அண்மைய செய்திகள்

recent
-

உலக சுற்றுலா சஞ்சிகையில் இலங்கைக்கு முக்கியத்துவம்...


உலகின் புகழ் பெற்ற சுற்றுலா இதழான லோன்லி பிளானட் சஞ்சிகை (Lonely Planet Magazine's Dream Trips 2016) வௌியிட்டுள்ள முதல் பத்து சுற்றுலாத் தளங்களில் இலங்கைக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது.
சுற்றுலா தொடர்பான ஆலோசனை புத்தகங்களை, “லோன்லி பிளானட்“ நிறுவனம் வெளியிட்டு வருகிறது.

உலகளவில் சுற்றுலா பயணிகள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய சுற்றுலா தளங்கள் குறித்த விபரங்கள், அவற்றுக்கான வழிகாட்டிகள், சுற்றுலா அநுபவங்கள், ஆகியவற்றினை ஒன்றிணைத்து சஞ்சிகை வடிவில் வௌியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.

அவ்வகையில் லோன்லி பிளானட் சஞ்சிகை இவ்வாண்டுக்கான சிறந்த சுற்றுலாத்தளங்களை குறித்து மக்களுக்கு அறிவுறுத்தும் வகையில் பல இடங்களை உள்ளடக்கியதொரு பட்டியலை தயார் செய்துள்ளது.

அவற்றுள் அனைத்து மக்களுக்கும் பிடித்த முதல் பத்து இடங்களுக்குள் நமது நாட்டின் பெயரும் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. "உங்களது பயணத்துக்கான பட்டியலில் சேர்ப்பதற்கு மிகவும் அசாதரண அழகுடன் நிறைந்ததொரு இடங்களுள் இலங்கையும் ஒன்று" என நமது நாடு அவ் சஞ்சிகையில் வர்ணிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் நம் நாட்டின் அழகை விஸ்தரித்து காட்டவென சுமார் 14 பக்கங்களையும் சஞ்சிகை ஏற்பாட்டாளர்கள் ஒதுக்கியுள்ளனர். காலி, தென் கடலோரம், யால தேசிய பூங்கா, மலையக அழகு, ரயில் பாதைகளின் அழகு என அனைத்தும் அவற்றில் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உலக சுற்றுலா சஞ்சிகையில் இலங்கைக்கு முக்கியத்துவம்... Reviewed by Author on January 05, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.