தமிழில் தேசியகீதம்! சிங்கள கல்விமான்கள், புத்திஜீவிகள் வரவேற்பு....
சுதந்திர தின நிகழ்வில் தமிழில் தேசிய கீதம் இசைக்கப்பட்டதை சிங்கள கல்விமான்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் வரவேற்றுள்ளனர்.
காலத்துக்குத் தேவையான விடயமொன்று நடைமுறைக்கு வந்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர்கள் தமிழில் தேசிய கீதம் இசைப்பதை உண்மையான பௌத்தர் எவரும் எதிர்க்க மாட்டார்கள் என்றும் தெரிவித்தனர்.
தமிழில் தேசிய கீதம் இசைக்கப்பட்டமை தொடர்பில் சிங்கள கல்விமான்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் கருத்துத் தெரிவித்தபோது;
இது எப்போதோ இடம்பெற்றிருக்க வேண்டும் என்றும் தமிழில் தேசிய கீதம் இசைப்பதால் சிங்களவர்களுக்கு எதுவும் ஏற்படப் போவதில்லை.
எதிர்க்க வேண்டும் என்பதற்காக எல்லாவற்றையும் எதிர்ப்பதால்தான் பிரச்சினைகள் உருவாகின்றன எனவும் தெரிவித்தனர்.
சுதந்திர தின நிகழ்வில் கூட சிங்களத்தில் இசைக்கப்பட்ட சம காலத்திலேயே தமிழிலும் இசைக்கப்பட்டிருந்தால் சிறப்பாக அமைந்திருக்கும்.
அதனால் நாட்டின் மீதும் சிங்கள மக்களின் மீதும் தமிழ் மக்களின் நம்பிக்கை அதிகரிக்குமே தவிர அதில் நாம் குறைந்துவிடப் போவதில்லை என்றும் தெரிவித்தனர்.
தமிழில் தேசியகீதம்! சிங்கள கல்விமான்கள், புத்திஜீவிகள் வரவேற்பு....
Reviewed by Author
on
February 06, 2016
Rating:

No comments:
Post a Comment