மன்னாரில் புதிதாக மது வரி திணைக்களம்; அமைக்க அடிக்கல் நாட்டி வைப்பு.-படங்கள் இணைப்பு
மன்னார் மாவட்டத்திற்கு புதிதாக மது வரி திணைக்களம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு மன்னார் மதுவரி நிலைய பொறுப்பதிகாரி பிரதம பரிசோதகர் எஸ்.ரஞ்சன் தலைமையில் இன்று புதன் கிழமை காலை இடம் பெற்றது.
மன்னார் புகையிரத நிலைய பிரதான வீதியில் மன்னார் மது வரி திணைக்களதத்திற்கு என சொந்தமாக பெற்றுக்கொள்ளப்பட்ட காணியில் குறித்த அடிக்கல் நாட்டப்பட்டது.
-மதுவரி ஆணையாளர் நாயகத்தின் பணிப்புரைக்கு அமைவாக மது வரி ஆணையாளர்(குற்றம்) டி.மல்லவ அவர்களினால் இன்று புதன் கிழமை காலை வைபவ ரீதியாக அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது.
-குறித்த அடிக்கல் நாட்டும் நிகழ்வில் மது வரி திணைக்கள தலைமை அலுவலக அதிகாரிகள்,பரிசோதகர்கள் ,மது வரி உத்தியோகஸ்தர்கள்,முன்னாள் மதுவரி நிலைய பொறுப்பதிகாரி ரி.நந்தகுமார்,மதத்தலைவர்கள் உற்பட பலர் கலந்து கொண்டனர்.
கடந்த 75 வருடங்களின் பின் தமக்கு சொந்தமாக குறித்த மதுவரித்திணைக்களம் அமைக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
மன்னாரில் புதிதாக மது வரி திணைக்களம்; அமைக்க அடிக்கல் நாட்டி வைப்பு.-படங்கள் இணைப்பு
Reviewed by NEWMANNAR
on
February 10, 2016
Rating:

No comments:
Post a Comment