மன்னார் மாவட்ட தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கத்தின் புதிய நிர்வாகத்தின் நடவடிக்ககைகள் ஆரம்பம்!
மன்னார் மாவட்ட தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கத்தின் புதிய நிர்வாகத்தின் நடவடிக்ககைகள் இம்மாதம் முதலாம் திகதி(01.02.2016) தொடக்கம் நடை முறைக்கு வந்திருக்கின்றது.
மன்னார் மாவட்ட தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கத்தின் புதிய நிர்வாகத்திற்கான தெரிவு கடந்த மாதம் இறுதியில் வாக்கெடுப்பு ஒன்றின் மூலமம் இடம்பெற்றது.
இதன் பிரகாரம் சங்கத்தின் நடப்பாண்டிற்கான தலைவர்கள் மற்றும் செயலாளர்கள் வாக்கெடுப்பின் மூலம் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
பொருளாளர் மற்றும் கணக்காய்வாளர் ஆகியோர் வாக்கெடுப்பின்றி தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை மன்னார் மாவட்ட தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கும் பேரூந்துகள் உள்ளுர் மற்றும் வெளி மாவட்டங்களுக்கான பொதுச்சேவையில் ஈடுபட்டு வருகின்றன.
குறித்த சேவையில் இடம்பெறும் குறைபாடுகள் மற்றும் மேம்பாடுகளை கவனிக்கும் பொருட்டு வழித்தடங்களுக்கான பகுதித்தலவர்களும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
மன்னார் மாவட்ட தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கத்தின் நடப்பாண்டிற்கான புதிய நிர்வாகத்தின் விபரங்கள் பின்வருமாறு:
ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை
ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே வெளி மாவட்டங்களுக்கான போக்குவரத்து மார்க்கங்களான
ஆகியோர் பகுதித்தலைவர்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இதனிடையே உள்ளுர் சேவைகளான...
மன்னார் மாவட்ட தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கத்தில் பதிவு செய்யப்பட்ட நிலையில் பொது போக்குவரத்து சேவையில் ஈடுபடும் பேரூந்துகள் தொடர்பில் பயணிகள் தமது கருத்துக்களை மேற்குறிப்பிட்ட வழித்தடங்களுக்கு பொறுப்பானவர்களின் கவனத்திற்கு தெரிவிக்க முடியும்.
அதேவேளை மன்னார் தனியார் பேரூந்து நிலையத்தில் அமைந்திருக்கும் அலுவலகத்தில் நேரடியாகவும், அங்கு வைக்கப்பட்டிருக்கும் கருத்துப் பெடிட்டியில் கடிதங்கள் மூலமாகவும் பயணிகள் தமது கருத்துக்களை முன்வைக்க முடியும் என நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

- தலைவராக கே.முருகேசு,
- உப தலைவராக ஆர்.எஸ்.கொடியன்,
- செயலாளராக டி.சுரேஸ்குமார்,
- உப செயலாளராக அ.அருள்நேசன்
ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை
- பொருளாளராக ஐ.எம்.இயாஸ்,
- கணக்காய்வாளராக கே.கேசரன்
ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே வெளி மாவட்டங்களுக்கான போக்குவரத்து மார்க்கங்களான
- மன்னார்-கொழும்பு வழித்தடத்திற்கு எஸ்.எச்.சாபீர்,
- மன்னார்-யாழ்ப்பாணம் வழித்தடத்திற்கு டி.ரவிந்திரகுமார்,
- மன்னார்-வவுனியா வழித்தடத்திற்கு எஸ்.ஏ.டென்சில் குரூஸ்,
- மன்னார்-கற்பிட்டி வழித்தடத்திற்கு ஏ.ஓ.நியாஸ்
ஆகியோர் பகுதித்தலைவர்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இதனிடையே உள்ளுர் சேவைகளான...
- மன்னார்-தலைமன்னார் வழித்தடத்திற்கு எல்.லோறன்ஸ்,
- மன்னார்-பேசாலை வழித்தடத்திற்கு எம்.மகேந்திரன்,
- மன்னார்-தாழ்வுபாடு வழித்தடத்திற்கு எம்.வாகேசன்,
- மன்னார்-வட்டக்கண்டல் வழித்தடத்திற்கு டி.சதானந்தன்
- மன்னார்-வங்காளை வழித்தடத்திற்கு ஆர்.அலன்றோஸ்,
- மன்னார்-நானாட்டான் முத்தரிப்புத்துறை வழித்தடத்திற்கு ஆர்.கைலாசமூர்த்தி,
- மன்னார்-காக்கையன்குளம்-விளாத்திக்குளம் வழித்தடத்திற்கு எஸ்.எம்.ராபிக் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றனர்.
மன்னார் மாவட்ட தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கத்தில் பதிவு செய்யப்பட்ட நிலையில் பொது போக்குவரத்து சேவையில் ஈடுபடும் பேரூந்துகள் தொடர்பில் பயணிகள் தமது கருத்துக்களை மேற்குறிப்பிட்ட வழித்தடங்களுக்கு பொறுப்பானவர்களின் கவனத்திற்கு தெரிவிக்க முடியும்.
அதேவேளை மன்னார் தனியார் பேரூந்து நிலையத்தில் அமைந்திருக்கும் அலுவலகத்தில் நேரடியாகவும், அங்கு வைக்கப்பட்டிருக்கும் கருத்துப் பெடிட்டியில் கடிதங்கள் மூலமாகவும் பயணிகள் தமது கருத்துக்களை முன்வைக்க முடியும் என நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
மன்னார் மாவட்ட தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கத்தின் புதிய நிர்வாகத்தின் நடவடிக்ககைகள் ஆரம்பம்!
Reviewed by NEWMANNAR
on
February 02, 2016
Rating:
Reviewed by NEWMANNAR
on
February 02, 2016
Rating:

No comments:
Post a Comment