எலியின் முதுகில் மனிதக்காது விருத்தி...
ஜப்பானைச் சேர்ந்த விஞ்ஞானிகள் எலியொன்றின் முதுகில் மனித காதொன்றை வெற்றிகரமாக வளர்ச்சியடையச் செய்துள்ளதாக உரிமை கோரியுள்ளனர்.
இந்த செயன்முறையைப் பயன்படுத்தி வளர்ச்சியடையச் செய்யப்படும் காதுகளை எதிர்வரும் 5 வருட காலத்துக்குள் மனிதர்களில் பயன்படுத்த முடியும் என நம்புவதாக டோக்கியோ மற்றும் கயோட்டா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்தக் காதுகளை பிறப்பு ரீதியிலும் நாய்களால் கடித்துக் குதறப்பட்டும் காதுகளை இழந்த சிறுவர்களுக்கு பொருத்தி அவர்களுக்கு இயல்பு வாழ்க்கை வாழ்வதற்கு உதவியளிக்கக் கூடியதாக இருக்கும் என எதிர்பார்ப்பதாக அவர்கள் கூறுகின்றனர்.
அது மட்டுமல்லாது போர்களிலும் விபத்துகளிலும் காதுகளை இழந்தவர்களுக்கும் இவ்வாறு ஆய்வுகூடத்தில் விருத்திசெய்யப்படும் காதுகள் உதவும் என அவர்கள் தெரிவிக்கின்றனர்.
தற்போது நடைமுறையில் காதுகளை இழந்தவர்களுக்கு காது கட்டமைப்பை உருவாக்கும் செயற்கிரமத்தின் போது நோயாளியின் விலா எலும்புகளிலிருந்து பெறப்பட்ட கசியிழையத்தைப் பயன்படுத்தியே காதுகள் விருத்தி செய்யப்படுகின்றன.
இவ்வாறு விலா எலும்பு கசியிழையம் அகற்றப்படுவது ஆறாத புண் ஏற்பட்டு நோயாளி துன்பப்படுவதற்கு வழிவகை செய்வதாக உள்ளதுடன் இந்த செயன்முறைக்காக நோயாளி ஒரு தொகை அறுவைச்சிகிச்சைகளுக்கும் உட்பட நேரிடுகிறது.
இந்நிலையில் புதிய காது விருத்தி முறைமையில் விலா எலும்பு கசியிழையத்துக்குப் பதிலாக மாதிரிக் கலங்கள் பயன்படுத்தப்படுவதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
ஆய்வுகூடத்தில் புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி விருத்தி செய்யப்படும் காதுக்கான அடிப்.படைக்கூறுகள் காது வடிவான பிளாஸ்டிக் கட்டமைப்பில் உட்செலுத்தப்பட்டு எலியொன்றின் முதுகில் பொருத்தப்பட்டு வளர்ச்சியடையச் செய்யப்படுவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
எலியின் முதுகில் மனிதக்காது விருத்தி...
Reviewed by Author
on
January 26, 2016
Rating:

No comments:
Post a Comment