ஆறு போல நீண்டு கிடக்கும் ‘குப்பை மூட்டைகள்’: தொற்று நோய் பரவும் அச்சத்தில் பொதுமக்கள்.....
லெபனான் நாட்டின் தலைநகரில் அரசாங்கத்தின் அலட்சியப்போக்கால் நகர் முழுவதும் குப்பை மூட்டைகள் அப்புறப்படுத்தாமல் ஆறு போல தேங்கி இருப்பதால் தொற்று நோய் பரவும் அச்சத்தில் பொதுமக்கள் பீதியில் ஆழ்ந்துள்ளனர்.
மத்திய கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான லெபனானின் தலைநகரான பெய்ரூட்டில் தான் இந்த அவலநிலை நீடித்து வருகிறது.
தலைநகரின் வளர்ச்சி பணிகளுக்காக குப்பைகளை சுத்திகரிக்கும் பகுதியை அரசு கடந்த யூலை மாதம் தற்காலிகமாக மூடியது.
ஆனால், இதற்கு மாற்று இடத்தை ஏற்பாடு செய்யாததால், பொதுமக்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட குப்பைகளை கொட்ட இடமில்லாமல் Jdeideh என்ற ஒரே பகுதியில் தொடர்ந்து கொட்டப்பட்டு வருகிறது.
பல வாரங்களாக குப்பை மூட்டைகள் தேங்கியதால், இப்பகுதியே இரு ‘வெள்ளை ஆறு’ போல காட்சியளிக்கிறது.
எனினும், இந்த குப்பை மூட்டைகளை ஒரு பிரித்தானிய நிறுவனத்தின் மூலம், அருகில் உள்ள ரஷ்யா நாட்டிற்கு கொண்டு செல்ல திட்டம் வகுக்கப்பட்டது.
ஆனால், இதற்கான சான்றுகள் ஒப்படைக்காததால் இந்த முயற்சியும் கைவிடப்பட்டு, தற்போது குப்பை மூட்டைகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
பல வாரங்களாக குப்பைகள் தேங்கி வருவதால், இப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளதாகவும் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஆறு போல நீண்டு கிடக்கும் ‘குப்பை மூட்டைகள்’: தொற்று நோய் பரவும் அச்சத்தில் பொதுமக்கள்.....
Reviewed by Author
on
February 27, 2016
Rating:

No comments:
Post a Comment