அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் நானாட்டான் மோட்டக்கடை அ. த. க பாடசாலையின் இல்ல விளையாட்டுப்போட்டி.(படங்கள் இணைப்பு)

நானாட்டான் மோட்டக்கடை அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் வருடாந்த இல்ல விளையாட்டுப்போட்டி நேற்று செவ்வாய்க்கிழமை மாலை பாடசாலையின் அதிபர் எஸ்.ஏ.பிரகலாதன் தலைமையில் பாடசாலை மைதானத்தில் இடம் பெற்றது.

குறித்த இல்ல விளையாட்டுப்போட்டிக்கு பிரதம விருந்தினராக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்,பாராளுமன்ற குழுக்களின் பிரதி அவைத்தலைவருமான செல்வம் அடைக்கலநாதன்,விசேட விருந்தினராக மன்னார் வலயக் கல்விப்பணிப்பாளர் திருமதி எஸ்.எஸ்.செபஸ்தியான்,மற்றும் கௌரவ விருந்தினர்களாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம்,நானாட்டான் பிரதேசச் செயலாளர் எஸ்.பரமதாஸன்,உற்பட மதத்தலைவர்கள்,உடற்பயிற்சி ஆசிரியர்கள்,வலயக் கல்வித்திணைக்கள அதிகாரிகள் என பலர் இடம் பெற்றது.

இதன் போது இடம் பெற்ற  நிகழ்வுகளின் போது விபுலானந்தர் இல்லம் 347 புள்ளிகளைப்பெற்று முதலாம் இடத்தையும்,நாவலர் இல்லம் 300 புள்ளிகளைப்பெற்று இரண்டாம் இடத்தையும் பெற்றுக்கொண்டது.

இந்த நிலையில் பெற்றி பெற்ற மாணவர்களுக்கு கலந்து கொண்ட விருந்தினர்கள் பரிசில்கள்,சான்னிறல்கள் மற்றும் வெற்றிக்கிண்ணம் ஆகியவற்றை வழங்கி வைத்தனர்.
நானாட்டான் மோட்டக்கடை அரசினர் தமிழ் கலவன் பாடசாலை எவ்வித அடிப்படை வசதிகளும் இன்றி குறைந்த ஆசிரியர்களை கொண்டு கல்வி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

தரம் 1 முதல் தரம் 11 வரையிலான வகுப்புக்கள் குறித்த பாடசாலையில் இடம் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.









































மன்னார் நானாட்டான் மோட்டக்கடை அ. த. க பாடசாலையின் இல்ல விளையாட்டுப்போட்டி.(படங்கள் இணைப்பு) Reviewed by Author on February 03, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.