மன்னார் நகரசபைச்செயலாளரின் கவனத்திற்கு…..மக்களின் வேண்டுகோள் !
மன்னார் அரசபேரூந்துதரிப்பிடத்திற்கு பின்பக்கமாக அமைந்துள்ள குறுக்குச்சந்துப்பாதையானது மக்களின் பிரதான பாதையாக உள்ளது. அப்பாதையூடாகப்பணயம் செய்கின்ற மக்கள் தொகை அதிகமாகவுள்ளது குறிப்பாக அப்பாதையூடாக முதியவர்கள் சிறுவர்கள் பெண்கள் தான் பயணிக்கின்றார்கள்.
இப்பாதையானது வாய்க்கால் பகுதியை மூடிய கொங்றீட் தளமாகும் கொங்றீட் மூடிகள் உடைக்கப்பட்டும் கம்பி வெளிக்கிளம்பியும் சிலவேளை கால் இடறுப்பட்டும் பலர் விழுந்து படுகாயம் அடைந்துள்ளனர். சிலமாதங்களுக்கு முன்பு இரவு வேளையில் இந்த மோசமான பாதையினால் வந்த முதியவர் ஒருவர் கால் இடறி விழுந்து தலையில் அடிபட்டு அந்த இடத்திலேயே இறந்துபோனார் .இப்படியான அபாயமுள்ள பாதையினால் தான் தினமும் பலர் பயணம் செய்கின்றார்கள்.
பலமுறை பலர் விழுந்து கால் கை முறிந்து படுகாயம் அடைந்திருக்கின்றார்கள் அத்தோடு இவ்விடத்தில் குப்பைமேடும் உள்ளதுடன் மலசலகூடமும் உள்ளது இவ்விடத்ததை நல்ல முறையில் துப்பரவு செய்து செப்பணிட்டு இரவுநேரத்தில் மின்சாரவிளக்கினையும் பொருத்தி மக்களின் பாதுகாப்பான பயணத்திற்கு உதவுமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
மன்னார் நகரசபைச்செயலாளரின் கவனத்திற்கு…..மக்களின் வேண்டுகோள் !
 
        Reviewed by Author
        on 
        
February 01, 2016
 
        Rating: 
      

No comments:
Post a Comment