இலங்கையில் இருந்து இந்திய பிரதமருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்ட பாகிஸ்தான் பிரதமர்...
இலங்கைக்கு வந்திருக்கும் பாகிஸ்தானிய பிரதமர் நவாஸ் செரீப் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் கொழும்பில் இருந்து தொலைபேசியில் உரையாடியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் பஞ்சாப் மாநில பதன்கோட் விமானத்தளத்தின் மீது தாக்குதலை மேற்கொண்ட தீவிரவாதிகளுக்கு எதிராக உடனடியாக தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று இதன்போது அவர் உறுதியளித்தார்.
இதன்போது தாம் குறித்த தாக்குதல் தொடர்பில் தகவல்களை பாகிஸ்தானுக்கு அனுப்புவதாக மோடி, செரீப்பிடம் தெரிவித்தார்.
அத்துடன் பதன்கோட் விமானத்தள தாக்குதலில் ஈடுபட்ட அமைப்பு மீது பாகிஸ்தான் உடனடியான நடவடிக்கையை எடுக்கவேண்டும் என்று மோடி இதன்போது செரீப்பிடம் கோரிக்கை விடுத்தார் என்று இந்திய பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.
இதேவேளை இந்த தாக்குதலை அடுத்து இந்திய பாகிஸ்தான் நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் விரைவில் சந்தித்து அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கையில் இருந்து இந்திய பிரதமருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்ட பாகிஸ்தான் பிரதமர்...
Reviewed by Author
on
January 06, 2016
Rating:
Reviewed by Author
on
January 06, 2016
Rating:


No comments:
Post a Comment