உலகின் வசீகரமான குற்றவாளி: வித்தியாசமான தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்
கனடாவின் கியூபெக் பகுதியை பிறப்பிடமாக கொண்ட பெண் குற்றவாளிக்கு அங்குள்ள நீதிமன்றம் வித்தியாசமான தீர்ப்பு வழங்கியுள்ளது.
கனடாவின் கியூபெக் பகுதியை பிறப்பிடமாக கொண்டவர் 24 வயதான Stephanie Beaudoin. சிறு வயதிலேயே திருட்டு சம்பவங்களில் இவர் ஈடுபட்டு வந்துள்ளார்.
கடந்த 2014 ஆம் ஆண்டு கனேடிய பொலிசார் இவரை கைது செய்யும் போது, வீடு புகுந்து இவர் கொள்ளை நடத்தியதின் எண்ணிக்கை 39 என வெளிப்படுத்தினர்.
ஒத்த வயதுடையை இளம் பெண்களுடன் இந்த கொள்ளைகளை நடத்தியுள்ளதும், அதன் மூலம் 41,667 பவுண்ட் பணம் மற்றும் விலைமதிப்பற்ற பொருட்களையும் சூறையாடியுள்ளனர்.
இதனிடையே இவரது பேஸ்புக் புகைப்படங்கள் உலக அளவில் இவருக்கு ரசிகர் வட்டத்தை உருவாக்கி தந்துள்ளது.
இந்த புகைப்படங்களை காணக்கிடைத்த ஒரு விளம்பர நிறுவனம் இவரை தங்களது விளம்பர படங்களில் நடிக்க ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
தற்போது வழக்கு விசாரணை முடிவுக்கு வந்த நிலையில், இவரது கோரிக்கை மற்றும் வழக்கின் தன்மையை கருத்தில் கொண்டு இவருக்கு 90 நாட்கள் தண்டனை விதித்து கனேடிய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் வார இறுதி நாட்களில் மட்டும் சிறை தண்டனை அனுபவித்தால் போதுமானது எனவும் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
உலகின் வசீகரமான குற்றவாளி: வித்தியாசமான தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்
Reviewed by Author
on
February 26, 2016
Rating:

No comments:
Post a Comment