வட மாகாண சபையின் அவசர அம்புலன்ஸ் சேவை இன்று ஆரம்பம்...

கிளிநொச்சி வைத்தியசாலையில் வடக்கு மாகாண சபைக்கான அவசர அம்புலன்ஸ் சேவை இன்று 2.30 மணியளவில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது
இன் நிகழ்வில் வடமாகாண சுகாதார அமைச்சர் முதன்மை அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போது,
வடமாகாணத்தில் அவசர மருத்துவ நிலைகளிலும் விபத்துக்களின் போதும் நோயாளர்களை இயன்ற அளவு விரைவாக வைத்தியசாலையில் அனுமதிப்பதன் மூலம் உயிர் இழப்பை குறைக்கும் நோக்குடனேயே ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
இந்த சேவையானது 24 மணிநேரமும் இயங்கும் என்றும் 021 222 4444, 021 222 555 என்ற அவசர அழைப்பு இலக்கத்திற்கு அழைப்பெடுத்து இலவச சேவையை பெற்றுக்கொள்ள முடியும். இந்த சேவையானது யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களுக்கே வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இன்று இந்த அவசர அம்புலன்ஸ் சேவை அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டாலும் இந்த சேவையை நடைமுறைப்படுத்த ஒரு வருடத்திற்கு முன்னரே ஆலோசனையை எமது அமைச்சின் மட்டத்திலே மேற்கொண்டிருந்தோம். அந்த தினத்திலிருந்து எமது அமைச்சினுடைய அதிகாரிகள் மாகாண பிராந்திய சேவை பணிப்பாளர்கள், கணக்காளர்கள் ஆகியோர் மிகவும் அக்கறையோடு உழைத்த உழைப்புத்தான் ஒரு சேவையாக இன்று ஆரம்பித்து வைக்கின்றோம் என தெரிவித்தார்.
நிகழ்வில் யாழ் மற்றும் முல்லைத்தீவு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனைகளுக்கு இரு வாகனங்களும் வட மாகான சுகாதார அமைச்சரினால் வழங்கி வைக்கப்பட்டது.
குறித்த நிகழ்வில் வடமாகாணன சுகாதார அமைச்சர், அமைச்சின் பணிப்பாளர் , கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், வடமாகான சபை உறுப்பினர்களான பசுபதிப்பிள்ளை, அரியரத்தினம், தவநாதன் ஆகியோரும் மற்றும் சுகாதார துறை உத்தியோகஸ்தர்களும் கலந்து கொண்டனர்.
வட மாகாண சபையின் அவசர அம்புலன்ஸ் சேவை இன்று ஆரம்பம்...
Reviewed by Author
on
January 06, 2016
Rating:
Reviewed by Author
on
January 06, 2016
Rating:



No comments:
Post a Comment