மன்-இலுப்பைக்கடவை அ.த.க.பாடசாலை மாணவமாணவிகளுக்கான பெறுமதியான பாடசாலை ....படங்கள் இணைப்பு
மன்னார் மாவட்டத்தில் கல்விக்கான தனது சேவையினை வழங்கி வரும் துரையம்மா அன்பகமானது தனது வருடாந்த பாடசாலை கற்றல் உபகரணங்கள் கொடுப்பனவிற்காக மன்-இலுப்பைக்கடவை அ.த.க.பாடசாலை தெரிவு செய்யப்பட்ட மாணவமாணவிகளுக்கான பெறுமதியான பாடசாலை கற்றல் உபகரணங்கள் வழங்கிய நிகழ்வு 26-02-2016 காலை பாடசாலையில் நடைபெற்றது.
பாடசாலை அதிபர் ரி.கோகிலராஜ் ஆசிரியர்கள் மாணவமாணவிகள் பெற்றோர்கள் துரையம்மா உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
அதிபர் தனதுரையில் துரையம்மா அன்பகத்தின் சேவை தொடர்ந்தும் எமது பாடசாலை மாணவமாணவிகளுக்கும் ஏனைய பாடசாலை மாணவமாணவிகளுக்கும் கிடைக்கவேண்டும். கல்வியால் மட்டுமே எமது வாழ்வை நிலையானதொரு சிறந்த எதிர்காலத்தினை உருவாக்க முடியும் அதற்கு துரையம்மா அன்பகம் எமக்கு உதவி செய்வதையிட்டு பெரும் மகிழ்வடைகிறேன் என்றார்.
மன்-இலுப்பைக்கடவை அ.த.க.பாடசாலை மாணவமாணவிகளுக்கான பெறுமதியான பாடசாலை ....படங்கள் இணைப்பு
Reviewed by Author
on
February 27, 2016
Rating:

No comments:
Post a Comment