அண்மைய செய்திகள்

recent
-

அரசியல் சீர் திருத்தம் தொடர்பாக மன்னார் மக்களிடம் கருத்தறியும் நிகழ்வு-படங்கள்


புதிய அரசியல் அமைப்பு உருவாக்கத்திற்காக நாடாளாவிய ரீதியில் இடம் பெற்று வந்த கருத்தறியும் விசேட அமர்வுகள் இன்று புதன் கிழமை (10) மன்னாரில் ஆரம்பமாகியது.

-மன்னார் மாவட்டச் செயலகத்தின் ஜெய்க்கா மண்டபத்தில் குறித்த விசேட அமர்வு இடம் பெற்று வருகின்றது.

புதிய அரசாங்கம் தற்போது புதிய அரசியலமைப்பு சீர்திருத்தம் ஒன்றினை கொண்டு வர நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், அது குறித்து மக்களின் கருத்துக்களை அறியும் வகையில் குழு நியமிக்கப்பட்டு மாவட்ட மட்டத்தில் கருத்துக்கள் பெறப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு கட்டமாக வவுனியா மாவட்ட செயலகத்தில் மக்கள் கருத்தறியும் நிகழ்வு இடம்பெற்று வருகின்றது.

குறித்த குழுவைச் சேர்ந்த எஸ்.தவராசா, லால் விஜயநாயக்க,எஸ்.விஜசங்கர், ஆகியோர் மன்னார் மாவட்ட செயலகத்திற்கு வருகை தந்து மக்கள் கருத்துக்களை பெற்றுக்கொண்டதோடு மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பிரிய மேலதிக அரசாங்க அதிபர் திருமதி நந்தினி ஸ்ரான்லி டி மேல் ஆகியொரும் கலந்து கொண்டனர்.

இதன் போது மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள் இன,மத வேறுபாடுகள் இன்றி கலந்து கொண்டு கருத்துக்களை வழங்கி வருகின்றனர்.

மக்கள் கருத்தறியும் நிகழ்வு நாளை வியாழக்கிழமையும் மன்னார் மாவட்ட செயலக ஜெய்க்கா மண்டபத்தில் இடம் பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.










அரசியல் சீர் திருத்தம் தொடர்பாக மன்னார் மக்களிடம் கருத்தறியும் நிகழ்வு-படங்கள் Reviewed by NEWMANNAR on February 10, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.