இளையோர் உலகக் கிண்ண அரையிறுதியில் இலங்கை....
19 வயதிற்குட்பட்டோருக்கான உலகக்கிண்ணப்போட்டியில், 35.4 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 186 ஓட்டங்களை எடுத்த இலங்கை அணி 6 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்துள்ளது.
பங்களாதேஷில் நடைபெற்றுவரும் 19 வயதிற்குட்பட்டோருக்கான உலகக்கிண்ணப்போட்டியில் மூன்றாவது காலிறுதியில் இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகள் மோதின.
நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து முதலில் துடுப்பெடுத்தாடியது. இலங்கையின் பந்து வீச்சைத் தாக்குப்பிடிக்க முடியாது தடுமாறிய இங்கிலாந்து 49.2ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 184 ஓட்டங்களைப் பெற்றது.
அவ்வணி சர்பாக ரெயிலர் 42 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக்கொண்டார். இலங்கை அணி சார்பில் வனிது ஹசரங்கா டி சில்வா 3 விக்கெட்டுக்களையும்இ பெர்னாண்டோ 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினார்கள்.
எளிதான இலக்கை நோக்கி துடுப்பெடுத்தட ஆரம்பித்த இலங்கை நிதானமாக ஆடி வெற்றியிலக்கை அடைந்தது. ஆரம்பத்துடுப்பாட்ட வீரர் அவிஷ்க பெர்னாண்டோ 95 ஓட்டங்களை எடுத்து அணியின் வெற்றியை உறுதி செய்தார்.
35.4 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 186 ஓட்டங்களை எடுத்த இலங்கை அணி 6 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்துள்ளது.
இளையோர் உலகக் கிண்ண அரையிறுதியில் இலங்கை....
Reviewed by Author
on
February 08, 2016
Rating:
Reviewed by Author
on
February 08, 2016
Rating:


No comments:
Post a Comment