அண்மைய செய்திகள்

recent
-

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதார நடவடிக்கைகளில் மீள் குடியேற்ற அமைச்சு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.செல்வம் எம்.பி-Photo


யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள்,மற்றும் யுத்தத்தினால் இடம் பெயர்ந்த மக்களின் மீள் குடியேற்றம் மற்றும் அவர்களின் வாழ்வாதார நடவடிக்கைகளில் மீள் குடியேற்ற அமைச்சு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்,பாராளுமன்ற குழுக்களின் பிரதி அவைத்தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் வலியுறுத்தியுள்ளார்.

மீள் குடியேற்ற மற்றும்,புனர்நிர்மான அமைச்சின் செயலாளர் சிவஞானசோதிக்கும்,தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனுக்கும் இடையில் இன்று (12) வெள்ளிக்கிழமை காலை கொழும்பில் உள்ள அமைச்சின் செயலகத்தில் விசேட சந்திப்பொன்று இடம் பெற்றுள்ளது.

இதன்போதே பாராளுமன்ற உறுப்பினர் மேற்படி விடையத்தை வலியுறுத்தியுள்ளார்.

குறித்த விசேட சந்திப்பின் போது பல்வேறு வேலைத்திட்டங்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

குறிப்பாக பாதிக்கப்பட்ட மக்களுக்கான புனர்வாழ்வு,மற்றும் அவர்களுக்கான வீட்டுத்திட்டங்கள் உரிய முறையில் அமைய வேண்டும் எனவு வழியுறுத்தப்பட்டது.

அத்தோடு அந்த மக்களுக்கான நிவாரணம் குறிப்பாக இறந்தவர்களுக்கான நிதி உதவிகள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளை புனரமைப்பு செய்வதற்கான வழங்கப்படுகின்ற நிதி உதவியினை ஒரு இலட்சம் ரூபாவில் இருந்து அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்தும் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

மேலும் இடம் பெயர்ந்து இந்தியா சென்ற நிலையில் மீண்டும் தாயகம் திரும்புகின்ற போது அந்த மக்களுக்கு சொந்த காணிகள் இருந்தால் வீட்டுத்திட்டத்தினை வழங்குவதற்கும்,காணிகள் இல்லாதவர்களுக்கு காணிகளை வழங்கி வீட்டுத்திட்டத்தை பெற்றுக்கொடுத்து அந்த மக்களுக்கு 6 மாதங்களுக்கான உலர் உணவு வசதிகளையும் உடன் வழங்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டதோடு அந்த மக்களுக்கான அடையாள அட்டை மற்றும் அவர்களின் கல்வித்தகமைகளுக்கு அமைவாக அரச வேலைவாய்ப்பு மற்றும் சுய தொழில்களை வழங்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வழியுறுத்தப்பட்டது.

பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் இடம் பெயர்ந்த மக்களின் மீள் குடியேற்றம் தொடர்பாகவும் அவர்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகளையும் உடன் மேற்கொள்ள வழியுறுத்தும் வகையில் ஆக்க பூர்வமான கலந்துரையாடலாக இடம் பெற்றது.

இதன் போது இந்தியாவில் இருந்து மீண்டும் தாயகம் திரும்புகின்ற மக்களின் நலனை கருத்தில் கொண்டு அந்த மக்களின் மீள் குடியேற்றம் தொடர்பான வரைபு ஒன்றை தாம் தயாரித்துள்ளதாகவும்,மிக விரைவில் அமைச்சரவையின் ஒப்புதலில் அதனை நடை முறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை தாம் மேற்கொண்டுள்ளதாகம்,பாதீக்கப்பட்ட வடக்கு மக்களின் மீள் குடியேற்றம் மற்றும் அவர்களின் வாழ்வாதார நடவடிக்கைகளில் கூடிய கவனம் செலுத்தப்படும் என மீள் குடியேற்ற மற்றும், புனர்நிர்மான அமைச்சின் செயலாளர் சிவஞானசோதி தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதார நடவடிக்கைகளில் மீள் குடியேற்ற அமைச்சு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.செல்வம் எம்.பி-Photo Reviewed by NEWMANNAR on February 13, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.