காணாமல்போனோருக்கு என்ன நடந்தது? ....
காணாமல் போனவர்களின் உண்மையான நிலைமை தொடர் பில் புதிய அரசாங்கம் பாராளுமன்றத்தில் தெளிவான அறிக்கை யொன்றை சமர்ப்பிக்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பி. செல்வம் அடைக்கலநாதன் நேற்று பாராளுமன்றத்தில் கோரிக்கை விடுத்தார்.
படையின-ரிடம் ஒப்படைக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு என்ன நடந்தது என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
வடக்கு கிழக்கில் காணாமல் போனவர்களுக்கு மரணச் சான்றிதழ்கள் வழங்குவது தொடர்பில் ஐ.தே.கட்சி எம்.பி. புத்திக பத்திரண பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை முன்வைத்த தனிநபர் பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே செல்வம் அடைக்கலநாதன் எம்.பி. இவ்வாறு தெரிவித்தார்.
சபையில் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
வடக்கு கிழக்கில் காணாமல் போனவர்கள் வெள்ளை வான்களில் கடத்தப்பட்டவர்கள்.
கண்முன்னே போரிலே காணாமல் போனவர்கள் பெற்றோர், உறவினர்களால் படையினரிடம் கையளிக்கப்பட்டு காணாமல் போனவர்கள் போன்றவர்களின் நிலை என்னவென்பதை ஆராய வேண்டும்.
இரகசிய முகாம்கள் மற்றும் காணாமல் போனவர்கள் தொடர்பில் புதிய அரசுக்கு விடயங்கள் தெரிந்திருக்கும். இதேவேளை இது தொடர்பாக விசாரிப்பதற்கு நியமிக்கப்பட்ட பரணகம ஆணைக்குழு காணாமல் போனவர்ககளுக்கு மரணச் சான்றிதழும் ரூபா ஒரு இலட்சமும் வழங்கப்படும் என்று தெரிவித்திருந்தது.
விசாரணைகள் முடிவு பெறுவதற்கு முன்பதாக மேற்கண்டவாறு எவ்வாறு தெரிவிக்க முடியும். கடந்த ஆட்சியில் தமிழ் மக்கள் கொடுமைகளை அனுபவித்தனர்.
புலிகளுடன் இருந்தோர் கையளிக்கப்பட்டனர். அவர்களுக்கு என்ன நடந்தன. புதிய அரசாங்கம் இவ்விடயங்களில் தெரிந்திருக்க வேண்டும்.
அத்தோடு காணாமல் போனவர்கள் அனைவரும் இறந்திருக்கலாம் என பிரதமர் தெரிவித்திருந்தார். இது பொறுப்பற்ற கருத்தாகும். எனவே காணாமல் போனவர்களின் நிலை என்ன என்பது தொடர்பில் தெளிவான அறிக்கையொன்றை அரசு பாராளுமன்றத்தில் வெளியிட வேண்டும் என்றார்.
காணாமல்போனோருக்கு என்ன நடந்தது? ....
Reviewed by Author
on
February 13, 2016
Rating:
Reviewed by Author
on
February 13, 2016
Rating:


No comments:
Post a Comment