மன்னார் மறைமாவட்டம் ஏற்படுத்தப்பட்டு 35 ஆண்டுகள் நிறைவு விழா.
மன்னார் மறைமாவட்டம் ஏற்படுத்தப்பட்டதை நினைவுகூரும் ஆண்டு விழாக்கள் வருடாந்தம் மன்னார் தோட்டவெளி வேதசாட்சிகள் அன்னை ஆலயத்தில் இடம் பெற்று வருகின்றன.
இதனடிப்படையில் மன்னார் மறைமாவட்டம் ஏற்படுத்தப்பட்ட 35 ஆண்டுகள் நிறைவு விழா நாளை 30.01.2016 (சனிக்கிழமை) காலை 7.30 மணிக்கு தோட்டவெளி வேதசாட்சிகள் அன்னை ஆலயத்தில் இடம்பெறவுள்ளது.
இவ்வாண்டு இவ்விழாவைச் சிறப்பிக்க யாழ்ப்பாண மறைமாவட்டத்தின் புதிய ஆயர் மேதகு ஜஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை மன்னாருக்கு வருகைதருகின்றார்.
அவரின் தலைமையில் இந்த விழாத் திருப்பலி இடம் பெறும்.
காலை 7.15 மணிக்கு யாழ்ப்பாணத்தின் புதிய ஆயரை வரவேற்கும் நிகழ்வு இடம்பெறும்.
இந்நிகழ்வில் மன்னார் மறைமாவட்டத்தின் பல்வேறு பங்குகளில் இருந்தும் இறைமக்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக மன்னார் மறைமாவட்டத்தின் ஊடக இணைப்பாளரும் கலையருவி அமைப்பின் இயக்குனருமான அருட்திரு. தமிழ் நேசன் அடிகளார் தொரிவித்தார்.
போக்குவரத்து ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளதாகவும், விளையாட்டு வினோதப் பொருட்களுக்கான விற்பனை தடைசெய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
மன்னார் மறைமாவட்டம் ஏற்படுத்தப்பட்டு 35 ஆண்டுகள் நிறைவு விழா.
Reviewed by NEWMANNAR
on
January 29, 2016
Rating:

No comments:
Post a Comment