அத்திலாந்திக் சமுத்திரத்திற்கு மேல் பாரிய எரிகல் வெடிப்பு
அத்திலாந்திக் சமுத்திரத்திற்கு மேலாக வளிமண்டலத்தில் பாரிய எரிகல்லொன்று வெடித்துச் சிதறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது 2013ஆம் ஆண்டு ரஷ்யாவின் செல்யபின்ஸ்க் பிராந்தியத்திற்கு மேலாக வளிமண்டலத்தில் எரிகல்லொன்று வெடித்துச் சிதறிய சம்பவத்துக்கு பின் இடம்பெறும் மிகப்பெரிய எரிகல் வெடிப்புச் சம்பவமாகக் கருதப்படுகிறது.
கடந்த 6ஆம் திகதி இடம்பெற்ற மேற்படி புதிய எரிகல் வெடிப்பு சம்பவம் தற்போதே வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இந்த எரிகல் வெடிப்பின் போது 13,000 தொன் வெடிபொருள் வெடிப்பதற்குச் சமமான சக்தி வெளிப்பட்டுள்ளது.
ரஷ்யாவில் இடம்பெற்ற எரிகல் வெடிப்பு சம்பவத்தின் போது 500,000 தொன் வெடிபொருள் வெடிப்பதற்கு சமமான சக்தி வெளியிடப்பட்டிருந்தது. இந்த சம்பவத்தில் 1,000க்கும் அதிகமானோர் காயமடைந்திருந்தனர்.
இந்நிலையில் அத்திலாந்திக் சமுத்திரத்துக்கு மேலாக இடம்பெற்ற எரிகல் வெடிப்பு சம்பவம் எவரது கவனத்தையும் கவராத வகையில் இடம்பெற்றுள்ளது.
பிரேசிலிய கடற்கரையிலிருந்து 1,000 கிலோமீற்றர் தொலைவில் சமுத்திர மேற்பரப்பிலிருந்து 30 கிலோமீற்றர் உயரத்தில் இந்த வெடிப்பு இடம்பெற்றுள்மை குறிப்பிடத்தக்கது.
அத்திலாந்திக் சமுத்திரத்திற்கு மேல் பாரிய எரிகல் வெடிப்பு
Reviewed by Author
on
February 25, 2016
Rating:

No comments:
Post a Comment