மன்னாரில் மதுபானம் அருந்திய ஒருவரை பாதுகாப்பு உத்தியோகத்தர் கழிவு நீர் வடிகானினுள் .....
மன்னாரில் மதுபானம் அருந்திய ஒருவரை பாதுகாப்பு உத்தியோகத்தர் கழிவு நீர் வடிகானினுள் தூக்கிப்போட்ட சம்பவம் அப்பகுதியால் சென்றவர்களை வேதனைக்குள்ளாக்கியுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில்,
மக்கள் அதிகமாக வாழ்ந்து வரும் மன்னார் பெரிய கடை கிராமத்தில் மது விற்பனை நிலையம் ஒன்று அமைந்துள்ளது.
குறித்த மது விற்பனை நிலையத்தை அகற்றக்கோரி அக்கிராம மக்கள் தொடர்ச்சியாக பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தும் இது வரை பலன் எதுவும் இல்லை.
இதனால் அப்பகுதியில் உள்ள பாடசாலை மாணவர்கள்,பெண்கள் என அனைவரும் நாளாந்தம் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று மாலை மதுப்பிரியர் ஒருவர் குறித்த மது விற்பனை நிலையத்திற்குச் சென்று மதுபானத்தை வேண்டி அவ்விடத்திலேயே அருந்தி விட்டு மதுபான சாலை பிரதான வீதியில் படுத்துக்கிடந்துள்ளார்.
இதன் போது குறித்த மது விற்பனை நிலையம் அமைந்துள்ள வீட்டின் உரிமையாளரும்,மது விற்பனை நிலையத்தின் பதுகாப்பு உத்தியோகஸ்தரும் இணைந்து வீதியில் மது போதையில் படுத்துக்கிடந்த நபரை தூக்கி அருகில் உள்ள கழிவு நீர் வடிகானினுள் போட்டுள்ளனர்.
குறித்த சம்பவத்தை பலர் நேரில் பார்த்து தமது எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். பின் அப்பகுதியூடாக வந்த மக்கள் குறித்த நபரை வடிகானில் இருந்து தூக்கி வெளியே எடுத்தனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக அப்பகுதியில் சென்றவர்கள் குறித்த மது விற்பனை நிலையம் அமைந்துள்ள வீட்டின் உரிமையாளரும், மது விற்பனை நிலையத்தின் பதுகாப்பு உத்தியோகஸ்தரும் இணைந்து மேற்கொண்ட குறித்த நடவடிக்கையை கண்டித்துள்ளனர்.
மன்னாரில் மதுபானம் அருந்திய ஒருவரை பாதுகாப்பு உத்தியோகத்தர் கழிவு நீர் வடிகானினுள் .....
Reviewed by Author
on
February 26, 2016
Rating:

No comments:
Post a Comment