மன்னார் மாவட்ட அபிவிருத்தி தொடர்பான கூட்டங்களுக்கு மீனவ சங்க பிரதிநிதிகள் அழைக்கப்பட வேண்டும்.என்.எம்.ஆலம்.
எதிர்வரும் காலங்களில் மன்னார் மாவட்ட அபிவிருத்திகள் தொடர்பாக மன்னார் மாவட்டச் செயலகத்தில் இடம் பெறும் கூட்டங்களில் கலந்து கொள்ள தமக்கு அழைப்பு விடுக்க வேண்டும் என மன்னார் மாவட்ட மீனவ கூட்டுறவு சங்கங்களின் சமாச தலைவர் என்.எம்.ஆலம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இவ்விடையம் தொடர்பாக மன்னார் மாவட்ட மீனவ கூட்டுறவு சங்கங்களின் சமாச தலைவர் என்.எம்.ஆலம் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பிரியவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
-குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிடுகையில்,,,,
40 மீனவ கிரமங்கள் கொண்டதும் 32 மீனவ கூட்டுறவு சங்கங்களை தன்னகத்தே கொண்டுள்ள மாவட்டத்தில் மீனவர் நலன் சார்ந்த விடயங்களில் மிகவும் தீவிரமாக செயற்பட்டு வரும் மாவட்ட மீனவ கூட்டுறவு சங்கங்களின் சமாசம் என்பதனை தாங்கள் அறிவீர்கள்.
இருந்தும் மாவட்ட அபிவிருத்தி மற்றும் மீனவர்களின் அபிவிருத்தி செயற்பாடுகள் தொடர்பான கூட்டங்களுக்கு கடந்த காலங்களில் முன்னுரிமை அளிக்கப்பட்டு கௌரவமாக அழைப்பு விடுவிக்கப்பட்டன.
இருந்தும் அண்மைக் காலங்களில் இந்த நடைமுறை பின் பற்றப்படுவதில்லை.
இதனால் மீனவர்களின் பல தேவைகள்,அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் உரிய சபையில் தெரிவிப்பதற்கான வாய்ப்பும் இம் மீனவர்களுக்குக் கிடைப்பதில்லை.
குறிப்பாக அபிவிருத்திக்குழு தலைவர்களை கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்ளும் கூட்டங்களில் இம் மீனவ சமூகமும் கலந்து கொண்டு தங்களது தேவைகளை கூறும் வாய்ப்பு வழங்கப்படாதது வருந்தத்தக்கது.
மன்னார் மாவட்டத்தில மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுபவர்கள் ஏனைய தொழில் புரிபவர்களைவிட அதிகம் என்பது தாங்கள் அறிந்ததே.
எனவே எதிர்காலத்தில் கூட்டுறவு சங்க சமாசத்திற்கு அதற்கான வாய்ப்பை வழங்கி உதவுமாறு தங்களை தயவுடன் கேட்டுக்கொள்கிறேன்.என குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்ட அபிவிருத்தி தொடர்பான கூட்டங்களுக்கு மீனவ சங்க பிரதிநிதிகள் அழைக்கப்பட வேண்டும்.என்.எம்.ஆலம்.
Reviewed by NEWMANNAR
on
January 29, 2016
Rating:
No comments:
Post a Comment