அண்மைய செய்திகள்

recent
-

முடிவுக்குவந்தது ரணில் – விக்னேஸ்வரன் நிழல் யுத்தம்....


பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனுக்குமிடையில் அண்மைக்காலமாக நிலவி வந்த முரண்பாடுகள் யாழில் நடைபெற்ற தேசிய தைப்பொங்கல் நிகழ்வின் மூலம் நிறைவுக்கு வந்துள்ளன.
யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற தேசிய தைப்பொங்கல் நிகழ்வில் அதிதியாகப் பங்கேற்பதற்காக வருகைதந்திருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை மண்டபத்தின் வாயிலுக்குச் சென்று கைலாகுகொடுத்து பொன்னாடை போர்த்தி தலைப்பாகை சூடி இன்முகத்துடன் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் வரவேற்றிருந்தார்.

அதனைத் தொடர்ந்து இருவரும் அருகருகிலுள்ள ஆசனங்களில் அமர்ந்திருந்ததோடு விழாவின் ஆரம்பம் முதல் இறுதிவரையில் நீண்டநேரமாக பரஸ்பரம் உரையாடிக்கொண்டிருந்ததை அவதானிக்க முடிந்தது.

முன்னதாக ஆட்சி மாற்றத்தின் பின்னர் முதற்தடவையாக வடமாகாணத்துக்கு விஜயம் செய்த பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜயவர்தன இராணுவத்தினரை வடக்கிலிருந்து வெளியேற்றுவது தொடர்பாக கடும் தொனியிலான கருத்துக்களை வெளியிட்டிருந்தார்.

இதனையடுத்து வடமாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன் அன்றைய காலத்தில் ஜே.ஆர்.ஜெயவர்த்தன தனது மருமகனான ரணில் விக்கிரமசிங்கவைப் பயன்படுத்தி தந்திரோபாயமாக அரசியல் செயற்பாடுகளை எவ்வாறு முன்னெடுத்தாரோ அதேபோன்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் தனது மருமகனான ருவன் விஜயவர்தனவைப் பயன்படுத்தி நகர்வுகளை மேற்கொள்வதாக சாடியிருந்தார்.

அதனைத்தொடர்ந்து இருதரப்பினரும் பரஸ்பர கருத்துக்களை வெளியிட்ட நிலையில் முரண்பாடுகள் ஏற்பட்டிருந்தன.

குறிப்பாக 100 நாள் அரசாங்கத்தின் காலத்தில் இருவரும் முன்னர் பகைமை பாராட்டியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆட்சி மாற்றத்தின் பின்னர் வலி.வடக்கின் ஒரு பகுதியில் காணிகளை விடுவிக்கும் வைபவத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வடமாகாண முதலமைச்சர் பங்கேற்றிருந்தபோதும் இருவரும் எந்தவிதமான உரையாடல்களையும் மேற்கொள்ளவில்லை.

அதனைத்தொடர்ந்தும் இருதரப்பினரிடையேயும் எவ்விதமான பேச்சுவார்த்தைகளோ கலந்துரையாடல்களே அற்ற முரண்பாடான சூழ்நிலையொன்றே நிலவிவந்தது.

இந்த நிலையில் நேற்றையதினம் அந்த நிலைமையில் மாற்றமொன்று ஏற்பட்டிருந்ததை அவதானிக்க முடிந்தது.





முடிவுக்குவந்தது ரணில் – விக்னேஸ்வரன் நிழல் யுத்தம்.... Reviewed by Author on January 16, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.