அண்மைய செய்திகள்

recent
-

திருநங்கைகளின் வாழ்வில் ஒளி ஏற்றும் கனடா பல்கலைக்கழகம்: உலகின் முதல் ஆய்வு மையம் ஆரம்பம்....


திருநங்கைகளுக்கு ஏற்படும் இன்னல்களை அடையாளம் கண்டு அவற்றை தீர்த்து வைக்க உதவும் வகையில் உலகிலேயே முதல் முறையாக திருநங்கைகளை குறித்து ஆய்வு செய்யும் பேராசிரியர்கள் குழு ஒன்று கனடா பல்கலைக்கழகத்தில் தொடங்கப்பட்டுள்ளது.
பிரித்தானிய கொலம்பியா மாகாணத்தில் உள்ள விக்டோரியா பல்கலைக்கழகத்தில் தான் இந்த வரலாற்று சிறப்பு வாய்ந்த பேராசிரியர்கள் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க நாட்டை சேர்ந்த மிகப்பெரிய கோடீஸ்வரரும் திருநங்கையுமான Jennifer Pritzker(65) என்பவர் இந்த பேராசிரியர்கள் குழுவை நியமித்ததுடன், இதற்கு தனது Tawani அறக்கட்டளை சார்பாக ஒரு மில்லியன் டொலர் நன்கொடை அளித்துள்ளார்.

இந்த பேராசிரியர்கள் குழுவிற்கு விக்டோரியா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி வரும் திருநங்கையான Aaron Devor என்பவர் தான் தலைமை பொறுப்பு ஏற்றுள்ளார்.

இது குறித்து Aaron Devor பேசியபோது, ‘உலகம் முழுவதும் திருநங்கைகள் அன்றாடம் பல பிரச்சனைகளை எதிர்க்கொண்டு வருகிறார்கள். உலகளவில் 200 நபர்களில் ஒரு நபர் திருநங்கையாக உள்ளார்.

ஊடகங்கள் வழியாக பல வகையில் விழிப்புணர்வுகள் ஏற்படுத்தினாலும், திருநங்கைகளை இன்றளவும் ஒரு சக மனிதராக பார்க்க இந்த சமுதாயம் தயங்குகிறது.

எனவே, திருநங்கைகளுக்கு உண்மையில் என்னென்ன பிரச்சனைகள் எழுகிறது? சமுதாயம் எதனால் அவர்களை ஒதுக்கிறது? இந்த பிரச்சனைகளுக்கு எவ்வாறு தீர்வு ஏற்படுத்துவது என்பது உள்ளிட்ட கேள்விகளுக்கு விடைக்கான இந்த சிறப்பு பேராசிரியர்கள் குழு உருவாக்கப்பட்டுள்ளது.

சமுதாய புறக்கணிப்பு காரணங்களால் இன்றைய திகதியில் கனடா மற்றும் அமெரிக்க நாடுகளில் உள்ள திருநங்கைகளில் 40 சதவிகித திருநங்கைகள் தற்கொலை முயற்சியில் ஈடுப்பட்டுள்ளனர்.

கனடா நாட்டில் மட்டும் திருநங்கையாக இருப்பதனால் பெற்றோர்களின் ஆதரவு இல்லாமல் துயரமான வாழ்க்கையை வாழ்ந்து வரும் இளம் வயது திருநங்கைகள் 57 சதவிகிதத்தினர் உள்ளனர்.

ஆனால், பெற்றோர்களின் ஆதரவுடன் வாழ்ந்து வரும் திருநங்கைகள் 4 சதவிகிதம் மட்டுமே. அதே சமயம், உலகம் முழுவதும் பணி புரியும் இடங்களில் தான் திருநங்கைகளுக்கு 90 சதவிகித பிரச்சனைகள் எழுகிறது. இந்த பிரச்சனைக்கு அவசியம் தீர்வு காணப்பட வேண்டும்.

மேலும், வறுமை, பாலியல் பாகுபாடு கொடுமைகள், சம உரிமை இல்லாமை உள்ளிட்ட பல பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வுக் கண்டு திருநங்கைகளின் வாழ்வில் ஒளி ஏற்றுவதே இந்த பேராசிரியர்கள் குழுவின் முக்கிய நோக்கம் என Aaron Devor தெரிவித்துள்ளார்.


திருநங்கைகளின் வாழ்வில் ஒளி ஏற்றும் கனடா பல்கலைக்கழகம்: உலகின் முதல் ஆய்வு மையம் ஆரம்பம்.... Reviewed by Author on January 16, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.