அண்மைய செய்திகள்

recent
-

1.25 லட்சம் ஐ.எஸ் தீவிரவாதிகள் டுவிட்டர் கணக்குகள் நீக்கம் ...


சிரியாவில் ஐ.எஸ் தீவிரவாத அமைப்புக்கு ஆதரவாகவும், ஆட்களை சேர்க்கவும் சமூக வலைதளங்களில் பலர் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

இதை முடக்க  தீவிரவாதத்துக்கு ஆதரவாக செயல்படுவோரின் கணக்குகளை கண்காணிக்க டுவிட்டர் நிறுவனம் பல குழுக்களை அமைத்திருந்தது.

இந்தக் குழுக்கள் கடந்த 8 மாதங்களுக்கும் மேல் டுவிட்டர் கணக்குகளை பயன்படுத்துவோரை கண்காணித்து  ஐ.எஸ் தீவிரவாத அமைப்புக்கு ஆதரவாக செயல்பட்டு வந்த 1.25 லட்சம் பேருடைய கணக்குகளை டுவிட்டர் நிறுவனம் நீக்கி உள்ளது.

இதுகுறித்து டுவிட்டர் நிறுவனம் தெரிவிக்கையில், ‘‘டுவிட்டரை பிரசார தளமாக பயங்கரவாதிகள் பயன்படுத்துவதை கண்டிக்கிறோம், பயங்கரவாத அச்சுறுத்தல்களை,டுவிட்டர் மூலம் அரங்கேற்ற அனுமதிக்க மாட்டோம் என்று கூறியுள்ளது.

1.25 லட்சம் ஐ.எஸ் தீவிரவாதிகள் டுவிட்டர் கணக்குகள் நீக்கம் ... Reviewed by Author on February 08, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.