விசுவமடுவில் கடைகள் தீக்கிரை பல இலட்சம் ரூபாய் இழப்பு
விசுவமடு நகர்ப்பகுதியில் அமைந்துள்ள கடையொன்றில் ஏற்பட்ட தீயினால் குறித்த கடை அமைந்திருந்த கடைத்தொகுதியில் உள்ளடங்கியிருந்த மூன்று கடைகள் முற்றாக எரிந்துள்ளதோடு மேலும் ஒருகடை பகு தியளவில் சேதத்திற்கும் உள்ளாகியுள்ளது.
குறித்த கடைத் தொகுதியில் அமைந்திருந்த புகைப்படக்கலையகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை 6.45 மணியள வில் உருவான தீ அத்தொகுதியில் அமைந்திருந்த பல்பொருள் விற்பனை நிலையம் மற்றும் அலுமினிய பிற்றிங் வேலைகளை மேற்கொள்ளும் கடைகளுடன் அருகிலிருந்த மற்றுமொரு கடைக்கும் பரவியதால் அக்கடைகளும் தீயில் எரிந்து நாசமாகின. புகைப்படக்கலையகத்தில் உருவான தீ மிக வேகமாகப்பரவத் தொடங்கியதும் தீயை அணைக்கும் செயற்பாட்டில் நகர்ப்பகுதி மக்கள் தீவிர மாக ஈடுபட்டனர் இருப்பினும் தீ கட்டுப்பாட்டை மீறி வேகமாகப் பரவியதால் கடைகள் முற்றாக எரிந்து நாசமாகின.
இதனால் குறித்த கடைகளின் உரிமையாளர்கள் ஒவ்வொருவரும் பல இலட்சம் ரூபா இழப்பினை எதிர்கொண்டுள்ளனர்
இதேவேளை தீ ஏற்பட்டதற்கான உறுதி யான காரணம் கண்டறியப்படாதபோதும் மின் ஒழுக்கு காரணமாகவே தீ ஏற்பட்டிரு க்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது
விசுவமடுவில் கடைகள் தீக்கிரை பல இலட்சம் ரூபாய் இழப்பு
Reviewed by NEWMANNAR
on
February 13, 2016
Rating:
Reviewed by NEWMANNAR
on
February 13, 2016
Rating:


No comments:
Post a Comment