அணுசக்தி ஏவுகணைகளைப் பயன்படுத்தி எரிகற்களை தாக்கி தகர்க்க திட்டம்...
பூமிக்கு அச்சுறுத்தலாகவுள்ள எரிகற்களை விண்வெளியில் வைத்து தகர்க்கும் வகையில் தமது அணுசக்தி ஏவுகணைகளை தரமுயர்த்த ரஷ்ய விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமது கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்கக் கூடிய ஐ.சி.பி.எம். ஏவுகணைகளை மேற்படி எரிகற்களை தகர்ப்பதற்குரிய வகையில் மேம்படுத்த ரஷ்ய விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளதாக ரஷ்ய செய்தி முகவர் நிலையமான டாஸ் தெரிவிக்கிறது.
20 மீற்றரிலிருந்து 50 மீற்றர் வரையான அளவுடைய எரிகற்களை தகர்க்கக் கூடிய வகையில் ரஷ்ய ஏவுகணைகள் வலிமையூட்டப்படவுள்ளதாக அந்த செய்தி முகவர் நிலையம் கூறுகிறது.
இந்நிலையில் எதிர்வரும் 2036 ஆம் ஆண்டில் அபாயகரமான முறையில் பூமியை மிகவும் அண்மையில் கடந்து செல்லவுள்ள 99942 அபோபிஸ் விண்கல்லை இந்த ஏவுகணை மூலம் தாக்கி தகர்க்க ரஷ்ய விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும் பல மில்லியன் செலவுமிக்க மேற்படி திட்டத்தை முன்னெடுக்க ரஷ்ய விஞ்ஞானிகள் உலக நாடுகளின் அனுமதியைப் பெறுவது அவசியமாகவுள்ளது.
அணுசக்தி ஏவுகணைகளைப் பயன்படுத்தி எரிகற்களை தாக்கி தகர்க்க திட்டம்...
Reviewed by Author
on
February 16, 2016
Rating:

No comments:
Post a Comment