முதல் முறையாக அவுஸ்திரேலியாவிற்கு நவீன ரயில் பெட்டிகளை அனுப்பிய இந்தியா!
முதல் முறையாக அவுஸ்திரேலிய நாட்டுக்கு நவீன ரயில் பெட்டிகளை அனுப்பி இந்தியா சாதனை படைத்துள்ளது.
'மேக் இன் இந்தியா' திட்டத்தின் கீழ் பரோடாவில் உள்ள ரயில் பெட்டி தயாரிப்பு முனையத்தில் இந்த பெட்டிகள் தயாரிக்கப்பட்டன.
சுமார் 46 டன் எடையும் 75 அடி நீளமும் கொண்ட இது போன்ற 6 பெட்டிகள் நேற்று மும்பை துறைமுகத்தில் இருந்து அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
அடிலெய்ட் மெட்ரோ ரயில் திட்டத்துக்கு இந்த பெட்டிகள் பயன்படுத்தப்படவுள்ளன. இது போன்று இன்னும் 450 பெட்டிகள் அவுஸ்திரேலியாவுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.
அவுஸ்திரேலியாவில் மெட்ரோ ரயில் திட்டங்களை செயல்படுத்தி வரும் கனடா நாட்டை சேர்ந்த நிறுவனம் 2.7 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு ஒப்பந்தம் அளித்துள்ளது.
அது மட்டுமல்ல, வழக்கமாக பிரேசிலில் இருந்து ரயில் பெட்டிகள் வரவழைக்கப்படும் நிலையில் பிரேசில் நாட்டுக்கு 521 ரயில் பெட்டிகளை அனுப்ப இந்தியாவுக்கு ஒப்பந்தம் கிடைத்துள்ளது.
முதல் முறையாக அவுஸ்திரேலிய நாட்டுக்கு நவீன ரயில் பெட்டிகளை அனுப்பி இந்தியா சாதனை படைத்துள்ளது.
பிரேசிலின் மிகப் பெரிய நகரான சாபோலோ மெட்ரே ரயில் திட்டத்துக்காக இந்த நவீன ரயில் பெட்டிகள் அனுப்பப்படவுள்ளது.
முதல் முறையாக அவுஸ்திரேலியாவிற்கு நவீன ரயில் பெட்டிகளை அனுப்பிய இந்தியா!
Reviewed by Author
on
February 01, 2016
Rating:
Reviewed by Author
on
February 01, 2016
Rating:



No comments:
Post a Comment