இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் அதிவேக நெடுஞ்சாலை
இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையல் அதிவேக நெடுஞ்சாலை அமைப்பது குறித்து மீளவும் பேச்சுக்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்தியாவின் ஆக்ராவிலிருந்து இலங்கையின் மாத்தறை வரையில் அதிவேகப் பாதை அமைப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தியாவின் அதி வேக நெடுஞ்சாலைகளை பெருப்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
96000 கிலோ மீற்றராக காணப்படும் இந்திய அதிவேக நெடுஞ்சாலைகளின் எண்ணிக்கையை இரண்டு லட்சம் கிலோ மீற்றராக உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என இந்திய பெருந்தெருக்கள் அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் அந்திரா மாநிலத்திலிருந்து நாக்பூர், ஹைதராபாத், பெங்களுர், கிருஸ்ணகிரி, மதுரை, தனுஸ்கோடி ஊடாக தலைமன்னார், அனுராதபுரம், தம்புள்ள, திருகோணமலை, குருணாகல், கண்டி, கொழும்பு, காலி ஊடாக மாத்தறை வரையில் அமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
எவ்வாறெனினும், இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் பாலம் அமைப்பது முதல் நெடுஞ்சாலை அமைப்பது வரையிலான பல்வேறு தகவல்கள் இந்திய தரப்பிலிருந்து அவ்வப்போது வெளியிடப்பட்டு வருகின்ற வேளையில், இலங்கை அரசாங்கத் தரப்பிலிருந்து அது குறித்து எவ்வித விடயங்களும் வெளியிடப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Reviewed by NEWMANNAR
on
February 14, 2016
Rating:
Reviewed by NEWMANNAR
on
February 14, 2016
Rating:

No comments:
Post a Comment