீவு அபிவிருத்திக் குழுக் கூட்டத்டதை முடித்துக் கொண்டு சென்றதால் அவர் சார்பாக வடமாகாண கல்வி அமைச்சர் குருகுலராஜா கலந்து கொண்டுள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதால் இன்றைய அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

இந்த கூட்டத்தில் மாவட்ட அபிவிருத்தி, வீதிப் பிரச்சனை, மீள்குடியேற்றம், வீட்டுத்திட்டம், வாழ்வாதhர அபிவிருத்தி உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து பேசப்படுகின்றது.

இக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், சிவமோகன், சாள்ஸ் நிர்மலநாதன், வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம், வடமதாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனீஸ்வரன், வடமாகாண சபை உறுப்பினர்களான ஜி.ரி.லிங்கநாதன், எம்.பி.நடராஜ், இ.இந்திரராசா, ம.தியாகராசா, தர்மபால செனவிரட்ண, ஜெயதிலக மற்றும் திணைக்கள தலைவர்கள், பிரதேச செயலாளர்கள், பொலிஸ் அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

வவுனியா மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டத்தில் பொதுமகனொருவர் விரட்டியடிப்பு

வவுனியா மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டத்தில் தமது கிராம வீதி தொடர்பான பிரச்சனையை வெளிப்படுத்திய பொதுமகனொருவர் அரச அதிகாரிகளால் வெளியேற்றப்பட்டுள்ளார்.

வவுனியா அபிவிருத்திக்குழுக் கூட்டம் இணைத்தலைவர்களான அமைச்சர் றிசாட் பதியுதீன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தான் ஆகியோர் தலைமையில் இன்று இடம்பெற்றது.

இதன்போது வீதிகள் திருத்தப்படாமை குறித்து அரச அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் இணைத்தலைவர்களும் கலந்தாலோசித்துக் கொண்டிருந்த போது வவுனியா, கணேசபுரம் கிராமத்தைச் சேர்ந்த பொதுமகன் ஒருவர் தமது பகுதி வீதி நீண்டகாலமாக புனரமைக்கப்படாது உள்ளதாக தெரிவித்தார்.

அத்துடன் இந்த விடயம் தொடர்பில் பலரிடம் தெரிவித்தும் அதற்கான தீர்வு எட்டப்படவில்லை எனவும் வீதியின் வீடியோ ஆதாரம் தற்போது தம்மிடம் உள்ளதாகவும் தெரிவித்த பொதுமகன் அதனை பார்வையிட்டு தமது வீதியை நடக்கக்கூடிய வகையிலாவது புனரமைத்து தருமாறு கோரிக்கை விடுத்தார்.

குறித்த பொதுமகனின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட இணைத்தலைவர் அமைச்சர் றிசாட் பதியுதீன் குறித்த வீதி தொடர்பில் தாம் கூட்டத்தில் பேசி வீதியை திருத்துவதற்கான நடவடிக்கையை எடுப்பதாகவும் தெரிவித்ததுடன், குறித்த வீடியோ பதிவினை அரசாங்க அதிபரிடம் வழங்குமாறும் கோரியிருந்தார்.

இதனை அடுத்து அங்கு வந்த மாவட்ட செயலகத்தின் இரு பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள், உன்னை உள்ளே விட்டது யார்? இங்கு ஏன் வந்தாய் எனக் கூறி உடனடியாக பொதுமகனை மண்டபத்தில் இருந்து வெளியேற்றியுள்ளனர்.

எனினும் வீடியோ ஆதாரத்தினை அரசாங்க அதிபரிடம் ஒப்படைக்குமாறு இணைத்தலைவரினால் கூறப்பட்ட போதும் அதனை கொடுக்கவிடாது குறித்த அதிகாரிகள் பொதுமகனை விரட்டியடித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



வவுனியா மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் ஆரம்பம், இணைத் தலைவர்களான முதலமைச்சர், செல்வம் அடைக்கலநாதன் பங்குபற்றவில்லை! Reviewed by Author on January 25, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.