மன்னார் விடத்தல்தீவு -பள்ளமடு வைத்தியசாலையில் வைத்தியர் இன்றி மூன்று தினங்களாக நோயாளர்கள் ஏமாற்றத்துடன் திரும்பியுள்ளனர்
மன்னார் மாந்தை பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட விடத்தல்தீவு -பள்ளமடு வைத்தியசாலையில் கடந்த நான்கு நாட்களாக வைத்தியர் இன்மையால் அவ் வைத்தியசாலைக்கு சிகிச்சைக்குபெற சென்ற நோயாளர்கள் ஏமாற்றத்துடன் திரும்பியதாகவும் மன்னார் சுகாதார சேவைகள் திணைக்களத்தின் அசமந்தபோக்கே இதற்கு முக்கிய காரணம் என இவ் மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இதுபற்றி தெரியவருவதாவது பள்ளமடு பகுதியில் ஒரு வைத்தியசாலை இருப்பதாகவும் அங்கு நிரந்தர வைத்தியர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இவ் வைத்தியர் கடந்த புதன் கிழமை (3) விடுமுறையில் சென்றுள்ளார். கடந்த புதன் கிழமை முதல் சனிக்கிழமை காலைவரை இவ் வைத்தியசாலைக்கு நோயாளர்கள் சிகிச்சைக்காக சென்றபோது வைத்தியர் இன்மையால் ஏமாற்றத்துடன் வீடு திரும்பியுள்ளனர்.
இதுமட்டுமல்ல கடந்த வெள்ளிக்கிழமை (5) கிளினிக் நாள் என நோயாளர்களுக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளதைத் தொடர்ந்து அதிகமான முதியோர்கள் பல சிரமங்களுக்கு மத்தியில் வைத்தியசாலைக்கு சென்றுள்ளனர்.
வைத்தியர் வருவார் என அங்கு கடமையில் இருந்தவர்கள் தெரிவித்ததைத் தொடர்ந்து பலர் பசிபடடினியுடன் காவல் இருந்ததாகவும் பின் வைத்தியர் வராமையால் ஏமாற்றத்துடன் திரும்பியதாக பாதிப்படைந்தோர் கவலையுடன் தெரிவித்தனர். ஆனால் அன்று வைத்தியர் வரவில்லையெனவும் தெரிவித்தனர்.
வாகன வசதிகள் அற்ற இப்பகுதியிலுள்ள பல நோயாளர்கள் ஓரிரு தினங்களாக ஏமாற்றத்துடன் திரும்பியது அவர்களுக்கு வேதனைகளை உருவாக்கியுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.
இவ் வைத்தியசாலையை நம்பி பள்ளமடு, கள்ளியடி, இலுப்பைக்கடவை, மூன்றாம்பிட்டி, விடத்தல்தீவு, பெரியமடு, ஈச்சலவக்கை, சன்னார், போன்ற பல கிராமமக்கள் இவ்வைத்தியசாலையை நம்பியே இருப்பதாகவும் பரந்து வாழும் இப்பகுதி கிராம மக்கள் போக்குவரத்து வசதிகள் அற்று பல மைல்கள் தொலைவிலிருந்து வருவதால் இவ் ஏமாற்றம் இவ் நோயாளர்களை மிகவும் மனசஞ்சலத்துக்கு உள்ளாக்கியுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர் மன்னார் சுகாதார சேவைகள் திணைக்களத்தின் அசமந்தபோக்கே இதற்கு காரணம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

Reviewed by NEWMANNAR
on
February 10, 2016
Rating:
Reviewed by NEWMANNAR
on
February 10, 2016
Rating:

No comments:
Post a Comment