அண்மைய செய்திகள்

recent
-

சுவிஸில் அகதிகள் வேலை வாய்ப்பு பெறுவது எப்படி?: விரிவாக விளக்கும் நிறுவனங்கள்...


சுவிட்சர்லாந்து நாட்டில் வேலை வாய்ப்பு பெறுவதற்கு கடும் போட்டி நிலவி வரும் சூழலில், அகதிகள் மற்றும் புலம்பெயர்ந்தவர்கள் எவ்வாறு பணியில் அமர்வது என்பது குறித்து அந்நாட்டு நிறுவன இயக்குனர்கள் விரிவாக விளக்கம் அளித்துள்ளனர்.
சுவிஸில் கடந்த சில ஆண்டுகளாக வேலையின்மையின் விகிதம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், வெளிநாட்டினர்களை பணிக்கு தெரிவு செய்வது இறங்கு முகத்தையே சந்தித்து வந்துள்ளது.

2016ம் ஆண்டு தொடங்கியபோது, சுவிஸின் முக்கிய நிறுவனங்கள் பணியிடங்களை குறைக்க தொடங்கியதும், வேலையின்மையின் வீழ்ச்சி கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 3.8 சதவிகிதம் வீழ்ச்சி அடைந்தது.

இந்த வேலையின்மை வீழ்ச்சிக்கு வெளிநாட்டினர்களே அதிகம் பாதிக்கப்பட்டனர்.

அதாவது, பணி இல்லாமல் வேலை வாய்ப்பு நிறுவனங்களில் சுவிஸ் குடிமக்கள் 25 சதவிகித்த்தினர் வெளிநாட்டினர்கள் 48 சதவிகிதமும் பதிவு செய்துள்ளனர்.

இவ்வாறு ஒரு சூழல் நிலவி வந்தாலும், வெளிநாட்டினர்களை பணியில் அமர்த்தவும் பல நிறுவனங்கள் முயன்று வருகின்றன.

சுவிஸின் மிகபெரிய நிறுவனம் ஒன்றின் இயக்குனரான Charles Franier என்பவர் கூறியபோது, ‘சுவிஸில் ஒரு வெளிநாட்டினர் வேலை தேடுவது என்பது ஒரு மிகப்பெரிய சவாலாக தான் இருக்கும்.

ஒரு சுவிஸ் குடிமகனுக்கு போட்டியாக வேலையை தேட வேண்டும் என்றால், அந்த குடிமகனை விட கூடுதலான தகுதிகள் அந்த வெளிநாட்டினருக்கு இருந்தால், எளிதில் வேலையை பெற்று விடலாம்.

ஒரு பணியில் சேர வேண்டும் என்றால், அந்த பணி குறித்து A முதல் Z வரை நன்கு தெரிந்தவராக இருக்க வேண்டும். இதை தான் அனைத்து நிறுவனங்களும் எதிர்ப்பார்க்கின்றன.

அதேபோல், புலம்பெயர்ந்தவர்களுக்கு வேலை கிடைக்க வேண்டும் என்றால், பணி செய்யும் நேரம், இடம் மற்றும் ஊதியம் பற்றி எந்த கட்டுப்பாடுகளையும் வைத்துக்கொள்ளக்கூடாது.

அதாவது, ‘இந்த பகுதியில் தான் எனக்கு வேலை வேண்டும், இவ்வளவு ஊதியம் அளிக்க வேண்டும், இந்த நேரத்தில் தான் அலுவலகம் வருவேன்’ என்ற விதிமுறைகளை நிறுவனங்களுக்கு விதிப்பது சரியாக இருக்காது.

இதனை தவிர்த்துவிட்டு பணியை தொடர்ந்தால், நிறுவனங்களே புலம்பெயர்ந்தவர்களுக்கு கூடுதல் சலுகைகளை வழங்கும்.

குறிப்பாக, ஊழியரின் விருப்பத்தின் அடிப்படையில் நேரத்தை நிர்ணயம் செய்வது, வீட்டிலிருந்து வேலையை செய்வது, ஊழியர்களின் ஆரோக்கியம் தொடர்பாக காப்பீடு பெறுவது, நீண்ட நாட்களுக்கு விடுமுறை எடுப்பது உள்ளிட்ட வசதிகளை நிறுவனங்களே செய்து தரும்’ என Charles Franier விளக்கம் அளித்துள்ளார்.

சுவிஸில் அகதிகள் வேலை வாய்ப்பு பெறுவது எப்படி?: விரிவாக விளக்கும் நிறுவனங்கள்... Reviewed by Author on February 26, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.