டிக்டொக் நண்பனை நம்பியதால் யுவதிக்கு காத்திருந்த அதிர்ச்சி
திருகோணமலை சம்பூர் பொலிஸ் பிரிவிலுள்ள வீரமாநகர் பகுதியைச் சேர்ந்த 24 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட 4 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் ஈச்சிலம்பற்று பொலிஸாரால் நேற்று (14) கைது செய்யப்பட்டுள்ளனர்.
டிக்டொக் நண்பனை நம்பியதால் யுவதிக்கு காத்திருந்த அதிர்ச்சி ; சீரழியும் இளம் சமுதாயம்! | Tiktok Relationship Woman Was Raped By Four Men
முகத்துவாரம் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள்
கைது செய்யப்பட்ட இளைஞர்கள் அனைவரும் ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இலங்கைத்துறை முகத்துவாரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸாரின் ஆரம்ப விசாரணைகளின் படி, டிக்டொக் சமூக வலைத்தளத்தின் மூலம் இளைஞர் ஒருவர் குறித்த பெண்ணுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டு நேரில் சந்தித்துள்ளார்.
இதன் பின்னர், குறித்த இடத்திற்கு அவரது நண்பர்கள் வருகை தந்ததுடன், யுவதி மீது குழுவாக பாலியல் பலாத்காரம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஈச்சிலம்பற்று பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Reviewed by Vijithan
on
December 15, 2025
Rating:


No comments:
Post a Comment