பூமிக்கு அடியில் 'மாபெரும் நிலத்தடி கடல்' இருப்பது கண்டுப்பிடிப்பு -
விண்வெளியில் இருந்து வந்த பனிக்கட்டி வால்மீன்களால் தான், பூமி கிரக்தில் நீர் ஆதாரம் உருவாகியது என்று தான் இதுநாள் வரை பெரும்பாலான புவியியலாளர்கள் நம்பிக்கொண்டு இருக்கிறார்கள்.
அந்த நம்பிக்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், பூமியின் நீர் ஆதாரம் சார்ந்த அறிய கண்டுப்பிடிப்பு ஒன்று நிகழ்த்தப்பட்டுள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த விஞ்ஞானிகள், பூமி கிரகத்தின் மேல்பரப்பு மற்றும் உட்கருவம் ஆகிய இரண்டிற்கும் மத்தியில் பரந்த அளவிலான நிலத்தடி கடல்பகுதி இருப்பதை கண்டுப்பிடித்துள்ளனர்.
அதாவது பூமிக்கு அடியில், பூமியின் மேற்ப்பரப்பில் இருப்பதை விட 3 மடங்கு அதிக அளவிலான கடல் நீர் இருப்பு உள்ளதாம்.
மேலும் கண்டுப்பிடிக்கப்பட்ட கடல் நீர் ஆனது ரிங்வுடைட் (ணூடிணஞ்தீணிணிஞீடிtஞு) என்ற கணிமத்தின் உள்ளே சிக்கி இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த கண்டுப்பிடிப்பிற்கு தலைமை பொறுப்பு வகித்தது நார்த் வெஸ்டர்ன் பல்கலைகழகத்தை (Nணிணூtடதீஞுண்tஞுணூண க்ணடிதிஞுணூண்டிtதூ) சேர்ந்த ஸ்டீவன் ஜேகப்சன் மற்றும் நியூ மெக்ஸிக்கோ பல்கலைகழகத்தை சேர்ந்த பிரான்டன் சமண்ட் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த கண்டுப்பிடிப்பின் மூலம் கடல்கள் எவ்வாறு உருவாக்கம் பெற்றன, பில்லியன் ஆண்டுகளாக கடல்கள் எவ்வாறு பரந்த அளவை பாராமரிக்கின்றன போன்ற விடயங்களை அறிந்து கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
பெரும்பாலான புவியியலாளர்கள் நீர் ஆனது விண்வெளியில் இருந்து வந்த பனிக்கட்டி வால்மீன்களால் தான் உருவாகியது என்று நம்பிக் கொண்டிருக்கின்றனர்.
ஆனால், சமீபத்திய கண்டுப்பிடிப்பானது நீர் ஆதாரமானது படிப்படியாக பூமியின் ஆழத்தில் இருந்து வெளிப்பட்டது என்பதை பரிசிலிக்கிறது.
பூகம்ப அதிர்வு அலைகளை பற்றிய ஆய்வு மேற்கொள்ளும் போது, அதிர்வலைகள் பாறைகளில் ஊடுறுவதை விட தண்ணீரில் வெவ்வேறு வேகத்தில் ஊடுருவி செல்வதும் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
பூமிக்கு அடியில் 'மாபெரும் நிலத்தடி கடல்' இருப்பது கண்டுப்பிடிப்பு -
Reviewed by Author
on
February 03, 2016
Rating:
Reviewed by Author
on
February 03, 2016
Rating:


No comments:
Post a Comment