அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மடுப்பிரதேசத்தில் அமைந்துள்ள பூமலர்ந்தான் கிராமம் மலர உதவுங்கள்…



மன்னார் மண்ணில் பெரும் பிரிவுகளான 05 பிரதேச செயலகங்களில் மடு வலையப்பிரதேசமும் ஒன்று இப்பிரதேசத்தில் புகழ் பெற்ற மடுக்கோவில் செல்லும் பிரதான வீதியில் வலக்கைப்பக்கமாக 02ம் கட்டை என அழைக்கப்படும் இடத்தில் அமைந்துள்ள கிராமம் தான் பூமலர்ந்தான் கிராமம்.

இக்கிராமமானது இந்தியா வீட்டுத்திட்டத்தின் மூலம் அரை ஏக்கர் காணியில்  அரசாங்கம் 2015ஆண்டு 02ம் மாதம் மக்கள் தற்காலிமாக அமைத்த குடிசைகளில் குடியமர்த்தப்பட்டனர். இங்கு குடியமர்த்தப்பட்டவர்கள் தம்பனைக்குளத்தினை சேர்ந்தவர்கள் இவர்கள் தம்பனைக்குளத்தில் வசிக்க முடியாத நிலை காரணம் மழைகாலத்தில் அருவியற்றில் ஏற்படுகின்ற வெள்ளப்பெருக்கு காரணமாக அங்கு வாழ முடியாத நிலை அதற்கு ஈடாகத்தான் 02ம் கட்டை பூமலர்ந்தான் கிராத்தினை அமைத்து கொடுத்தனர்.
இக்கிராமத்தில் 239 குடும்பங்கள் வசிக்கின்றனர் இவர்களில் 82 மாணவ மாணவியர்கள் பாடசாலை செல்கின்றவர்களாக உள்ளனர் இந்தக்கிராமத்தில் பாடசாலை-வழிபாட்டுத்தளங்கள்-வைத்தியசாலை--மின்சாரம்  பிரதான பாதைகள்  என  எந்தவித வசதியற்ற நிலையில் சுடுகாட்டில் வாழ்வது போல வாழ்கின்றனர் மக்கள். கண்ணீரோடும் கவலையோடும் தான்…

இங்கிருந்து மாணவர்கள் 04 பாடசாலைகளுக்கு
1.    கட்டையடம்பன் பாடசாலை
2.    மடுறோட்  பாடசாலை
3.    கற்கிடந்த குளம் பாடசாலை
4.    முருங்கன் பாடசாலை

பாடசாலைகளில் தான்  கல்வி கற்க செல்கின்றனர் இரண்டு பேருந்துகள்தான் தனியார் பேரூந்தும் அரச பேரூந்தும்  உள்ளது இவை இரண்டிலும்  குறிக்கப்பட்ட நேரத்திற்குத்தான் வரும் அப்போது பயணத்தினை ஆரம்பித்து விடவேண்டும் தவறவிட்டால் அன்றைய செயற்பாடுகள் அவ்வளவுதான்.
இரண்டு பேரூந்துகளும் சில நேரங்களில் சனநெரிசலாக வரும் அச்சந்தர்ப்பத்தில் மாணவர்களை ஏற்றிச்செல்ல மாட்டார்கள் இப்படி பல சந்தர்ப்பங்களில் மாணவர்களின் கல்விச்செயற்பாடுகள் பாதிப்படைகின்றன அத்தோடு இல்லாமல் காலை பாடசாலை செல்கின்ற மாணவ மாணவிகள் பாடசாலை 1-30 மணிக்கு முடிந்தாலும் 3மணிநேரம் வீதியில்  பேரூந்திற்காக காத்திருக்க வேண்டும்.
 வீடுவந்து சேர மாலை 5 மணி ஆகி விடும் பிறகு எவ்வாறு மாணவர்கள் வினைத்திறன் மிக்க மாணவர்களாக உருவாக்க முடியும் பல மாணவர்கள் இப்படியான பல சிரமங்களுக்காக பாடசாலை பக்கமே செல்வதில்லை மாணவர்களின் கல்வி நிலை மிகவும் மோசமான நிலையில் தான் உள்ளது நேசம் கொள்ளுங்கள் அதிகாரிகளே…
இவ்விடையத்தில் கல்விச்சமூகம் அதிகாரிகள் ஆசிரிய பெருந்தகைகள் அக்கறை கொள்ள வேண்டும்.

பூமலர்ந்தான் உள்ளக பிரதான வீதியானது மிகவும் மோசமான நிலையில் தான் உள்ளது சேறும் சகதியும் வெள்ளமாய் காட்சி தருகின்றது முதலில் எமக்கு இவ்வீதியை புனரமைத்து தாருங்கள் மக்களை மீளக்குடியமர்த்தி விட்டோம் என பக்கம் பக்கமாய் வசனம் பேசுவதை விட்டு இப்பக்கத்தை ஒரு முறை படித்து பார்த்து விட்டு பூமலர்ந்தான் கிராமத்தில் வாழுகின்ற மக்களின் மனங்களில் பூமலர சம்மந்தப்பட்ட ஒவ்வொரு அதிகாரிகளும் உடனடியாக தங்களின் சேவையை ஆரம்பியுங்கள்.

அபிவிருத்தி என்பது மக்களை குடியமர்த்தி 3-6 மாதங்களில் மக்கள் நிம்மதியாக வாழ வழியமைத்துக்கொடுக்க வேண்டும் இக்கிராமத்து மக்கள் என்ன பாவம் செய்தவர்கள் இன்னும் அகதிகளாய்…..

வட மாகாண அமைச்சர்களே பாராளுமன்ற உறுப்பினர்களே அதகாரிகளே…
தங்களின் சேவை இக்கிராமத்திற்கு உடனடியாகத்தேவை ...

---மன்னார்விழி---






மன்னார் மடுப்பிரதேசத்தில் அமைந்துள்ள பூமலர்ந்தான் கிராமம் மலர உதவுங்கள்… Reviewed by Author on January 06, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.